Monday, July 30, 2007

முதல் படையல் ...

16 Comments:

Narayanaswamy G said...

கலர் போட்டா கடிக்லியா நைனா?

நாமக்கல் சிபி said...

ஐ! வாழ்த்துக்கள்!

குமரன் (Kumaran) said...

இந்தப்புகைப்படம் இரண்டு தகவல்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது.

1. மதுரை அம்மன் கோவில் கோபுரங்களிலேயே உயரமான தெற்கு கோபுரம் இது.

2. இடப்பக்கம் நிழலுருவாய் சிலை உருவில் இருக்கிறாரே அந்த பாண்டிய அரசன் தான் முதன் முதலில் கடம்பவனக் காட்டில் இருந்த சொக்கலிங்கத்தைக் கண்டு முதல் கோவில் எழுப்பியவர். இது புராணம் சொல்லும் செய்தி. வரலாற்றுப் பூர்வமாக முதலில் கோவில் கட்டியவர் யார் என்று தெரியாது. ஆனால் பாண்டியர்கள், நாயக்கர்கள், என்று மதுரையை ஆண்ட மன்னர்கள் பலரும் அவர்களின் அமைச்சர்கள், தளபதிகள், ஊரில் வாழ்ந்த செல்வந்தர்கள் என்று பலரும் கோவிலை விரிவுபடுத்திக் கொண்டே சென்றிருக்கிறார்கள்.

தருமி said...

குமரன்,
இது பாண்டிய மன்னனா..? எனக்குச் சொன்னவர்கள் திருமலை நாயக்கர் என்று சொன்னார்களே ..

தருமி said...

//கலர் போட்டா கடிக்லியா நைனா?

போட்டுருவோம் .. இதுக்காகவே ஒரு கோவில் விசிட் திட்டம் இருக்குல்ல...

குமரன் (Kumaran) said...

இது பாண்டிய மன்னரின் சிலை தான் தருமி ஐயா. குலசேகர பாண்டியன் என்று பெயர் - என்று நினைக்கிறேன். இவருக்கு எதிரில் இன்னொருவர் சிலை இருக்கும். அவர் தான் காட்டில் சொக்கலிங்கத்தை முதன்முதலில் கண்ட வணிகர். வணிகர் வந்து சொன்ன பின்னர் பாண்டியன் வந்து பார்த்துக் கோவிலைக் கட்டினார். இருவர் பெயரும் சிலைகளின் கீழே எழுதியிருக்கும். நீங்கள் படம் பிடிக்கக் கோவிலுக்குப் போகும் போது பாருங்கள்.

திருமலை நாயக்கரின் சிலை அவரது மனைவியரின் சிலைகளுடன் வண்ணங்களுடன் அம்மன் சன்னிதி நடுச்சுற்றில் இருக்கின்றது. புது மண்டபத்திலும் அவருடைய சிலை மனைவியர் சிலைகளுடன் இருக்கின்றது என்று நினைக்கிறேன்.

சிவமுருகன் said...

மொத பதிவு சூப்பரு...

இந்த படம் தருமி சார் பதிவுல பார்த்த ஞாபகம். அவர் எடுத்த படம் என்று எண்ணுகிறேன்.

//கலர் போட்டா கடிக்லியா நைனா? //

கலர் படம் தானே போட்டுடா போச்சி.

சிவமுருகன் said...

//போட்டுருவோம் .. இதுக்காகவே ஒரு கோவில் விசிட் திட்டம் இருக்குல்ல... //

அடடா தருமிசார் ஏற்கனவே வரிசைல இருக்கீங்களா? வணக்கம். போட்ருவோம்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

தருமி & மதுரை மாநகர் மக்களுக்கு,

மதுரைக்கென்று கூட்டுப்பதிவு தொடங்கியமைக்கு நன்றி + வாழ்த்துகள்

தொடர்ந்து செயற்படுவீர்களென்று நம்புகிறேன். ஆசைப்படுகிறேன் என்றும் வைத்துக்கொள்ளலாம். ;)

சின்னச்சின்ன இடுகைகளாகப் போடாமல் கலந்து பேசி முடிவு செய்து (read do enough research) பயனுள்ள இடுகைகள் இடுவீர்களென்று எதிர்பார்க்கிறேன்.

மனதில் தோன்றியவை + விரும்பியவை என்று ஒரு சின்ன பட்டியல். சின்னதாத்தான் தொடங்கிச்சு. எப்படி இப்படி வால் போல வந்துச்சுன்னு தெரியல மக்கா.


Around Town - Beautiful Madurai
Art and Culture
Business and Economy
Daily Life - photos
Media
Music
News - Community - Current Events
Politics
Environment
Technology
Sports
Transportation
Blogging
Education
Real Estate
Work & Employment
Entertainment
Food, Dining & Restaurant reviews
Fun
Healthcare
History
Leisure & Travel
Movies
Theatre/Drama
Events
Shopping
People
Photos, Video and Podcasts
மதுரை சம்பந்தப்பட்ட சொந்த அனுபவங்கள்
விருந்தாளிகளின் அனுபவங்கள்
நீதிமன்றம் சம்பந்தப்பட்ட செய்திகள்
Podcastsனு மேல போட்டிருந்தாலும் தனியாக - மண் மணக்கும் மதுரைத்தமிழில் அவ்வப்போது பேசியும் இம்சை செய்யலாம். ;)


ஆவலுடன் + வாழ்த்துகளுடன்,
மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ÁШèÂôÀüÈ¢ ²ü¸É§Å Åó¾¢ÕìÌõ «Õ¨ÁÂ¡É Å¢¾Âí¸ÙìÌ ¾É¢Â¡¸¦Å¡Õ category ¨ÅòÐ µÃ¢Õ Åâ¸¨Ç ±Îò¾¢ðÎô À¢ÈÌ ÍðÊ ¦¸¡Îì¸Ä¡õ.

«¸ò¾¢Â÷ Â¡Ü ÌØÁò¾¢ø ÁÕòÐÅ÷ ¦ƒÂÀ¡Ã¾¢ «ö¡ «Õ¨ÁÂ¡É ÀÄ ¾¸Åø¸¨Çô ÀÄ ÅÕ¼í¸Ç¡¸ô À¸¢÷óЦ¸¡ñÎ ÅÕ¸¢È¡÷. «ÚÀиǢý ¸¨¼º¢+±ØÀиǢý ¦¾¡¼ì¸ò¾¢ø ÁШâø ÁÕòÐÅõ À¢ýÈÅ÷ «Å÷.

-Á¾¢

siva gnanamji(#18100882083107547329) said...

//அந்த சிலை பாண்டிய மன்னர்...//

மெதுவா சொல்லுங்க...அத்வானி கூட்டத்து காதில விழுந்திடப் போவுது.
அவுக அது அந்தக்கோயில 37 லட்சம்
வருஷத்திற்கு மின்பு கட்டிய
ஸ்ரீ ராமபிரான் சிலை என்பாங்க

குமரன் (Kumaran) said...

Mathy's comment in Unicode:

மதுரையைப்பற்றி ஏற்கனவே வந்திருக்கும் அருமையான விதயங்களுக்கு தனியாகவொரு category வைத்து ஓரிரு வரிகளை எடுத்திட்டுப் பிறகு சுட்டி கொடுக்கலாம்.

அகத்தியர் யாகூ குழுமத்தில் மருத்துவர் ஜெயபாரதி அய்யா அருமையான பல தகவல்களைப் பல வருடங்களாகப் பகிர்ந்துகொண்டு வருகிறார். அறுபதுகளின் கடைசி+எழுபதுகளின் தொடக்கத்தில் மதுரையில் மருத்துவம் பயின்றவர் அவர்.

-மதி

இராம்/Raam said...

//மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

தருமி & மதுரை மாநகர் மக்களுக்கு,

மதுரைக்கென்று கூட்டுப்பதிவு தொடங்கியமைக்கு நன்றி + வாழ்த்துகள்

தொடர்ந்து செயற்படுவீர்களென்று நம்புகிறேன். ஆசைப்படுகிறேன் என்றும் வைத்துக்கொள்ளலாம். ;)//


மதி'க்கா,

வாங்க வாங்க.... வாழ்த்துக்களுக்கு நன்றி.....

தமிழ்மணத்தில் இணைந்ததும் வரும் முதல் பின்னூட்டம் உங்களுடயதுதான்...... :))

// சின்னச்சின்ன இடுகைகளாகப் போடாமல் கலந்து பேசி முடிவு செய்து (read do enough research) பயனுள்ள இடுகைகள் இடுவீர்களென்று எதிர்பார்க்கிறேன்.

மனதில் தோன்றியவை + விரும்பியவை என்று ஒரு சின்ன பட்டியல். சின்னதாத்தான் தொடங்கிச்சு. எப்படி இப்படி வால் போல வந்துச்சுன்னு தெரியல மக்கா.
//

இப்போதான் மருதக்காரங்களா எல்லாத்தையும் ஒன்னாக் கூடி இருக்கோம்..... நீங்க சொன்னாமாதிரி கூடி எழுதிறாலாம்... :)

//
Around Town - Beautiful Madurai
Art and Culture
Business and Economy
Daily Life - photos
Media
Music
News - Community - Current Events
Politics
Environment
Technology
Sports
Transportation
Blogging
Education
Real Estate
Work & Employment
Entertainment
Food, Dining & Restaurant reviews
Fun
Healthcare
History
Leisure & Travel
Movies
Theatre/Drama
Events
Shopping
People
Photos, Video and Podcasts
மதுரை சம்பந்தப்பட்ட சொந்த அனுபவங்கள்
விருந்தாளிகளின் அனுபவங்கள்
நீதிமன்றம் சம்பந்தப்பட்ட செய்திகள்
Podcastsனு மேல போட்டிருந்தாலும் தனியாக - மண் மணக்கும் மதுரைத்தமிழில் அவ்வப்போது பேசியும் இம்சை செய்யலாம். ;)//


அட இவ்வளவு'ல்லாம் இருக்கா எழுத.... :))

G.Ragavan said...

அழகான புகைப்படம். நல்ல படையல்தான்.

// தருமி said...
குமரன்,
இது பாண்டிய மன்னனா..? எனக்குச் சொன்னவர்கள் திருமலை நாயக்கர் என்று சொன்னார்களே .. //

தருமி ஐயா, திருமலை நாயக்கர் செலையெல்லாம் பாத்தா வயிறு பெருசா இருக்கும். இந்தச் சிலைல அப்படித் தெரியலையே

இராம்/Raam said...

//மதுரையைப்பற்றி ஏற்கனவே வந்திருக்கும் அருமையான விதயங்களுக்கு தனியாகவொரு category வைத்து ஓரிரு வரிகளை எடுத்திட்டுப் பிறகு சுட்டி கொடுக்கலாம்.

அகத்தியர் யாகூ குழுமத்தில் மருத்துவர் ஜெயபாரதி அய்யா அருமையான பல தகவல்களைப் பல வருடங்களாகப் பகிர்ந்துகொண்டு வருகிறார். அறுபதுகளின் கடைசி+எழுபதுகளின் தொடக்கத்தில் மதுரையில் மருத்துவம் பயின்றவர் அவர்.

-மதி///

மதி,

TSCII'லே டைப் பண்ணிங்க போலே???

தகவல் பகிர்மைக்கு மிக்க நன்றி....

Anonymous said...

மதுரைக்கென தொடங்கப்பட்டிருக்கும் தனி வலைத்தளம்.

http://www.maduraiweb.com/

இதில் இடப்படவேண்டிய கட்டுரைகள் இன்னும் ஐம்பத்தாறு இருக்கின்றன.
திருவிளையாடல் புராணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு உரைநடைச்சுருக்கமும்
இதில் இடம் பெறும்.
பாண்டிநாட்டு/மதுரை/பாண்டியர்கள்/நாயக்கர்கள் வரலாறும் கட்டுரைகள்
வடிவில் இடம் பெறும்.