Tuesday, August 7, 2007

மதுரக்காரன் நானே

பாத்துக்கோங்கா..

நானும் மதுரை தான்..மதுரை தான்....


பெங்களுர்- மதுரை K.P.N பஸ்

டிக்கெட் வச்சிருக்கேன் பார்துக்கோங்க


அப்படின்னு சொல்லுற நிலமைக்கு வந்துடக்கூடாதுன்னு அவசரமா இந்த பதிவு....

நான் மதுரையைச் சேர்ந்தவன் அப்படின்னு சொல்லனுமின்னா..அதுக்கும் எனக்கு உள்ள தொடர்ப சொல்லனும்...

எதையும்..விஸ்வலா சொன்னா டக்குன்னு ஒட்டிக்குன்னு...எங்க தெரு ஒச்சா கிழவி சொல்லி இருக்கு..

மதுரை ஊரின் அழகை உங்க கண் கொன்டு பார்த்தாலும் நல்லாத்தான் இருக்கும்...ஏன் சொல்ல வரேன்னா..இது காக்கைகும் தன் குஞ்சு பொன் குஞ்சு வகை இல்ல...மதுரை..சரித்திப்புகழ் பெற்ற இடம்..ஆனா சரித்திரத்தில் இடம் பெறாம்ல் போனவை..பல...

நான் அவசரமாய் வந்து திரும்பும் காலங்களில் தான் நிதானித்து கவனிக்க பல விசயங்கள் இருப்பதைப் பார்தேன்... அப்படி பார்த்த சில காட்சிகளை அவசரமாய் பதிந்து வைத்தேன்...
இது நம்ம மாரியம்மன் தெப்பக்குளம்...

இன்னைக்கு நானெல்லாம் ஒரு இஞ்சினியர் அப்படின்னு பேருக்கு பின்னாடி போடுறேன்னா ( யாரு அது ..? என்னாத்த கிழிச்ச..அத வச்சின்னு கேக்கிறது..)

அதுக்கு இந்த குளமும் ஒரு காரனம்.....(றும்...றும்....கொசுவத்தி சுத்துது..)

1995, மே மாசம், +2 முடிவுகள் எல்லாம் வெளி ஆகி விட்டது...

புரோபசன்ல துறைக்கு போகும் முடிவுகள் வந்தாகி விட்டது...மருத்துவர் ஆவான் மகன் என்று எதிர்பார்த்திருந்த அம்மாவின் கனவை சுத்தமாக மொத்தமாக உடைத்து...இஞ்சினியராது ஆவான் என்று மாறி இருந்த நேரம்

எனது மதிப்பென்னுக்கு... ஆர்.இ.சி, அன்னா பல்கலை கழகமும் போட்டி போட்டுக் கொன்டு..........போ வெளியே என்றது...

அப்பா மெதுவாக, தியாகராஜர் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, மதுரா கல்லூரி எல்லாத்துலேயும்.. வின்னப்பபாரம் வாங்கி வரச்சொன்னார்...

நான் வாங்கி இருந்த அழகு மதிப்பென்னுக்கு தியாகராஜர் கல்லூரி மட்டுமே இயற்பியல் துறையில் இடம் தந்தது...(அதுல தான் இருக்கிறதுலே கம்மி...என்னா கனக்குல் குடுத்தாங்க அப்படின்னு..இன்னவரைக்கும் தெரியல்ல..)

அப்பா... நீ காலேஜ்க்கு போய் வா, வீட்டுல சோம்பேரியா இருக்காதே .. இஞ்சினியரிங்க கிடைக்கிற வரைக்கும் அப்படின்னு சொல்லி... சேர்த்து விட்டார்..

சரி...அப்பா தான் சொல்லுறாரே...அப்படின்னு போனேன்...

முதல் நாளே அப்பா சுதியா மாத்தி பாடினார்...

இம்புருவ்மென்ட் எழுதினா என்னா ? அப்படின்னு...

எனக்கு முதல்ல இருந்தே...கப்பல் இஞ்சினியர் ஆகனும் அப்படின்னு ஆசை...

ஆனா திரும்ப +2 வா. ?.அப்படின்னு பேக் அடிச்சேன்....

ஆனா நம்ம நேரா சொன்னா நம்ம மார்க்குக்கு டின் கட்டுவாங்க அப்படின்னு..யோசிச்சு கிட்டே வந்தேன்...

முதல்..நாள்...வகுப்பு போச்சு...மதியம்..சாப்பாடு சாப்பிட....நம்ம தெப்பக்குளம் தான் இருக்கே...(மதுரை அல்லாதவர்களுக்கு...கல்லூரிக்கு நேர் எதிர் தான் இந்த குளம்..) அப்ப தன்னி இல்ல.

அங்க போய் சாப்பிட்டு...ஒரு தூக்கம்...

அடடா என்னா ஒரு இடம்..மதியான்ம் கட்டு...

இது இப்படியே...தொடர்ந்தது...15 நாளுக்கு...

அப்பாவிற்கு சந்தேகம் வந்து..விசாரித்தில்..உன்மை

வெளிவந்து...நான்...கிடைத்து கல்லூரியில படித்தது....பட்டம்
வாங்கினேன்..

நான் இந்த படிப்பை படிக்க இந்த குளமும் ஒரு வகையில் ஒர் காரனம்

இது எனக்கும் குளத்திற்கும் உள்ள தொடர்பு...

இப்போ சரித்திரதிற்கு போவோம்...

-இது வைகை ஆற்றின் கரையிலே அமைந்து உள்ளது

-இது மதுரை மீனாட்சி அம்மன் கோவில கட்ட மண் எடுக்க தோன்டப்பட்டது

-மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுனி பிள்ளையார் இங்கு கண்டு எடுக்கப்பட்டதாக கேள்வி..

-இந்த குளம் வைகை ஆற்றில் தன்னீர் நிறைந்தால் , தானே நிறையும் வன்னம் வடிகால் வைத்து கட்டப்பட்ட்து...ஆனால் இன்று..அந்த வடிகால்கள், நில ஆக்கிரமப்பில் பழுது பட்டுள்ளது..

-இந்த கோவிலின் எதிரில் உள்ள சிவன் கோவிலில் வருடத்தில் இரன்டு தினத்தில் மட்டும் சூரிய ஒளி விழ்ம்மாறு கட்டப்பட்டுள்ளது..(சிவனுக்கு உகந்த)

-இப்பொழுதும், எப்பொழதும் மதுரை மக்களுக்கு உள்ள ஒரே பீச், காதல்ர் கூடம் எல்லாமே..-இது பக்கத்திலேயே ஆடவர், பென்டிர், பள்ளிகள் இருப்பதால், காதல்ர்கள் கூடுமிடமாகவும் இருக்கின்றது..


இது போல என் வாழ்வில் பல திருப்பங்களை மதுரை அள்ளி தந்து இருக்கின்றது....அவைகளை வரும் தினங்களில் பார்க்கலாம்.... -இன்னும் அறுப்பேன்..

22 Comments:

தருமி said...

அடடே வாங்க... அப்போ நாம ரெண்டு பேரும் ஒரே இடத்தில "குப்பை" கொட்டியிருக்கோமா? நாங்க படிக்கும்போதெல்லாம் தெப்பக்குளத்தில் தரையே பார்த்ததில்லை தெரியுமா?

ம்ம்..ம்.. அதெல்லாம் அந்தக் காலம் ... ம்

TBCD said...

ஆமாம்..இந்த ஞான சம்பந்தம் ( பட்டி மன்றம் ) வந்து, டேய் நீங்கள் எல்லாம் ஆம்பிளைகளா ஸ்ட்ரைக் பன்னுங்க..அப்படின்னு உசுப்பி விடுவார்.... நீங்க படிச்ச காலத்தில..அதாவது..கி.முல எப்படி...
//*தருமி said...
அடடே வாங்க... அப்போ நாம ரெண்டு பேரும் ஒரே இடத்தில "குப்பை" கொட்டியிருக்கோமா? நாங்க படிக்கும்போதெல்லாம் தெப்பக்குளத்தில் தரையே பார்த்ததில்லை தெரியுமா?

ம்ம்..ம்.. அதெல்லாம் அந்தக் காலம் ... ம் *//

குமரன் (Kumaran) said...

ஆகா. நம்ம ஊரு தெப்பக்குளத்தைப் பத்தி நல்லா எழுதியிருக்கீங்க. வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்துக்குள்ளே ஒன்றிரண்டு தடவை தான் போயிருக்கேன். அதாவது அந்த மைய மண்டபத்துக்கு. ஒரு தடவை சின்ன வயசுல தெப்பத்திருவிழாவின் போது படகு விட்டிருந்தாங்க. அப்ப போனது. அப்புறம் ஒரு தடவை தண்ணியில்லாதப்ப நடந்து போய் அந்தப் படிக்கட்டுகள்ல எம்பி எம்பி ஏறி உள்ளே போனது. :-) ஆனால் ஊருக்கு வர்றப்ப எல்லாம் மாரியம்மன் கோவிலுக்கு மட்டும் தவறாம போயிட்டு வந்திருவேன். இந்தத் தடவை ஜூன்ல வந்தப்ப என் பொண்ணு மைய மண்டபத்துக்குப் போய்த்தீரணும்ன்னு ரொம்ப அடம்புடிச்சா. அப்புறம் போகலாம்ன்னு கூட்டிக்கிட்டு வந்துட்டேன். ம்ம்ம். என்னையும் மெழுகுவர்த்தி சுத்த வச்சிட்டீங்க.

இந்தக் குளம் அம்மன் கோவில் கட்ட மண் தோண்டிய இடம் இல்லை. திருமலை நாயக்கர் மகால் கட்டத் தோண்டிய இடம். முக்குறுணிப் பிள்ளையார் சிலை அப்போது தான் இங்கே கிடைத்தது.

அதென்னங்க ரெண்டு நாள் மட்டும் சூரிய ஒளி விழற கோவில்? மத்த நாளெல்லாம் இருட்டா இருக்குமா கோவிலுக்குள்ளார? :-) சாமி மேல அந்த ரெண்டு நாளும் சூரிய ஒளி வீசும்ன்னு சொல்றீங்களா? சரி சரி. :-)

இது வைகை ஆற்றங்கரையில அமைஞ்சிருக்குன்னு ரொம்ப நாளா எனக்குத் தெரியாது. ஒரு தடவை சின்ன வயசுல சித்திரைத் திருவிழா சமயம் அப்பா வண்டியூர் கூட்டிக்கிட்டுப் போனாரு. அப்ப தெப்பகுளம் வரைக்கும் பஸ்ஸுல கூட்டிக்கிட்டுப் போயி அப்புறம் ஆத்துல முழங்கால் அளவு தண்ணில மண் மூட்டைப் பாலத்துல கூட்டிக்கிட்டுப் போனார். அப்பத் தான் தெரியும்.

Geetha Sambasivam said...

பின்னூட்டம் கூட மதுரக்காரங்களுக்கு மட்டுமா என்ன? என்ன அநியாயம்? :P

TBCD said...

அய்யா...ஒத்துகிட்டாங்க...ஒத்துகிட்டாங்க.....நானும் மதுரை தான்..பார்த்துக்கோங்க...பார்த்துக்கோங்க...
//*கீதா சாம்பசிவம் said...
பின்னூட்டம் கூட மதுரக்காரங்களுக்கு மட்டுமா என்ன? என்ன அநியாயம்? :P *//

அப்படியா..இது நாள் வரைக்கும் நான் இத தான் நம்புனேன்...விக்கி கூட அது தான் சொல்லுது...

http://en.wikipedia.org/wiki/Meenakshi_Temple
//*திருமலை நாயக்கர் மகால் கட்டத் தோண்டிய இடம். முக்குறுணிப் பிள்ளையார் சிலை அப்போது தான் இங்கே கிடைத்தது. *//

TBCD said...

எந்த கர்பகிரகத்தில் பளீறேன்று வெளிச்சம் இருக்குதுங்க..... இருட்டா வச்சி....அப்பலே...தீப ஆராதனை பன்னி தான் சாமிய காட்டு வாங்க.....ஆனா அந்த இரன்டு நாளுமே சூரிய வெளிச்சம் பட்டு, விளக்கு இல்லமலே பாக்கலாம்...

இதுல ஒரு முக்கியாமான விசயம் என்னான்னா..சிவாஜி எல்லாம் என்னங்க பில்டப்பு...இந்த கோவிலில் காட்டுவாங்க அது தான் பெரிய பில் டப்பு...சாமிய திரை போட்டு மூடுறதும்...அந்த நேரத்துக்கு தான் காட்டுறதும்..(அதாவது கூட்டம் சேர வேன்டாமா..?)..சரி..சரி அத பத்தி அப்புறமா ஒரு பதிவு போடுறேன்...
//*அதென்னங்க ரெண்டு நாள் மட்டும் சூரிய ஒளி விழற கோவில்? மத்த நாளெல்லாம் இருட்டா இருக்குமா கோவிலுக்குள்ளார? :-) சாமி மேல அந்த ரெண்டு நாளும் சூரிய ஒளி வீசும்ன்னு சொல்றீங்களா? சரி சரி. :-) *//

குமரன் (Kumaran) said...

//Outside the Shrine, lies huge scultptures carved of single stone and there is a shrine for a giant Ganesh temple, called the Mukuruny Vinayakar. This idol is believed to have been found during an excavation process to dig the temple lake//

இங்கே கோவில் திருக்குளத்தைத் தோண்டும் போதுன்னு தான் சொல்லியிருக்காங்க TBCD. எதைக் கட்டுவதற்காகன்னு சொல்லலை பாருங்க. :-)

TBCD said...

சே புல்லரிக்குதுங்க...அப்படின்னு சொன்னா...மனுசனுக்கு புல் அரிக்காது..முதுகு அரிக்கல்லாம்ன்னு எல்லாம் விளக்கம் சொல்ல ரெடியா வராங்க....ஹி!ஹி!!!.. வாங்க..வாங்க...

குமரன் ..திருக்குளத்திற்கு தானே..மகாலுன்னு சொல்லல...அதனால..எவ்வளவு பிழைகள் இருக்கிறதோ..அதுக்கு தகுந்தவாறு பரிசை குறைத்துக் கொள்ளுங்கள்....

//* குமரன் (Kumaran) said...

இங்கே கோவில் திருக்குளத்தைத் தோண்டும் போதுன்னு தான் சொல்லியிருக்காங்க TBCD. எதைக் கட்டுவதற்காகன்னு சொல்லலை பாருங்க. :-) *//

குமரன் (Kumaran) said...

ஆமாங்க TBCD. உங்க பதிலைப் பாத்தா அப்படியே புல்லரிக்குதுங்க. :-)

சாலிசம்பர் said...

மதுரக்கார தம்பி,நாங்கள்லாம் 92லேயே காலேஜை விட்டு வெளியேறுனவய்ங்க.ஆமா,தியாகராஜர் காலேஜு தான்.தெப்பக்குள மையமண்டபத்துல கெடையா கெடந்ததெல்லாம் ஒரு காலம்.ஞாபகப்படுத்திட்டீங்க.

Geetha Sambasivam said...

@tbcd2 ? இது வேறே யாரு புதுசா?, நீங்க மதுரைன்னு தயவு செய்து வெளியே சொல்லிட்டுத் திரியாதீங்க. தீபாராதனை "பன்னி"??? கஷ்டம்! கஷ்டம்! "குறும்பி அளவாக் காதைக் குடைந்து குட்டுவதற்கோர் பிள்ளைப் பாண்டியன் இங்கில்லையே"?????:P:P:P:P

TBCD said...

போர்வைய எடுத்து போத்திக்கோங்க...மாடு மேஞ்சிரப் போகுது...

//* குமரன் (Kumaran) said...
ஆமாங்க TBCD. உங்க பதிலைப் பாத்தா அப்படியே புல்லரிக்குதுங்க. :-) *//

தருமி அய்யா..இப்படி முதுக திருப்பிகிட்டு இருந்த எப்படி... எப்ப சபைய கூட்டுறீஙக.... நம்ம பதிவ தமிழ் மணத்தில் இல்லையா...?
கொஞசம் ஜிகினா வேலை செய்யனும்....(counters,widgets etc )
மருதையின்னா அதிர வேன்டாமா....

TBCD said...

மன்னிக்கனும்...தவறு இருந்த சுட்டுங்க..திருத்திடலாம்...படிச்சதெல்லாம்..ஆங்கில வழி..அதனால கொஞ்சம் தடுமாற்றம்...போக போக சரி பன்னிக்கலாம்...( இதுல எப்படிங்க பெரிய ண வரும்...விளக்க முடியுமா...)..இப்படி எல்லாம் கேப்பீங்கனு தான்...மதுரக்காரன்னு பதிஞ்சுடேன்...இனிமே அத மாத்தனுமின்னா.....பஞ்சாயத்துல பிராது குடுக்கனும்..நேர்ல வரனும்......வசதி எப்படி...ஹி!ஹி!ஹி!

யாமே...தான் .TBCD & TBCD-2.. ...ப்ரொபைல் பாருங்க..ஒரே படம், ஒரே மேட்டர்...

MBCD அப்படின்னு தருமி அய்யா ஒன்னு சொன்னாரு.... அது காலியாத்தான் இருக்கு...சேந்துகிறீங்களா...!!!

//*கீதா சாம்பசிவம் said...
@tbcd2 ? இது வேறே யாரு புதுசா?, நீங்க மதுரைன்னு தயவு செய்து வெளியே சொல்லிட்டுத் திரியாதீங்க. *//

ஜாலி ஜம்பர் வருசத்த பார்த்ததும்..தம்பி..பரவல்ல.....மதுரகாரய்ங்க..மாதிரி..பங்குஸ், மச்சி, மாப்பிள. பாஸு, அப்படின்னு சொல்லிருந்தா...:)))))

இந்த இடம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு..தெரியாத இடம் ஒன்னு இருக்கு...ஆனா அதுக்கு படங்கள் இல்ல..அது தான் யோசிச்சிட்டு இருக்கேன்....

//* ஜாலிஜம்பர் said...
மதுரக்கார தம்பி,நாங்கள்லாம் 92லேயே காலேஜை விட்டு வெளியேறுனவய்ங்க.*//

Unknown said...

Nalla iruku ABCD, Sorry TBCD

தருமி said...

குமரன்,
//இந்தத் தடவை ஜூன்ல வந்தப்ப ...//
நற .. நற ..நற ...

//என்னையும் மெழுகுவர்த்தி சுத்த வச்சிட்டீங்க. //
துளசி டீச்சர் கோவிச்சுக்குவாங்க .. அது மெழுகுவர்த்தி இல்லை; கொசுவத்தி சுருள் .

குமரன் (Kumaran) said...

கோவிச்சுக்காதீங்க ஐயா. அடுத்த தடவை மதுரை வர்றப்ப கண்டிப்பா வந்து பாக்குறேன். முன்னாடி ஒரு தடவை சொன்னது போல அமெரிக்கன் கல்லூரியில படிச்ச நண்பனோட வர முயற்சி பண்றேன்.

அட அது கொசுவர்த்தி இல்லை?! ஏன் மெழுதுவர்த்தின்னு சொன்னேன்னு தெரியலையே? எதையோ நெனச்சுக்கிட்டே தட்டச்சு செஞ்சிருப்பேன்னு நினைக்கிறேன். :-)

TBCD said...

நன்றி..தொல்லை சாரி..நெல்லை காந்த்..
//* நெல்லை காந்த் said...
Nalla iruku ABCD, Sorry TBCD *//

இங்க என்ன நடக்குதுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா..:)))))

//*அட அது கொசுவர்த்தி இல்லை?! ஏன் மெழுதுவர்த்தின்னு சொன்னேன்னு தெரியலையே? எதையோ நெனச்சுக்கிட்டே தட்டச்சு செஞ்சிருப்பேன்னு நினைக்கிறேன். :-) *//

cheena (சீனா) said...

வணக்கம் - மதுரையப் பத்தி படிச்சதும் நான்
1963 - 1972 வரை அங்கே இருந்தது - அப்பிடியே நினை
விலே வந்து ஒரு அசை போட்டு ஆனந்தித்து பதில் எழுத
நினைத்து - ம்ம்ம்ம் - அப்புறமா வரேன் - கொஞ்ச நாள்
வேணும் - எழுதுவேன் - நிச்சயமா (இப்போ 2006லெந்து
மதுரை வாசம் தான் திரும்ப) - மதுரை மதுர தான்

cheena (சீனா) said...

வணக்கம் - மதுரையப் பத்தி படிச்சதும் நான்
1963 - 1972 வரை அங்கே இருந்தது - அப்பிடியே நினை
விலே வந்து ஒரு அசை போட்டு ஆனந்தித்து பதில் எழுத
நினைத்து - ம்ம்ம்ம் - அப்புறமா வரேன் - கொஞ்ச நாள்
வேணும் - எழுதுவேன் - நிச்சயமா (இப்போ 2006லெந்து
மதுரை வாசம் தான் திரும்ப) - மதுரை மதுர தான்

cheena (சீனா) said...

அடடே ஆகஸ்ட் 25ம் தேதியே (நான் பதிவுலகத்திற்கு வந்து மூன்றே நாளிலேயே) பின்னூட்டம் இட்டிருக்கிறேன். இப்போது பின்னூட்டம் இட வந்தால் அது கண்ணில் படுகிறது - சரி - கொஞ்ச நாள் கழித்து வருகிறேன்

பாச மலர் / Paasa Malar said...

மதுரைக் குழுமத்துல் இன்னிக்குதான் சேர்ந்தேன்..எனவே இந்தத் தாமதம்..அடடா தருமி சார், ஜாலி ஜம்பர், tcbd எல்லாரும் நம்ம தியாகராசர் கல்லூரிதானா..நானும்தான்..ஆனா உங்க 2 பேருக்குக் கொஞ்சம் சீனியர்..ஆங்கிலத்துறை...

பேராசிரியர் ரமணி சார் புண்ணியத்தில் தெப்பக்குளத்துக்குப் படகில் சென்று பார்த்த அனுபவம் இனிமை..

அதைல்லாம் ஒரு காலம்...

☼ வெயிலான் said...

எல்லாஞ்சரி!

நீங்க விருதுநகர்லேயும் படிச்சதா கேள்விப்பட்டேனே? அது எப்போ?
விருதுநகர் தெப்பக்குளம் படம் போட்டு எழுதுவீங்களா?