Thursday, August 9, 2007

தல புராணம் - 1

தல புராணம் அப்டிங்கிற தலைப்பில எங்க ஊரு மதுரையென்னும் ‘பெரிய கிராமத்தில′ உள்ள எனக்குத் தெரிஞ்ச சில இடங்களைப் பத்தி எழுத ஆசை. அதில் இது முதல்…

Image and video hosting by TinyPic

இந்தக் கட்டிடத்தைப் பார்க்கும்போது இது ஒருகாலத்தில் மதுரையின் மையமாக,V.V.I.P.கள் யார் வந்தாலும் தங்கற ஹோட்டல் இதுதான்னு சொன்னா நம்பமுடியுதா? மதுரை மேல மாசி வீதியில் இருக்கிற இந்த இடத்த நான் சின்ன பையனாக இருந்தப்போ பாத்திருக்கேன். ஜே..ஜேன்னு இருக்கும். அந்தக் காலத்தில் ரோட்டில ரொம்ப ஒண்ணும் கார்கள் போய்ட்டு வந்திட்டு இருக்காது. ஆனா நான் பாத்த நேரங்களில் எல்லாம் இந்தக் கட்டிடம் முன்னால நிறைய கார்கள் எப்போதும் நிக்கும். ஆட்கள் நிறைய அந்த லாட்ஜ் முன்னால நின்னாங்கன்னா யாரோ நடிக, நடிகையர்கள் வந்திருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம். ‘மாடர்ன் லாட்ஜ்’ன்னு பேரு. எல்லா அரசியல் தலைவர்கள், மற்ற முக்கிய புள்ளிகள் வந்தால் இங்கேதான் தங்குவாங்க.

இந்த லாட்ஜ் எங்க இருக்குன்னு இப்ப தமிழ்நாட்ல இருக்கிற எல்லாருக்கும் ஈசியா அடையாளம் சொல்லிடலாம். ரெண்டு மூணு வருசத்துக்கு முந்தி சுப்பிரமணி சாமி தலையிட்டு அடிதடி நடத்தி, பூட்டியிருந்த ஒரு இட்லிகடையை உடச்சி எல்லாம் திறந்தாரே - ‘முருகன் இட்லிக் கடை’ , ஒரு இன்டர்நேஷனல் லெவல்லுக்கு கொண்டு போக முயற்சி செய்து, ஸ்டேட் லெவலோட முடிஞ்சிதே - அந்தக் கடை ஏறக்குறைய இதற்கு எதிர்த்தாற்போல் இருக்குது.அந்தக் காலத்தில தலைவர் காமராஜர் வரும்போது இங்க தங்கினாலும், இந்த லாட்ஜில் இரவு சாப்பிடுவதை விடவும், இதிலிருந்து ஒரு 100 மீட்டர் கூட இருக்காது ஒரு பத்துக்கு பத்து கடை ஒண்ணு இருக்கும். செளராஷ்ட்ர குடும்பம் நடத்தின இட்லி கடை ஒண்ணு உண்டு. கடையில் மேஜை, நாற்காலி அப்படியெல்லாம் ஒண்ணும் இருக்காது. எல்லாம் தரையில உக்காந்துதான் சாப்பிடணும்; அநேகமா எல்லாரும் பார்சல் வாங்கிட்டு போறவங்களாதான் இருக்கும். இட்லிக்கு சட்னி, சாம்பார், பொடி அது இதுன்னு என்னென்னமோ இருக்கும். இட்லியைப் பொறுத்தவரை இட்லி, எண்ணெய் இட்லி, நெய் இட்லி அப்டின்னு அந்த இட்லிகளுக்கு மேல ஊத்திக்கிற விஷயங்கள் மாறி தரத்தை உயர்த்தும். இந்தக் கடையில் இருந்துதான் காமராஜருக்கு இட்லி போகும்னு சொல்லுவாங்க. மல்லி(கை)ப்பூ இட்லின்னே பேரு.

எப்படி இருந்த இடம் இப்படி ஆகிப்போச்சுன்னு பாத்தீங்களா? இந்த லாட்ஜின் மவுசு போனபிறகு இன்னொரு லாட்ஜ் வந்திச்சி..ஆனா இந்த அளவு பெயர் இல்லை; அதுக்குப் பிறகு வந்ததுதான் ‘பாண்டியன் ஹோட்டல்’. இப்போ அப்படி நிறைய ஸ்டார் அந்தஸ்துல வந்திருச்சி…

18 Comments:

TBCD said...

இது ஒய்.எம்.சி.ஏ கட்டிடம் பக்கத்தில இருக்கிறதா..

ஜாலிஜம்பர் said...

தருமி அய்யா,
அந்த பஸ் ஸ்டாப்புக்கு பேரே இந்த லாட்ஜை வச்சு தான் வந்துருக்கா.இவ்வளவு நாளா தெரியாது.

தருமி said...

tbcd,
இல்லை .. அதுக்கு கொஞ்சம் முன்னாலேயே சைடு ரோட்ல.

இப்ப பக்கத்தில ஜெகஜோதியா ஆலுக்காஸ் நகைக்கடை வந்திருச்சி.

மதுரையம்பதி said...

அருமையான பதிவு. இதனெதிரில் ஒரு கோவிலும் (மதுரை ஸ்பெஷலாக எல்லா ரோட்டிலும் இருக்கும் தண்டு மாரியம்மன்) இருக்கும். தற்போது அந்த கோவில் இருக்கிறதாய்யா?.

Shobha said...

Ayyo inda sourashtra iddlikadai ippo yenge? Yen parents kittendu nirayave kelvipattu Madurai pogumpodu thedina no one has a clue.My parents lived there in late fifties.
SR

குமரன் (Kumaran) said...

இந்த லாட்ஜை நெறைய தடவை பாத்திருக்கேன் ஐயா. இதுக்குப் பக்கத்துல முந்தி இருந்த மாரியம்மன் கோவிலை இப்ப இடிச்சுட்டாங்கல்ல? :-( அம்மனைப் பாத்தாலே ஒரு பயபக்தி தானா வரும். பங்குனித் திருவிழா நேரத்துல கலக்குவாங்க. முருகன் இட்லி கடையும் நம்ம பேவரைட். நீங்க சொல்ற மல்லீப்பூ இட்லி கடை ஒரு வேளை மல்லி வீட்டுக்காரங்க கடையோ? :-) எனக்கு விவரம் தெரியிறப்ப அவங்க கடை இல்லைன்னு நினைக்கிறேன். அதனால என்ன தவுட்டுசந்தை, கீழவாசல், அரசமரம், முனிச்சாலை அந்தப் பக்கம் எல்லாம் போனா அந்த மாதிரி இட்லியை இப்ப சாப்பிடலாமே?!

ஜூனுல ஊருக்குப் போனப்ப மேல மாசி வீதிக்குப் போகலை. அதனால நீங்க சொல்ற அந்த ஜகஜ்ஜோதி நகைக்கடையைப் பாக்கலை. அவங்க வந்த பின்னாடி நம்ம நகைக்கடைத் தெருவுல (கான்சாமேட்டுத்தெரு, தெற்காவணி மூல வீதி) கூட்டம் குறைஞ்சிருச்சாமே?

TBCD said...

நானெல்லாம் ஏன் தான் மதுரையில இருந்தேனோ...எங்க வீடு..கரைக்கு அந்தப் பக்கம்...அன்னா நகர் பக்கம்...அதுனால டவுனுக்குள்ள கொள்ள விடயம் தெரியாது....யாரவது அந்த பக்கம்.இருக்கிறவக இருக்கீகளா....

அதுல பாருங்க..நம்ம கடப்பாரைய பேத்ததுல...அவருக்கும் எனக்கும் ஒரு பொதுவான நன்பர் (நன்பர்க்கு நன்பர்) இருக்கிறத கண்டுப்பிடிச்சோம்... அதுனால...யாரவது அந்த பக்கம்.இருக்கிறவக இருக்கீகளா....


//*தவுட்டுசந்தை, கீழவாசல், அரசமரம், முனிச்சாலை அந்தப் பக்கம் எல்லாம் போனா அந்த மாதிரி இட்லியை இப்ப சாப்பிடலாமே?!*//

கீதா சாம்பசிவம் said...

இந்த "மீள் பதிவு"க்குப் பின்னூட்டம தேவையான்னு நினைச்சேன். க்ர்ர்ர்ர்ர்ர்., பின்னூட்ட மழை பொழியுது போலிருக்கே! அந்த மாடர்ன் லாட்ஜின் பின் பக்கமாய்த் தான் கழுதை அக்கிரகாரத்தில் நாங்க இருந்த வீடு வரும். விவரம் தெரிஞ்சதுக்குப் பின் போய்ப் பார்த்திருக்கேன். :D

குமரன் (Kumaran) said...

மாடர்ன் ரெஸ்டாரெண்டுக்கும் இந்த மாடர்ன் லாட்ஜுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? கீதாம்மா கழுதை அக்ரஹாரத்தைப் பத்தி சொன்னதால மாடர்ன் ரெஸ்டாரெண்டும் நினைவுக்கு வந்தது. :-)

குமரன் (Kumaran) said...

கீதாம்மா. மீள் பதிவுன்னாலும் தருமி ஐயா 'மதுரைக்காரவுக யாராவது உண்டா இங்கே'ன்னு வலைப்பதிவுகள்ல தேடிக்கிட்டு இருந்த காலத்துல போட்டது; இப்ப திரும்பவும் மதுரைக்காரங்க நிறைய தட்டுபடறப்ப மீள்பதிவு செஞ்சதால சின்னஞ்சிறுசுங்க நாங்க எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கறோம். அதான் பின்னூட்ட மழை. :-)

ஜாலிஜம்பர் said...

//தருமி அய்யா,
அந்த பஸ் ஸ்டாப்புக்கு பேரே இந்த லாட்ஜை வச்சு தான் வந்துருக்கா.இவ்வளவு நாளா தெரியாது. //

தருமி அய்யா,அந்த பஸ் ஸ்டாப் பெயர்
T.M கோர்ட் ஸ்டாப்.நான் தவறாக குறிப்பிட்டு விட்டேன்.மாடர்ன் லாட்ஜ் ஸ்டாப் ,சிம்மக்கல் நூலகம் அருகில் உள்ளது.

TBCD-2 said...

லேசா புகையிற மாதிரி இருக்கே...சரி விடுங்க...நீங்க பதிவு போட்ட எல்லாரும் கண்டிப்பாக ஒரு பின்னூட்டம் போடனும் அப்படின்னு ஒரு தீர்மாணம் போட்றலாம்..

//*கீதா சாம்பசிவம் said...
இந்த "மீள் பதிவு"க்குப் பின்னூட்டம தேவையான்னு நினைச்சேன். க்ர்ர்ர்ர்ர்ர்., பின்னூட்ட மழை பொழியுது போலிருக்கே!*//

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அதுக்குப் பிறகு வந்ததுதான் ‘பாண்டியன் ஹோட்டல்’.//

அப்ப ராயலு சொன்ன தாஜ் ஓட்டல் பிரியாணி எல்லாம் எங்கே தருமி சார்? :-)

தருமி said...

KRS,
ராம் சொல்ற சாப்பாட்டுக் கடைகளில் பாண்டியன் ஹோட்டல் வராது.

தாஜ் ஹோட்டல் (அவர் Hill Topபற்றி சொல்லலைன்னு நினைக்கிறேன்) டவுன்ஹால் ரோட்டில் ஒரு சின்ன கடை. அந்தக் காலத்தில் கொஞ்சம் பேரோடு இருந்தது.

cheena (சீனா) said...

பாண்டியன் ஹோட்டல் பேரைக் கண்டவுடன் அமெரிக்கன் கல்லூரிப் பள்ளிக்கூடத்தில் - தல்லாகுளத்தில் படித்தது எல்லாம் நினைவுக்கு வருகிறது. 1963 - 1966 - அந்த காலகட்டத்தில் தான் பாண்டியன் ஹோட்டலுக்கு அஸ்திவாரம் போடப் பட்டு ஒவ்வொரு செங்கல்லாக உயர்ந்தது. புதூரில் இருந்து நடைப் பயணமாக கம்மாய்(தற்போதைய சர்வேயர் காலணி என நினைக்கிறேன்), கலெக்டர் பங்களா ( டி.என்.சேஷன் ??), ரிசர்வ் லைன் (மாரியம்மன் கோவில் ?? இருக்கிறதா), நத்தம் ரோடு வழியாக அவுட் போஸ்ட் வரும் போது பாண்டியன் ஹோட்டல் செங்கல் செங்கலாக உயர்ந்தது கண்டு பள்ளி சென்றது நினைவில் அலை மோதுகிறது.

மருத புல்லட் பாண்டி said...

அய்யா இப்போ அத இடுச்சிட்டாங்க
P-ல்ல ஆரம்பிக்கிற ஒரு ஜவுளிக்க்டை வரப்போகுது

மருத புல்லட் பாண்டி said...

அந்த இடம் போடி ஜமீனுக்கு சொந்தமாந்தாம் இப்போ அதை இடுச்சுபுட்டாங்க அதுல 'P' ஆரம்பிச்சு 'ஸ்' முடியும் ஒரு பெரிய ஜவுளிக்கடை வரப்போகுதாம்

பாச மலர் said...

ஆமா..இப்போ இடிச்சிட்டாங்க...நகைக் கடை வர்றதாக் கேள்விப்பட்டேன்...P...s
வரப் போகுதா?