Sunday, May 11, 2008

பரிபாடல் போற்றும் வைகை

சங்க கால இலக்கியங்களில் பல புலவர்கள் பாடித் தொகுத்த தொகுப்புகளுக்கு தொகைகள் என்று பெயர். அப்படிப்பட்ட தொகைகள் எட்டு இருக்கின்றன - அவற்றிற்கு எட்டுத் தொகை என்று பெயர். அந்த எட்டுத்தொகை நூற்களுள் ஐந்தாவது நூல் பரிபாடல். பதிமூன்று புலவர்களால் பாடப்பெற்றிருக்கும் இந்தப் பாடல்கள் நான்கு பொருட்களைப் பற்றி பாடுகின்றன.

1. செவ்வேளாகிய முருகன் (8 பாடல்கள்)
2. மாயோனாகிய திருமால் (7 பாடல்கள்)
3. கூடல்பதியாம் மதுரை (6 பாடல்கள்)
4. தமிழர்கள் பொற்கொடியாம் வைகை (11 பாடல்கள்)

இவற்றில் வைகையைப் பாடும் பாடல்கள் எண்ணிக்கையில் மிகுதியாக இருப்பதைப் பார்க்கலாம். இந்தப் பாடல்களின் மூலம் வையையில் நடந்த நீர்விளையாட்டுகளையும் வையையை ஒட்டி நடந்த பண்பாட்டு நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பாடல்களைப் படிக்கும் ஆர்வம் இருப்பவர்கள் தயங்காமல் தமிழ் இணையப் பல்கலைகழக நூலகத்தில் இருக்கும் உரையுடன் கூடிய பரிபாடல் நூலைப் படிக்கலாம். அன்றைக்கு வைகை எந்த நிலையில் இருந்திருக்கிறது என்பதையும் உய்த்து அறியலாம்.

இன்றைய வைகையின் நீர்வரத்து வான் கொடுக்கும் கொடையென்பது நமக்குத் தெரியும். அப்படி ஒரு முறை மழையின் கொடையால் வைகையில் நீர் வரத்து இருந்த நேரத்தில் திரு. ஆர். கணேசன் அவர்கள் எடுத்த நான்கு படங்களை இங்கே இடுகிறேன். இந்தப் படங்களை அனுப்பிய மதுமிதா அக்காவிற்கும் ஆர். கணேசனுக்கும் நன்றிகள்.




7 Comments:

மெளலி (மதுரையம்பதி) said...

வணக்கம் கூடல்பதியாரே...

கூடல்-ல பாரி தொடர் மாதிரி இந்த பதிவுல பரிபாடல் தொடர் ஆரம்பிச்சிங்கன்னா நல்லாயிருக்கும். செய்வீர்களா?. :)

குமரன் (Kumaran) said...

இல்லை மதுரையம்பதியாரே. இப்போதைக்கு இந்தச் சிறு குறிப்பு மட்டும் தான். விரிவாக எழுதும் எண்ணமில்லை. :-)

பாச மலர் / Paasa Malar said...

வைகையை இப்படிப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..

மாதங்கி said...

paripaadalil ariviyal seythigal pala ullana

vignani nellai su muthu enpavar oru nuulil ezuthiyullar

குமரன் (Kumaran) said...

உண்மை தான் பாசமலர் அக்கா. :-)

குமரன் (Kumaran) said...

ஆமாம் மாதங்கி. நிறைய செய்திகளை பரிபாடல் சொல்கிறது. சில பாடல்களைப் படித்திருக்கிறேன்.

கிருஷ்ண மூர்த்தி S said...

தற்கால வைகையைப்பற்றி கவிஞர் கண்ணதாசனின் இந்த வரிகளே புரியும் படி சொல்லி விடுமே!

மலைமேலே மழை விழுந்து
வைகையிலே வெள்ளம் வந்து
வயலேறிப் பாயுமுன்னே
வந்தவெள்ளம் போனது ராசா!

பரிபாடல் சொல்லும் உயர்வு நவிற்சியை நினைத்துப் பெருமூச்சுத் தான் விட முடியும்:-((