Saturday, November 3, 2007

மனதில் தோன்றிய எண்ணங்கள்

வணக்கம் நன்பர்களே !!
இவ்வலைப்பூவில் அன்பர்கள் யாருமே பதிவிடவில்லை. அவரவர்கள் வலைப்பூவிலே தான் இடுகிறார்கள். இதை ஆரம்பித்ததன் நோக்கம் நிறைவேற வில்லை. ஏன் ? தெரியவில்லை. பிதாமகர்கள் கவனிப்பார்களா !!

எதோ என்னுடைய ஒரு பதிவினை மீள்பதிவு செய்கிறேன். புதுப் பதிவு போட முயற்சி செய்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------
உன்னையே நீ அறிந்து கொள் !
உன்னால் முடியும் தம்பி !!
நம்மால் முடியாதது என்று ஒன்று உண்டா என்ன ??
அகந்தையா ?
நம்முடைய பலம் என்ன ?
நம்முடைய பலவீனம் என்ன ?

பலவீனத்தை பலமாக மாற்றுவது எப்படி ?
குடும்பம்-அலுவலகம்-சமுதாயம்-சந்திக்கும் மனிதர்கள் எத்தனை பேர் ?எததனை விதமான எண்ணங்கள் கொண்டவர்கள் ?
மாற்றுக் கருத்தை சந்திக்க மன வலிமை வேண்டும் !
மாற்றுக் கருத்தை சந்திக்க மறுக்காதே !
ஆய்ந்து பார்த்து முரண்படு !
நல்ல கருத்தெனில் நழுவாமல் ஏற்றுக்கொள் !
ஏற்கத் தக்கதல்ல எனில் தள்ளிப் போடு !
காலம் மாறினால் கருத்துகள் மாறும் !
காய் கனியாகும் ! அல்லது வெம்பிப் போகும் !
சுய சோதனை செய் ! சத்திய சோதனை செய் !
செய்வது எல்லாம் பயன் தரும் செயல்கள் தானா ?
நட்ட விதைகள் அனைத்தும் முளைப்பதில்லை !
அதனால் நடாமலேயே இருக்கலாமா ?
முயற்சிகள் தவறலாம் ! முயல்வது தவறலாமா ?
விரும்பியது கிடைக்க வில்லை ! கிடைத்ததை விரும்பலாமா ?
வேண்டியது வேண்டிய நேரத்தில் கிடைப்பதில்லை !
மற்ற நேரத்தில் கிடைத்தால் மறுக்கலாமா ?? வெறுக்கலாமா ?
கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !
பலனில்லாத கடமை செய்யத்தான் வேண்டுமா ?
எல்லாக் கடமைகளுக்கும் பலன் உண்டு !
நேரிடையாக மற்றும் மறை முகமாக !
நாம் இன்று மரம் நட்டால் நாளை மற்றொருவன் அனுபவிப்பான் !அதனால் மரம் நடாமலேயே இருக்கலாமா ?
நாம் அனுபவிக்கும் இன்பம் நம்மால் விளைந்ததா ?
யார் நட்ட மரத்தில் யார் பழம் சாப்பிடுவது ?
நடுவதற்கே பிறந்தவர்கள் பலர் !அனுபவிப்பதற்கே பிறந்தவர்கள் சிலர் !விழுக்காடு வித்தியாசம் பார்ப்பது அழகல்ல !
நட்டுக்கொண்டே இருப்போம் !அனுபவித்துக் கொண்டே இருப்போம் !மனம் மகிழ, பிறர் மகிழ வேண்டும் !
ஒவ்வோர் அரிசியிலும் பெயர் எழுதப் பட்டிருக்கிறதாம் !
தேட வேண்டும் ! அதுவாக வாராது !
-----------------------------------------------------------------


மனதில் எழுந்த எண்ணங்களை கிறுக்கி விட்டேன்.
தொடர்புடைய எண்ணங்களா ??
தொடர்பில்லாத எண்ணங்களா ??

தெரிய வில்லை !!!!!

சுற்றிச் சுற்றிப் பார்த்தால் தலை சுற்றும் !

-----------------------------------------------------------------



7 Comments:

cheena (சீனா) said...

சோதனையோட்டம்

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்? அப்போ அப்போ நான் வந்து "மொக்கை" போட்டுட்டுப் போறேனே? அது கணக்கிலே வரலையா? :))))))))))

தருமி said...

கொஞ்சம் தொய்வுதான். இனிமே கொஞ்சம் விறுவிறுப்பா எல்லாரும் முனைஞ்சி பதிவி போட்டுருவோம். சரியா...?

உங்களுக்கும் நம் கூட்டுப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய ஒளி நிறை திருநாளில் என் வாழ்த்துக்கள்.

தருமி said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

நன்றி தருமி. ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டும். மற்ற மதுரைக் காரர்களை அன்புடன் அழைக்கிறேன்.

செல்லி said...

நல்ல மீள் நோக்கு:-)))))

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்லி
இனிய தீப ஒளித் திரு நாள் நல் வாழ்த்துகள்