எல்லாருக்குமே பிறந்த ஊர்ப் பாசம் கட்டாயம் இருக்கும். ஆனால் என் குழந்தைகளைப் பொறுத்த வரை அவங்க "யாதும் ஊரே யாவரும் கேளிர்!" வகைதான். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட ஊரில் இருந்ததோ, படித்ததோ கிடையாது. என்ன ஊர்னு சொல்லுவோம்னு பையன் கேட்பான்! கும்பகோணம் அப்பா பக்கம்னாலும் அங்கே இருந்தது கிடையாது, அம்மா ஊர் மதுரைனாலும் அங்கே பிறந்ததோடு சரி! எப்போவாவது ஊர்ப்பக்கம் ஏதாவது உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள என்னோடு வருவதோடு சரி. அதனாலோ என்னவோ அவங்களால் எல்லா இடத்திலும் பொருந்திக் கொள்ள முடிகிறதோ என்னமோ! ஆனால் என்னால் எங்கேயும் அப்படிப்பொருந்திக் கொள்ள முடிவதில்லை. இத்தனைக்கும் திருமணத்துக்குப் பின்னர் மதுரைக்கு இரண்டு பிரசவத்துக்கும் போனதோடு சரி, அங்கே தங்கியது எல்லாம் அப்புறம் சில நாட்கள் கணக்குத் தான். இப்போ 2005-ல் ஒருமுறை மதுரை போனோம். அப்புறம் போகவே முடியவில்லை. என்றாலும் என் எழுத்தில் அதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாவே இருக்கும். காரணம் என்னால் ஊரை மறக்க முடியவில்லை. "ராயல்" மாதிரி நான் மாதம் 2 முறை போவதில்லை. தருமி மாதிரி அங்கேயே வாழவில்லை. என்றாலும் பிறந்து, வளர்ந்து, படிச்சு, கல்யாணம் செய்துகொள்ளும் வரை வாழ்ந்த ஊர். ஒவ்வொரு தெருவுக்கும் போகும்போது ஒவ்வொரு நிகழ்ச்சி நினைவுக்கு வரும்.
என் பையன், பெண், கணவர் மூன்று பேருமே இந்த விஷயத்தில் என்னைக் கேலி செய்வார்கள். மதுரைன்னு சொல்லி முடிக்கக் கூட வேண்டாம். "ம"னு ஆரம்பிக்கும் முன்னேயே அம்மா அவங்களைச் சொந்தம் கொண்டாட ஆரம்பிச்சுடுவான்னு சொல்லிட்டு இருப்பாங்க. என்னன்னு தெரியாத ஒரு பாசம் அந்த ஊர் மேல் எனக்கு. நான் அறிந்த மதுரை பத்தி எழுதச் சொல்லி "தருமி" சொல்லி இருக்கார். எங்கே ஆரம்பிக்கிறதுன்னு புரியலை. இருந்தாலும் ஏதாவது எழுதணும்னும் இருக்கு. கொஞ்சம்கொஞ்சமாக நினைவில் வைத்திருப்பவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் "ராயல்" கேட்கும்போது, மாட்டேன் என்றே சொல்லத் தோணலை. ஊர்ப் பாசம் அப்படி இழுத்துட்டு வந்து சேர்த்து விட்டது. நாங்க முதலில் நான் சின்னப் பெண்ணாக இருந்தப்போ இருந்த வீடு இருந்தது எல்லாம் திண்டுக்கல் ரோடில் இருந்து பிரியும் "மேலப் பாண்டியன் அகழித் தெரு"வில் என்று அம்மா சொல்லுவாங்க. அதை அப்போது "கழுதை அக்கிரஹாரம்" என்றும் சொல்லுவார்களாம். தற்சமயம் என்ன பெயரில் இருக்கிறதுன்னு தெரியலை. அந்த வீட்டில் இருக்கும்போதுதான் என்னோட 4-வது வயசிலெ நான் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்தேன் என்று மட்டும் அரைகுறை நினைவு இருக்கிறது.
Monday, July 30, 2007
மாமதுரை வாசம், மல்லிகைப்பூ வாசம்!
Posted by Geetha Sambasivam at 7/30/2007 11:53:00 PM 3 comments
Labels: கீதா சாம்பசிவம்
உணவு...........ஒரு உணர்வு!
மதுரையில் என்னதான் மீனாட்சிஅம்மன் கோவில், மஹால், தெப்பக்குளம் போன்ற கவர்ந்திழுக்கும் அம்சங்கள் இருந்தாலும், மதுரையின் தனிச்சிறப்பான மற்றொரு அம்சம்.....உணவு.
மற்ற ஊர்களில் இல்லாத சிறப்பு இங்கு மட்டும் என்ன?
சுவை....!!!!
இந்த ஒற்றை மந்திரச்சொல்லின் தாக்கத்தை உணர நீங்கள் மதுரை வரவேண்டும். சைவப்பிரியர்களே.....உங்களுக்கு மதுரையில் கிடைக்கும் உணவு வகைகள் ஏறக்குறைய மற்ற எல்லா ஊர்களிலும் கிடைப்பவைதான்......அசைவர்களே......இது ஒரு தனி உலகம்.
எனக்கு இருக்கும் பல நண்பர்கள் மதுரையில் 3 நாள் தங்கி சாப்பிடுவதற்கென்றே வருவதுண்டு.....
ஒவ்வொரு இடத்திலும் என்ன சாப்பிட வேண்டும், எந்நேரம் சாப்பிடவேண்டும் என்பதற்கான ஒரு சிறு கையேடு கீழே அளிக்கப்பட்டிருக்குறது. இதில் இருக்கும் பதார்த்தங்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கின்றதோ.......அதை "கமென்ட்" அடிக்கவும். அடுத்த பதிவுகளில் அவை படங்களோடு மேலும் விளக்கப்படும்.
இட்லி
முருகன் இட்லி கடை
குமார் மெஸ், தல்லாகுளம்.
கோனார் கடை
முதலியார் கடை, கோரிப்பாளையம்
அம்மா கடை, ஸ்காட் ரோடு
ஐயப்பா மெஸ், பெருமாள் கோவில் அருகே.
தோசை
மேற் சொன்ன அனைத்தும்
நெய் ரோஸ்ட்
ராஜெந்திரா காபி, டவுன் ஹால் ரோடு
முட்டை தோசை
குமார் மெஸ், தல்லாகுளம். (முட்டையை மாவில் கலந்து)
கோனார் கடை
அம்மா கடை, ஸ்காட் ரோடு
ஐயப்பா மெஸ், பெருமாள் கோவில் அருகே.
புரோட்டா (மதுரையின் தேசிய உணவு)
பை பாஸ் பாண்டியன்
அன்னம், மேல பெருமாள் மேஸ்திரி வீதி
சுல்த்தான், சிம்மக்கல்
அன்பகம், நெல்பேட்டை
அன்பகம், வடக்கு வெளி வீதி
ஆறுமுகம் கடை, தல்லாகுளம்.
மற்றும் பல வீட்டுக்கு பக்கத்துல இருக்கர கடைகள்.
சால்னா
பை பாஸ் பாண்டியன்
அன்னம், மேல பெருமாள் மேஸ்திரி வீதி
சுல்த்தான், சிம்மக்கல்
சரஸ்வதி மெஸ்
முட்டை புரோட்டா
அன்பகம், நெல்பேட்டை
சரஸ்வதி மெஸ்
பை பாஸ் பாண்டியன்
அன்னம், மேல பெருமாள் மேஸ்திரி வீதி
பெல் ஹோட்டல்
மட்டன் சுக்கா
அருளானந்தர் மெஸ்
ஜெயவிலாஸ் மெஸ்
அனைத்து அன்பகங்கள்
பெல் ஹோட்டல்
குமார் மெஸ்
அம்மா மெஸ்
சந்திரன் மெஸ்
கோனார் கடை
சரஸ்சதி மெஸ்
கோழி குழம்பு
சரஸ்வதி மெஸ்
பெல் ஹோட்டல்
சந்திரன் மெஸ்
குமார் மெஸ்
மட்டன் பிரியாணி
அம்சவல்லி
சுல்த்தான்
பெல் ஹோட்டல்
சந்திரன் மெஸ்
தாஜ், டவுன் ஹால் ரோடு
கோழி பிரியாணி
அம்சவல்லி
பெல் ஹோட்டல்
அம்மா மெஸ்
சந்திரன் மெஸ்
தாஜ், டவுன் ஹால் ரோடு
சிக்கன் 65
பை பாஸ் பாண்டியன்
சரஸ்வதி மெஸ்
பெல் ஹோட்டல்
குமார் மெஸ்
சில்லி சிக்கன்
குமார் மெஸ்
பெல் ஹோட்டல்
அம்சவல்லி
அயிரை மீன் கொழம்பு
சாரதா மெஸ்
சிக்கன் சுக்கா
கோனார் கடை
சிக்கன் லாலிபாப்
பெல் ஹோட்டல்
கிரில்டு சிக்கன்
பெல் ஹோட்டல்
JB, பை பாஸ்
தந்தூரி சிக்கன்
பஞ்சாபி தாபா
பெல் ஹோட்டல்
விங்ஸ் கிட்சன்
மட்டன் கறி தோசை
கோனார் கடை
முட்டை போண்டா
மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கம்
புளியோதரை/தக்காளி பொங்கல்
நாகலெட்சுமி அனெக்ஸ்
ரேவதி மெஸ்
வெள்ளைஅப்பம்
ஐயங்கார் கடை
Posted by Narayanaswamy G at 7/30/2007 05:27:00 PM 23 comments
Labels: நாராயணசாமி