Monday, July 30, 2007

உணவு...........ஒரு உணர்வு!

மதுரையில் என்னதான் மீனாட்சிஅம்மன் கோவில், மஹால், தெப்பக்குளம் போன்ற கவர்ந்திழுக்கும் அம்சங்கள் இருந்தாலும், மதுரையின் தனிச்சிறப்பான மற்றொரு அம்சம்.....உணவு.

மற்ற ஊர்களில் இல்லாத சிறப்பு இங்கு மட்டும் என்ன?

சுவை....!!!!

இந்த ஒற்றை மந்திரச்சொல்லின் தாக்கத்தை உணர நீங்கள் மதுரை வரவேண்டும். சைவப்பிரியர்களே.....உங்களுக்கு மதுரையில் கிடைக்கும் உணவு வகைகள் ஏறக்குறைய மற்ற எல்லா ஊர்களிலும் கிடைப்பவைதான்......அசைவர்களே......இது ஒரு தனி உலகம்.

எனக்கு இருக்கும் பல நண்பர்கள் மதுரையில் 3 நாள் தங்கி சாப்பிடுவதற்கென்றே வருவதுண்டு.....

ஒவ்வொரு இடத்திலும் என்ன சாப்பிட வேண்டும், எந்நேரம் சாப்பிடவேண்டும் என்பதற்கான ஒரு சிறு கையேடு கீழே அளிக்கப்பட்டிருக்குறது. இதில் இருக்கும் பதார்த்தங்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கின்றதோ.......அதை "கமென்ட்" அடிக்கவும். அடுத்த பதிவுகளில் அவை படங்களோடு மேலும் விளக்கப்படும்.

இட்லி
முருகன் இட்லி கடை
குமார் மெஸ், தல்லாகுளம்.
கோனார் கடை
முதலியார் கடை, கோரிப்பாளையம்
அம்மா கடை, ஸ்காட் ரோடு
ஐயப்பா மெஸ், பெருமாள் கோவில் அருகே.

தோசை
மேற் சொன்ன அனைத்தும்

நெய் ரோஸ்ட்
ராஜெந்திரா காபி, டவுன் ஹால் ரோடு

முட்டை தோசை
குமார் மெஸ், தல்லாகுளம். (முட்டையை மாவில் கலந்து)
கோனார் கடை
அம்மா கடை, ஸ்காட் ரோடு
ஐயப்பா மெஸ், பெருமாள் கோவில் அருகே.

புரோட்டா (மதுரையின் தேசிய உணவு)
பை பாஸ் பாண்டியன்
அன்னம், மேல பெருமாள் மேஸ்திரி வீதி
சுல்த்தான், சிம்மக்கல்
அன்பகம், நெல்பேட்டை
அன்பகம், வடக்கு வெளி வீதி
ஆறுமுகம் கடை, தல்லாகுளம்.
மற்றும் பல வீட்டுக்கு பக்கத்துல இருக்கர கடைகள்.

சால்னா
பை பாஸ் பாண்டியன்
அன்னம், மேல பெருமாள் மேஸ்திரி வீதி
சுல்த்தான், சிம்மக்கல்
சரஸ்வதி மெஸ்

முட்டை புரோட்டா
அன்பகம், நெல்பேட்டை
சரஸ்வதி மெஸ்
பை பாஸ் பாண்டியன்
அன்னம், மேல பெருமாள் மேஸ்திரி வீதி
பெல் ஹோட்டல்

மட்டன் சுக்கா
அருளானந்தர் மெஸ்
ஜெயவிலாஸ் மெஸ்
அனைத்து அன்பகங்கள்
பெல் ஹோட்டல்
குமார் மெஸ்
அம்மா மெஸ்
சந்திரன் மெஸ்
கோனார் கடை
சரஸ்சதி மெஸ்

கோழி குழம்பு
சரஸ்வதி மெஸ்
பெல் ஹோட்டல்
சந்திரன் மெஸ்
குமார் மெஸ்

மட்டன் பிரியாணி
அம்சவல்லி
சுல்த்தான்
பெல் ஹோட்டல்
சந்திரன் மெஸ்
தாஜ், டவுன் ஹால் ரோடு

கோழி பிரியாணி
அம்சவல்லி
பெல் ஹோட்டல்
அம்மா மெஸ்
சந்திரன் மெஸ்
தாஜ், டவுன் ஹால் ரோடு

சிக்கன் 65
பை பாஸ் பாண்டியன்
சரஸ்வதி மெஸ்
பெல் ஹோட்டல்
குமார் மெஸ்

சில்லி சிக்கன்
குமார் மெஸ்
பெல் ஹோட்டல்
அம்சவல்லி

அயிரை மீன் கொழம்பு
சாரதா மெஸ்

சிக்கன் சுக்கா
கோனார் கடை

சிக்கன் லாலிபாப்
பெல் ஹோட்டல்

கிரில்டு சிக்கன்
பெல் ஹோட்டல்
JB, பை பாஸ்

தந்தூரி சிக்கன்
பஞ்சாபி தாபா
பெல் ஹோட்டல்
விங்ஸ் கிட்சன்

மட்டன் கறி தோசை
கோனார் கடை

முட்டை போண்டா
மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கம்

புளியோதரை/தக்காளி பொங்கல்
நாகலெட்சுமி அனெக்ஸ்
ரேவதி மெஸ்

வெள்ளைஅப்பம்
ஐயங்கார் கடை


23 Comments:

Narayanaswamy G said...

ஐயா....தருமி ஐயா.....டெல்ஃபின் என்ன சொல்றாரு பாத்தீங்களா.....

ஒருத்தர் வயித்த குளிர வெச்சதுக்கு அப்புறம்தான்.....மனச குளிர வைக்க முடியும்.....

டெல், எங்க வீட்டில கத்திரிக்கா, முருங்கக்கா போட்டு ஒரு புளிகுழம்பு வைப்பாங்க.....புளியோதரைக்கு வச்சு அடிச்சீங்கன்னா சும்மா கும்முனு இருக்கும்.....

அதே மாதிரி, பச்ச மொச்ச பயறு போட்ட மட்டன் கொழம்பு சாப்பிட்டுருக்கீகளா?

வாங்க வாங்க.......எப்பொ வரீக? நாங்க யாரயும் விருந்தாளிகளா நெனக்கிறதே கெடயாது.......எல்லாரையும் ஒண்ணு மண்ணாத்தான் நெனப்போம்.....ஒங்க வீடப்பு....

TBCD said...

ஹும்...ஹும்...ஹும்...ஹும்..... (அழுகை..)

இதெல்லாம் விட்டு பிரிஞ்சு நான் இருக்கேனே...

இப்போ இல்ல.. முன்னாடி, அன்னா பேருந்து நிலையம் அருகில் ராஜேஸ்வரி ஹொட்டல்ல சிக்கன் 65....சூப்பரா இருக்கும்...

பெல் ஹொட்டல், சிவாகாசியில இருந்து வந்தது.... 2 தடவை போனேன்.. 2 தடவையும் நல்லா இல்லை..ஒரு வேளை இப்ப மாறிட்டாங்களா தெரியல்ல..

சாலிசம்பர் said...

அன்பகம் புரோட்டா,அம்சவல்லி பிரியாணி தான் நம்ம ஃபேவரைட்.

பைபாஸ் JB காணாப்போச்சேன்னு தருமி அய்யா கவலைப்பட்டாரு.ஆனா அது இடம் மாத்தி வச்சுருக்காங்க.தெரிஞ்சதும் சொல்றேன்.

தருமி said...

அந்த பைபாஸ் பாண்டியன் எங்க'ப்பா இருக்கு? தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியலையே...

குமரன் (Kumaran) said...

கடப்பாரை. மதுரைக்காரன்னு சொல்லிக்கவே வெக்கமாவுல்ல இருக்கு. நீங்க போட்ட பட்டியல்ல முருகன் இட்லி கடை, அம்சவல்லி, நாகலெட்சும் அனெக்ஸ், ரேவதி மெஸ் - இந்தக் கடைகளுக்கு மட்டுமே போயிருக்கேன். மத்த சாப்பாட்டு கடைகளுக்குப் போனதே இல்லை. அடுத்து எப்ப மதுரைக்குப் போவேனோ? எப்ப போனாலும் இந்த பட்டியலை எடுத்துக்கிட்டு போயி முடிஞ்ச வரை எல்லா இடத்துக்கும் போய் சாப்புட்டுப் பாக்கணும்ங்க.

மாப்பிள்ளை விநாயகர் திரையரங்க முட்டை போண்டாவை ஒரு 10 வருடத்துக்கு முன்னாடி கடைசியா சாப்புட்ட நினைவு இருக்கு. :-(

வேற ஊருல தக்காளி சாதம்ன்னு சொல்லுவாங்க. மதுரையில தான் எல்லாமே பொங்கல் தான் - நீங்களும் தக்காளி பொங்கல்ன்னு போட்டிருக்கீங்களே?! :-)

Narayanaswamy G said...

குமரனய்யா....

சொளராஷ்ட்ரா இனத்து நண்பர்கள் வீட்டு சிறப்பே இந்த சித்திரான்னங்கள்தான். அவர்கள் பாஷையில் அனைத்துமே பொங்கல்தான்.

தக்காளி பொங்கல்
லெமன் பொங்கல்
வெள்ளை பொங்கல்

புளியோதரை மட்டும்தான் தனி. அந்த புளியோதரைக்கு ஸைட் டிஷ் என்ன தெரியுமா?

காரமான கெட்டி தேங்காய் சட்னியும் கொண்டைக்கடலை சுண்டலும்.

Narayanaswamy G said...

தருமி ஐயா,

பாண்டியனில் இப்போ பழய தரம் இல்லைனு சொன்னாங்க.....

ராம் அபார்ட்மென்ட்டுக்கு எதிரில்....

கீழக்கரைக்காரர் சமயல்......

2 புரோட்டா, 1 முட்டை புரொட்டா, 1 போன்லெஸ், 1 ஆஃப்பாயில். நெறஞ்சிரும்.....வயிறும் மனசும்.

குமரன் (Kumaran) said...

தம்பி நாராயணசாமி. தருமியை ஐயான்னு கூப்பிட்டா அது சரி. வாத்தியார் ஐயா அவரு. உங்களை விட ஐந்தோ ஆறோ வயது மூத்தவனான என்னை ஐயான்னு கூப்புடணுமா? வேணும்ன்னா அண்ணாச்சின்னு கூப்புட்டுக்கோங்க. :-)

கடப்பாரைன்னு பேரு வச்சுக்கிட்டதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கா?

இன்னைக்கு எங்க வீட்டுல புளியோதரை தான். நீங்க சொல்ற மாதிரி தேங்காய் சட்னியும் சுண்டலும் தான் முக்காவாசி தொட்டுக்க. எங்க வீட்டுல சின்ன வயசுல தேங்காய் சில்லு வாங்கிட்டு வந்த அதை கடிச்சிக்கிட்டே கூட புளியோதரை சாப்பிட்டிருக்கேன். இப்ப பிடிச்ச காம்பினேசன் புளியோதரையும் உப்பு கண்டமும். என் மச்சானுக்கு சாம்பார் ஊத்திச் சாப்புட்டா ரொம்பப் பிடிக்கும். :-)

நல்ல வேளையா இங்கே அமெரிக்காவுலையும் இந்த 'பொங்கல்' வகைகளை எல்லாம் செஞ்சு சாப்புட முடியுது. இல்லாட்டி ரொம்ப வாடிப் போயிடுவேன்.

அம்சவல்லி பிரியாணி எனக்கு பிடிக்கும். ஆனா எங்க மாமியார் வீட்டுல எல்லாருக்கும் டவுன் ஹால் ரோட்டுல இருக்கிற தாஜ் பிரியாணி தான் பிடிக்குது. கேட்டா அம்சவல்லி பிரியாணியும் 'பொங்கல்' மாதிரி கொள கொளன்னு இருக்காம். :-)

குமரன் (Kumaran) said...

டெல்பைன் அம்மா. சொன்னாலும் சொல்லாட்டியும் நாங்க எல்லாம் சரியான சாப்பாட்டு .....கள் தானே. :-)

சாப்பாட்டைப் பத்திப் பேசத் தொடங்குனா பேசிக்கிட்டே இருக்கலாம். சாப்புடறப்பவும் பேசிக்கிட்டே இருப்போமுல்ல. :-)

குமரன் (Kumaran) said...

சின்ன வயசுல முழுக்கோழி ரூ. 25ன்னு போட்டிருக்கிற போர்டைப் பாத்து சாப்புடணும்ன்னு ஆசை ஆசையா இருக்கும். அப்ப முடியலை. இப்ப காசு இருக்கு - சாப்புடத் தான் முடியலை. :-(

சுக்காவருவல் எங்கே நல்லா இருக்கும்ன்னு பட்டியல் போட்டிருக்கீங்க. ஆனா அங்க எங்கையுமே நான் சாப்புட்டதில்லையே?! தெற்கு மாசி வீதியில டி.எம். கோர்ட் பக்கத்துல இருக்குற ஒரு குட்டிக்கடையில தான் அடிக்கடி சுக்காவருவல் சாப்புட்டிருக்கேன்.

குமரன் (Kumaran) said...

உணவு.... ஒரு உணர்வு - சரியாத் தான் தலைப்பு கொடுத்திருக்கீங்க. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

ஆகா, இதுல ஒரு நாலஞ்சுதான் நான் சாப்பிட்ட இடங்கள்...ஆனா பலது பலர் சொல்ல கேட்டிருக்கிறேன்.....ஹிஹிஹி

சிவமுருகன் said...

இரண்டாவது படையலா? :)

கடப்பாரை சூப்பர் லிஸ்ட்.

அதுல பாருங்க அந்த தலைப்பாகட்டு பிரியாணிகடைல நன்பர்களோட சாப்பிட்ட அனுபவம், மறக்க முடியாது.

Anonymous said...

மக்கா....

என்னயும் ஆட்டைல சேத்துக்கங்கப்பு....

தல்லாகுளத்துல் குமார் மெஸ் பக்கத்துல ஆறுமுகம் கடைன்னு ஒன்னு இருக்கே அதை விட்டுட்டீங்களே...

அப்பால முன்னால கே.கே.நகர்ல ஜோதி மெஸ்னு ஒன்னு இருந்துச்சி...

மரணப்படுக்கையிலும் மறக்காத சுவைகள்....ஹி...ஹி...

ர்ர்ர்ரொம்ம உணர்ச்சி வசப்பட்றேனா.....அவ்ளோவ் சாப்ட்ருக்கேன் மதுரைல....இப்பப் போனாலும் அடையாளம் கண்டுக்கறாய்ங்கன்னா பாருங்களேன்....ஹி..ஹி...

Narayanaswamy G said...

அதான் பாஸு நம்ம ஊரு சிறப்பு.....ஆளுகள ஞாபகம் வச்சு அந்த ஸ்பெஷல் குழம்ப கொண்டு வந்து ஊத்துவாங்க......

குமரன்....கடப்பாரைனு பேர் வெச்சதுக்கு ஒண்ணும் பெரிய விஷேஷம் கெடயாது......சின்னக்குத்தூசினு ஒரு இலக்கியவாதி உண்டு, தெரியுமா? அது மாதிரி கடப்பாரை....

குமரன் (Kumaran) said...

பங்காளி,

இராம் தம்பிக்கோ தருமி ஐயாவுக்கோ மயிலை அனுப்புங்க. அப்புறம் ஜோதியில ஐக்கியம் ஆகிடலாம். :-)

தருமி said...

ஐயா மதுரையம்பதி,
மதுரக்காரரா இருந்திக்கிட்டு இங்க வந்து போய்க்கிட்டு மட்டும் இருந்தா போதுமா? எப்ப ஜோதியில ஐக்கியமாகப் போறீங்க?

பங்காளி,
நீங்களும் மதுரக்காரவியளா?

தருமி said...

என்னமோ கடப்பாரை.
அம்சவல்லி ஒரு பெருங்காய டப்பாவா ஆயிருச்சின்னுதான் நினைக்கிறேன்.
போறப்பவும் அவங்க ஸ்பெஷல் அன்னாசிப்பழ ஜூஸ் இருக்க மாட்டேங்குது........

தருமி said...

குமரன்,
என்னத்த சொல்லுங்க .. புளியோதரைக்கு தண்ணி சாம்பார் .. ம்ம்.. செம காம்பினேஷன் போங்க..

குமரன் (Kumaran) said...

தருமி ஐயா. புளியோதரை + தண்ணி சாம்பார் காம்பினேஷன் உங்களுக்குப் பிடிக்கும்ன்னு சொல்றீங்களா பிடிக்காதுன்னு சொல்றீங்களா?

சகாதேவன் said...

நான் மதுரையில் பேச்சலராக இருந்த போது அங்கு அறையில் தங்கி மேலமாசி வீதி உடுப்பிக்கெதிரே இட்லிக்கடையில் காலையில் சாப்பிடுவேன். வகை வகையாக சட்னியும் பெனிசிலின் பாட்டிலில் எண்ணையும் தருவார்கள். ரசித்து சாப்பிட்ட நாட்கள் அவை.
சகாதேவன்.

TBCD said...

என்ன சொல்லுங்க கோனார் மெஸ்ச அடிச்சிக்க இன்னைக்கும் ஆளு இல்ல..
அத பத்தி மட்டும் ஒரு பதிவே எழுதலாம்.. இது நான் நினைச்சி சும்மா சில ப்டங்கள எடுத்து வச்சேன், வச்ச இடம் தெரியாமா இப்ப தேடுறேன்...

cheena (சீனா) said...

ஆஹா ஆஹா - அனைத்து சாப்பாட்டுக் கடைகளும் தற்போது உள்ள கடைகளே !! நான் மதுரையில்
படித்த காலத்தில் புதூரில் உள்ள அண்ணாமலை ஹோட்டலில் தான் சாப்பிடுவேன் - அருமையான் ருசி
இம்ப்பீரியல் திரை அரங்கு எதிரில் ஒரே ஒரு மதுரைக்கு மட்டும் சொந்தமான ஜிகர்தண்டா கடை இருக்கும் - அதில் ஜிகர்தண்டா குடிப்பேன். அந்த சுகங்கள் இப்போது மதுரையில் இருக்கிறதா - தெரியவில்லை.

1972ம் ஆண்டு மார்ச்சுத்திங்கள் 10ம் நாள் இரவு 7 மணி முதல் 10 மணி வரை சிந்தாமணி திரையரங்கு அருகில் இருந்த அம்சவல்லியில் நண்பர்கள் எட்டுப்பேருடன் நவக்கிரகங்களாக விருந்துண்ட நினைவு இன்னும் மனதில் பசுமரத்தாணி போல் நெஞ்சை விட்டகலாதிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அதே தினத்தில் மீண்டும் அதே இடத்தில் ஒன்று கூட வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கலைந்ததும் நினைவில் நிற்கிறது. 37 ஆண்டுகளாக அந்த உறுதி மொழி நிறைவேறாமலேயே நிற்கிறது. நவக்கிரகங்களும் நவ திசைகளில் சென்று அவ்வப்போது தனித்தனியாக சந்தித்தாலும் அந்த தினத்தில் அந்த இடத்தில் இன்னும் சந்திக்க வில்லை.