Wednesday, January 9, 2008

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்


(1). 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?

(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?

(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?"

(நானானி said...
முதல் படைவீடு எங்கள் திருச்செந்தூர் அல்லவா? விளக்கம் தேவை.
செந்தில்முருகன் 'நாந்தேன் ஃபஸ்ட்' என்கிறார்.
டேப்பர் என்றால் 'அல்பம்' என்றும் கொள்ளலாமா?
திருப்பரங்குன்றத்தில் நீங்கள் சிரித்தது...இல்லையில்லை சொன்னது அருமை.

முருகனுக்கு உரிய படை வீடுகள் என்பது ஆறு ஆகும். படைவீடு என்பது பகைவரோடு போர் புரியும் ஒருவன் தன் படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின் பெயர் ஆகும். முருகன் தேவசேனாதிபதி அல்லவா? ஆகவே அவன் தங்கி இருந்து அருள் புரியும் இடங்கள் எல்லாம் படை வீடு என அழைக்கப் படுகிறது. இதில் இன்னொரு தத்துவமும் அடங்கி உள்ளது. மனிதனின் உடலின் உள்ளே இருக்கும் ஆறு ஆதாரங்களும் ஆறு படை வீடுகள் ஆகும். மனிதன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், தன் பஞ்ச இந்திரியங்களோடு ஏதாவது ஒரு வகையில் போராடத் தான் வேண்டி உள்ளது. அவற்றை அடக்க வேண்டி வந்ததே யோக சாஸ்திரம். யோக சாஸ்திரத்தில் உள்ள ஆறு ஆதாரங்கள் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்பதாகும். இவற்றைத் தன் வசப் படுத்தியே மனிதன் தன் வாழ்நாளின் பூர்ணத்துவத்தைப் பெற முடியும். பொருள் பெற்ற ஒருவன், தன்னை விட வறியவன் ஒருவனைக் கண்டு இன்னாரிடம் சென்றால் பொருள் பெறலாம் என்று "ஆற்று"ப் படுத்துவதை, இங்கே "ஆற்றுப் படுத்துதல்" என்பது வழிகாட்டுதல் என்னும் பொருளில் வருகிறது. ஆற்றுப் படை என்பது இறைவனிடம் இந்த முறையில் சென்றால் அவன் அருள் கிடைக்கும் என்று வழி நடத்தியதையே குறிக்கும்.

இங்கே முருகனின் ஆறுமுகங்களும் ஆறு ஆதாரங்களைக் குறிப்பதாகும். இவற்றைப் பற்றி அதிகம் விவரித்தால் பதிவின் நோக்கமே மாறி விடும். ஆகையால் விவரம் தனியாக என்னுடைய சொந்தப் பதிவில் எழுதுகிறேன் நேரம் வரும்போது. அந்த ஆறு ஆதாரங்களில் முதன்மையான மூலாதாரத்தைக் குறிப்பதே திருப்பரங்குன்றம் ஆகும். இங்கே நானானி, திருச்செந்தூர் தான் முதல் படை வீடு என்கிறார். இல்லை, இன்னும் சிலர் முதன் முதல் பழநியில் தான் அமர்ந்தார், அதனால் அதுதான் என்றும் சொல்லலாம், அதுவும் இல்லை. திருப்பரங்குன்றம் என்னும் தென்பரங்குன்றமே முதல் படை வீடு. இங்கே மலை உச்சியில் காசி விஸ்வநாதருக்கு ஒரு கோயில் உள்ளது. நக்கீரரின் உருவச்சிலையையும் பார்க்கலாம், அங்கே நின்ற கோலத்தில். இந்தக் கோயிலும் சரி, அதன் புராதனமும் சரி கிறிஸ்துவுக்கு முன்னர் கடைச்சங்க காலத்திலேயே இருந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. கீழ்க்கண்ட சங்கப் பாடல் ஆன பரிபாடலின் வரிகள் அதை உறுதி செய்யும் விதமாயும் உள்ளது.

"யாம் இரப்பது பொன்னும், பொருளும், போகமும் அல்ல. நின்பால் அருளும் அன்பும், அறனும் மூன்றும் உருள் இணர்க்கடம்பின் ஒலி தாரோயே" என்று திருப்பரங்குன்றத்து இறைவனை வேண்டுகிறார் புலவர் கடுவன் இளவெயினனார். கோயில் பழமை வாய்ந்தது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. சாதாரணமாய்க் குடவரைக் கோயில்கள் பல்லவர் காலத்தில் தான் ஆரம்பிக்கப் பட்டது என்பதை மறுக்கும் விதமாய் இந்தக் கோயில் பாண்டியர் காலத்திலேயே எழுப்பப் பட்டுள்ளது.

மற்ற ஐந்த ஆற்றுப்படைகள் ஆவன

திருச்செந்தூர் - சுவாதிட்டானம்
திருஆவினன்குடி - மணி பூரகம்
திரு ஏரகம்(சுவாமி மலை)- அநாகதம்
பழமுதிர்ச்சோலை - விசுத்தி
குன்று தோறாடல் (திருத்தணி) - ஆக்ஞை

இவைதான் திருப்பரங்குன்றம் பற்றிய நான் அறிந்த வரையில் உள்ள தகவல்கள், பல புத்தகங்கள், மற்றும் கூகிளில் இது சம்மந்தமாய் எழுதிய பல தளங்கள் அனைத்திலும் மேற்குறிப்பிட்ட தகவல்களே கிடைக்கின்றன. ஆகையால் தலபுராணங்கள் ஒரு முறையும் திருத்தப் படவில்லை. திருப்பரங்குன்றம் முதல் படை வீடாக அமைந்த காரணமும் இது தான் மூலாதாரம் என்பதே. முருகன் திரு விளையாடல்களில் முதன்மையானது (சூரனை வதம் செய்யும் முன்னரே) பிரணவப் பொருளை உரைத்ததே என்பதை அனைவரும் அறிவர். அந்தப் பிரணவ மந்திரத்தைத் தான் முறையான வழியில் அறிந்து கொள்ளாமல், இறைவன், இறைவிக்குச் சொல்லும்போது தற்செயலாய்க் கேட்க நேர்ந்தாலும், குருவின்றி பெறும் உபதேசம், பயனற்றது, என்பதை உணர்த்தவே, இங்கு வந்து இறை வடிவான மலையிலேயே தவம் இயற்றினார். ஆகவே அவர் தம் திருவிளையாடல்களில் முதன்மையான ஒன்று, ஆதாரமான ஒன்று, மூலாதாரமான ஒன்று முதல் படை வீடானது பொருத்தமே அல்லவா?

1.ஐந்து காரக்டர்களுக்கான பொதுக்கோயில் இது அல்ல. திருமணத்துக்கு வருகை புரிந்தவர்கள் இடம் பெற்றிருப்பதால் அவர்கள் முக்கியத்துவம் குறைக்காமலேயே எல்லாவித வழிபாடுகளும் நடைபெறுகிறது. இன்னும் சொல்லப் போனால் மற்றக் கோயில்களின் இறை உருவங்கள் ஃபோகஸ் செய்யப் பட்ட வெளிச்சத்தில் பிரகாசிக்க, இங்கேயோ, தீப ஒளியிலேயே குறைவின்றித் தரிசனம் செய்ய முடிகின்றது.

2.தல புராணங்கள் அனைத்தும் திருப்பித் திருப்பிக் கூறுவது ஒரே விஷயத்தையே! மாறுதல் ஏதும் செய்யப் படவில்லை. கோயில் அர்ச்சகரும் இதே தான் கூறினார்.

3.முதல் படை வீடு ஆனதுக்கு விரிவான காரணம் எழுதி விட்டேன். ஆனால் பலூன் மாமாவுக்கு இன்னும் சந்தேகம் இருக்கலாம். அவர் பதில் பார்த்து மற்றவை! படங்கள் அப்லோட் ஆகவில்லை! அதனால் போட முடியவில்லை, மறுபடி முயற்சி செய்கிறேன். :(


படம் திரு ஜீவாவின் பதிவில் இருந்து எடுக்கப் பட்டது. நன்றி ஜீவாவுக்கு!

6 Comments:

cheena (சீனா) said...

கீதா, விளக்கமான விவாதம் தொடரட்டும் - பொருள் புரிய போடப்பட்ட பதிவு. நன்று. வாழ்த்துகள்.

jeevagv said...

விளக்கங்கள் எல்லாம் நன்று மேடம், நான் படித்தவரை கடைசி இரண்டு படைக்கும் ஒப்பான சக்கரங்கள் இடம் மாறி இருக்கு!.

பாச மலர் / Paasa Malar said...

கீதா,

விளக்கங்கள் நன்று...இருந்தாலும் வரலாறுக்கு முகங்கள் அதிகம்.புத்தகங்களும், கூகிளும் முழு விபரங்கள் தரும் என்று சொல்ல முடியாது...சரி. ஆராயாமல் அனுபவிப்போம்.


//இன்னும் சொல்லப் போனால் மற்றக் கோயில்களின் இறை உருவங்கள் ஃபோகஸ் செய்யப் பட்ட வெளிச்சத்தில் பிரகாசிக்க, இங்கேயோ, தீப ஒளியிலேயே குறைவின்றித் தரிசனம் செய்ய முடிகின்றது.//

இது இக்கோவிலின் சிறப்பு.

Unknown said...

கீதா,
எனது பதிலை விரிவாக, சில நாட்கள் கழித்து எழுதுகிறேன்.

இராம்/Raam said...

:)

Unknown said...

திருப்பரங்குன்றம்- கீதாவின் பதிலுக்கான விளக்கம்
http://pathivu.madurainagar.com/2008/01/blog-post_18.html