Thursday, November 29, 2007

மதுரை மீனாட்சி கோவில் சுவற்குறிப்பு குறித்தான கேள்வி

ரலாறு என்பது எழுதுபவனின் பார்வையில் சொல்லப்படும் ஒரு கடந்தகால நிகழ்வு.வரலாறு என்று சொல்லும்போதே, அது அதைப் படிப்பவனின் காலத்துக்கு முன்னாள் நடந்த சம்பவங்கள் என்றாகிவிடுகிறது. இப்படி, வரலாறு என்பது அதை வாசிப்பவனின் காலத்திற்கு முந்தைய சம்பவங்கள் என்று சொல்லும்போதே, அது குறித்த நம்பகத்தன்மை மற்றும் ஐயப்பாடுகளும் வந்துவிடும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகும் எந்த ஒரு சுயமரியாதை உள்ள மனிதனும் "எங்க ஏரியா உள்ள வராதே" என்ற தொனியில், இந்து (யார் இந்துக்கள் என்பது என்னளவில் இன்னும் புரியாத ஒன்று . அது இங்கே விளக்கப்படப்போவது இல்லை) அல்லாதோர் உள்ளே வரக்கூடாது என்று சொல்லும் அறிவிப்புப் பலகையை கண்டு வேதனைப்படவே செய்வான். கடவுளர்களை ஒரு மதத்திற்குள் கட்டிப்போடும்போதே அந்த மதம் சொல்லும் கடவுள் நாடு/இன/மத எல்லையுடைய சாதாரணமானவர்கள் என்று புரிந்துவிடும். சிவனுக்கு முருகன் என்று ஒரு பிள்ளையாண்டான் இருக்கிறார் என்பதை இந்தியாவின் வட மாநிலத்தவர்கள் கண்டுகொள்வது இல்லை. முருகனும் இதை சீரியஸாக எடுத்துக் கொள்வதும் இல்லை.

கண்ணே தெரியாதவனுக்கு அல்லாப்பிச்சையும் , பிச்சைப்பெருமாளும்,மாத்தேயுப் பிச்சையும் ஒரே நிறத்தவர்கள்தான். நாமும் அதுபோல வாழப் பழகவேண்டுமோ?

மதம்/கடவுள் நம்பிக்கைகளைத்தாண்டி, இந்தக் கோவில் ஒரு அருமையான கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்குச் சான்று. எந்த ஒரு நம்பிக்கையாளராக இருந்தாலும், தனது நாட்டில் (அ) தனது ஊரில் உள்ள ஒரு பொக்கிசத்தைக் காணக்கூடாது என்று சில கோமாளிகள் சொல்லும்போது வருத்தப்படவே செய்வான். தாஜ்மகால் பற்றி எண்ணற்ற conspiracy theory கள் இருந்தாலும், அதை நாட்டின் ஒரு கலைப் பொக்கிசமாகவே நான் கருதுகிறேன். அதைப் பார்க்க சில மதக் கட்டுப்பாடுகள் விதித்தால் எங்கே போய் முட்டிக்கொள்வது?

மீனாட்சி என்பவளை ஒரு அரசியாகத்தான் கோவில் வரலாறே சொல்கிறது. ஒரு அரசியின் கோவிலுக்கு வருபவர்களை இந்து என்று எப்படி அளக்கிறார்கள் என்று தெரியாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் எந்த மதத்தில் வருவான்?

சமீபத்தில் மீனாட்சி கோவிலுக்கு சென்ற போது மீனாட்சி சன்னிதியின் அர்த்த மண்டபத்தின் (கருவறையச் சுற்றி உள்ள வெளிப்பிரகாரம்) சுவர்களில் மீனாட்சியின் பல பருவங்கள் சுவற்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டு , அதற்குக்கீழே பெயிண்டில் விளக்கம் கொடுத்து இருப்பார்கள். அதில் ஒன்றுதான் எனது இந்தக் கட்டுரையின் காரணம்.

மீனாட்சி "சேர,சோழர்களை வென்று இமயம் முதல் குமரிவரை ஆட்சி புரிந்தாள்" என்றவாறு எழுதப்பட்டு இருந்தது. இதை யாரும் சீரியசாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. அவரவர் அவருக்கு உள்ள மனுக்களை எப்படி மீனாட்சியிடம் கொடுத்து சிபாரிசு வாங்கலாம் என்ற பரபரப்பில் இருந்தனர்.


எனது கேள்விகள்.

1.மதுரையில் மீனாட்சி ஆட்சி செய்த அதே காலத்தில் வாழ்ந்த சேர மற்றும் சோழ மன்னர்கள் யார்?

2.அந்த மன்னர்களை மீனாட்சி போர் புரிந்து வெற்றி பெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் ஏதாவது உண்டா?(சும்மா தெருவோரம் புளியமரத்தில் இருக்கும் பாம்பிடம், பரமசிவன் பல்விளக்கும் போது சொன்னார் ..என்ற ரீதியில் ஆதரங்கள் வேண்டாம். அவை கோவில் சுவற்றிலேயே உள்ளது)

3.வடக்கே மீனாட்சி வென்ற மன்னர்கள் யார்? எத்தனை நாட்கள் போர் புரிந்தார்? பயணம் செய்த இடங்கள் பற்றிய குறிப்புகள்?

4.எத்தனை காலம் மீனாட்சி இமயம் முதல் குமரை வரை நாட்டை ஆண்டார்?

5.மதுரையில் இருந்து ஆளப்பட்ட இந்தியா குறித்த வரலாற்றுக் குறிப்புகள் ஏதேனும்?

வரலாறு தெரிந்தவர்கள் சொல்லும் பதிலுக்கு இப்போதே நன்றி !!

**********

கோவிலில் பார்த்த சில கொடுமைகள்:
1. கோலம் போடுகிறேன் பேர்வழி என்று பெயிண்டால் எல்லா இடங்களி்லும் கோடுகளைப் போட்டு , வரலாற்றின் பக்கங்களில் பிழையை எழுதியுள்ளது.

2.சும்மா தேமே என்று இருக்கும் தூண்களுக்கு பித்தளைத் தகடுகளைப் போட்டு (அர்த்த மண்டபம்) வரலாற்றை சிறைசெய்து இருப்பது.

3.ஆங்காங்கே நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்சிற்பங்களை துளையிட்டு கம்பி கேட்டுகள் /தடுப்புகள் (Iron gates) போட்டு இருப்பது.

பார்த்த நல்ல விசயம்:

கற்பூரங்களுக்கு தடைவிதித்து எண்ணெய் விளக்குகளை அனுமதித்தது. புகையின் அளவு கொஞ்சமேனும் குறைய வாய்ப்பு உள்ளது.


Picture Courtesy:
www.wayfaring.info

39 Comments:

ilavanji said...

பலூன்மாமா,

உங்க கேள்விகளுக்கெல்லாம் என்னாண்ட பதில் இல்லை! ஆனா உங்களை மீண்டும் இங்க பார்க்கறதுக்கு சந்தோசமா இருக்கு! :)

இரண்டாம் சொக்கன்...! said...

நியாயமான கேள்வி...

எனக்கும் ரொம்ப வருசமாய் உருத்தின விஷயம்தான்...ஒரு வேளை வெளிநாட்டு சுற்றுலாபயணிகளை மட்டுருத்தும் பொருட்டு வைத்திருக்கிறார்களோ என திருப்தி பட்டுக்கொள்வேன்...

மற்றபடி எனக்கு தெரிந்து நிறைய கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய நண்பர்க்ள் சஹஜமாய் கோவிலுக்குள் போய் மீனாட்சியை தரிசிப்பதை அறிவேன்.....

அதிலும் எனக்கு வேதியியல் எடுத்த ஆசிரியர் மிகத் தீவிரமான கிருஸ்துவர்...அவர் வகுப்பில் எங்களிடம் மீனாட்சி எங்க ஆத்தாடா...ன்னு மார்தட்டி பேசி சந்தோஷப்படுவதை பார்த்து ஆச்சர்யப்பட்டிர்ருக்கிறேன்...

Geetha Sambasivam said...

"1. கோலம் போடுகிறேன் பேர்வழி என்று பெயிண்டால் எல்லா இடங்களி்லும் கோடுகளைப் போட்டு , வரலாற்றின் பக்கங்களில் பிழையை எழுதியுள்ளது.

2.சும்மா தேமே என்று இருக்கும் தூண்களுக்கு பித்தளைத் தகடுகளைப் போட்டு (அர்த்த மண்டபம்) வரலாற்றை சிறைசெய்து இருப்பது.

3.ஆங்காங்கே நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்சிற்பங்களை துளையிட்டு கம்பி கேட்டுகள் /தடுப்புகள் (Iron gates) போட்டு இருப்பது."

அறநிலையத்துறையிடம் கேட்க வேண்டிய கேள்விகள்!!!!!

Geetha Sambasivam said...

மற்றபடி உள்ளே கர்பகிரஹத்துக்குள் வருவதற்குத் தான் மற்ற மதத்தினருக்குத் தடை. அதுவரை கொலு மண்டபம் வரை வந்து எல்லாவற்றையும் பார்க்க முடியும், நான் அறிந்த வரை, இப்போது எப்படினு தெரியலை!!!!

தருமி said...

பலூன்மாமா,
நாம் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் நம் civic sense தொடர்பான விஷயம் ... என்று நமக்கு அந்த அறிவெல்லாம் பிறக்குமோ?
:(

வவ்வால் said...

கல்வெட்டு,

நீங்கள் சொன்ன குறைப்பாடுகள் மதுரைக்கோவிலுக்கு மட்டும் இல்லை எல்லாக்கோவிலிலும் உள்ளது, அந்த அறிவிப்பு பலகை பெரும்பாலான கோவில்களில் காணப்படுகிறது(அதன் படி எல்லாரையும் தடுப்பதும் இல்லை)

கோவில்களில் உள்ள சுற்று ச்வர்களில் பெரும்பாலும் யார் யார் என்ன அக்காலத்தில் கோயில்களுக்கு மானியம் அளித்தார்கள் , இன்ன பிற தகவல்கள் பொறிக்கப்பட்டு இருக்கும், அதன் மூலம் பலரின் காலத்தை கணிக்கலாம், ஆனால் இவர்கள் எல்லாவற்றுக்கும் சுன்னாம்பு, பெயிண்ட் என்று அடித்து மொழுகி வைத்து விடுகிறார்கள்.

சில கோயிலுக்குள்ளார கக்கூஸ் கூட கட்டி வச்சு இருக்காங்க அது அந்த அர்ச்சகர்களுக்கு மட்டும் தான் :-))

யாராவது இல்லை என்று சொன்னால் திருப்பதிக்கு போய் பார்க்கவும், அங்கே , உண்டியலுக்கு அருகே உள்ள இடத்தில் அர்ச்சகர்களுக்கான கக்கூஸ் உள்ளது!

மாற்று மதத்தினர் வந்தால் புனிதம் கெடும் என்று சொல்லும் குடுமிகள் கோயிலுக்குள்ளே கக்கூஸ் கட்டுவது மட்டும் ஏன்?

மீனாக்ஷி என்று எந்த ராணியும் நீங்கள் சொன்ன பிராதாபங்களோடு மதுரையை ஆளவில்லை. அப்படி சொல்லப்பட்டது எல்லாம் கப்சா தான்.

மதுரை அரசாட்சியில் தொடர்புள்ள ஒரே மீனாட்சி, ராணி மங்கம்மாளின் பேரனின் மனைவி மீனாட்சி தான், அவர்களும் அத்தனை கீர்த்தியோடு இல்லை, அவர்கள் ஆட்சிக்கு வந்த போது, குறுகியகாலத்தில் எதிரிகளால் பதவியை விட்டு விலகி, சந்தா சாகிப் என்ற ஆர்காட் நவாபின் தளபதியால் சிறை வைக்கப்பட்டு , பின்னர் விஷம் அருந்து உயிர் நீத்தார். அதற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள், சந்தா சாகிப் உடன் அவர் காதல் கொண்டார் , சில நாட்களுக்கு பின்னர் அவரை அவன் கை விட்டு , சிறை வைத்ததால் மனம் உடைந்தே விஷம் அருந்தினார் என்று!

Unknown said...

கீதா,
// அறநிலையத்துறையிடம் கேட்க வேண்டிய கேள்விகள்!!!!! //

இது அறநிலையத்துறை மட்டும் அல்ல உங்களைப்போன்றவர்களாலும் பதில் அளிக்கமுடியாத வரலாற்று குற்றங்கள்.


பதிவில் எழுதப்படும் (நான் எனது பதிவுகளில் அல்லது இங்கே) எல்லா விசயங்களுக்கும் விடையளிக்க நிச்சயம் ஒரு துறை இருக்கும்(இருக்கலாம்) அதற்கு ஒரு துரையும் இருப்பார்.

ஆனால், இதெல்லாம் அவர்கள் சம்பந்தப்பட்ட அல்லது அவர்களிடம் மட்டுமே கேட்கப்பட வேண்டிய விசயம், இங்கே ஏன் சொல்லுற என்ற ரீதியில் என்னை யார் வேண்டுமானாலும் கேட்கலாம். அது கேட்பவரின் உரிமை.

நீங்கள் எழுதும், கடவுள் நல்லவர், வல்லவர், கோவில் கதைகள் etc... எல்லாவற்றையுமே ஏதாவது ஒரு கோவிலின் கொலு மண்டபத்தில் சொல்ல வேண்டியத்துதானே. ஏன் பொதுவில் (பதிவில்) வைக்கின்றீர்கள்?

அனுபவங்களைப் பகிர்தல் போல், கேள்விகளையும் பகிர்தலே நோக்கம்.

மேலும்,நான் இங்கே கேட்டதன் மற்ற ஒரு காரணம், இந்த பதிவைப் படிபவர்களுக்கு ஒரு கேள்வியை விதைப்பதும், அவர்களை விடையைத் தேடவப்பதும் ஆகும்.

அப்படியே விடை தெரிந்தால் தெரிந்தவர்களிடம் இருந்து அறிந்து கொள்ள ஒரு எனக்கு ஒரும் வாய்ப்பு அவ்வளவே.

பக்தி என்ற பெயரில் அவிழ்த்துவிடப்படும் கதைகள். புனிதம் புண்ணாக்கு என்று இருக்கும் பக்த கோடிகள் ஏன் இது போன்ற வரலாற்றுச் சிதைவுகளை கேள்வியாய் எழுப்பியது இல்லை? கட்டிடம் எக்கேடும் கெட்டுப்போகட்டும் எனக்கு மீனாட்சி அருள் கொடுத்தால் போதும் என்ற சுயநலம்தானே?


தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் வரும் இடங்கள் இந்த அளவுக்கு மோசமாக இல்லை.

திருவண்ணாமலையை தொல்பொருள்துறை எடுப்பதற்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் யார்?

மீனாட்சி கோவிலில் பூசை, புணஸ்காரங்களை நிறுத்திவிட்டு வரலாற்றுச்சின்னமாக பாதுகாக்க முடிந்தால் நல்லது. அடுத்த தலைமுறைக்கு மேலும் பெயிண்ட் அடிக்கப்படாத வரலாற்றுச் சின்னங்கள் கிடைக்கும்.

அது நிச்சயம் முடியாது.

**

நிச்சயம் இன்னும் பல கேள்விகள் பதிவில் வைக்கப்படும் , அது அறநிலையத்துறைக்காக அல்ல உங்களைப்போன்ற பக்த கோடிகளுக்காக. :-))

//மற்றபடி உள்ளே கர்பகிரஹத்துக்குள் வருவதற்குத் தான் மற்ற மதத்தினருக்குத் தடை. அதுவரை கொலு மண்டபம் வரை வந்து எல்லாவற்றையும் பார்க்க முடியும், நான் அறிந்த வரை, இப்போது எப்படினு தெரியலை!!!!//

கர்பகிரஹத்துக்குள் எந்த பக்தனுக்கும் அனுமதி இல்லை. அர்த்த மண்டபத்தின் வெளிப்பிரகாரத்தில் இருந்து கர்பகிரகத்துக்குள் இருக்கும் தேவியை எட்டிப் பார்த்துக் கொள்ளவேண்டியதுதான்.

"எங்க ஏரியா உள்ள வராதே" என்ற பலகை காலம் காலமாக அதே இடத்தில்தான் உள்ளது. அர்ச்சனை டிக்கெட் வாங்கிவிட்டு அடுத்த கட்டமாக நுழையும் வாயிலின் அருகிலேயே உள்ளது. கொடி மரத்துக்கு முன்னால் வந்துவிடும் இந்தப்பலகை. ( மேலும் விவரம் அறிந்தவர்கள் திருத்தலாம்.)

**
அடுத்த ஆப்பு திருப்பரங்குன்ற முருகனுக்கு :-))


******************

இரண்டாம் சொக்கன்,


//அவர் வகுப்பில் எங்களிடம் மீனாட்சி எங்க ஆத்தாடா...ன்னு மார்தட்டி பேசி சந்தோஷப்படுவதை பார்த்து ஆச்சர்யப்பட்டிர்ருக்கிறேன்//

இதுதான், எனது ஆதங்கமும். மதுரையில் பலர் மீனாட்சியை ஒரு மதக்கடவுளாக மட்டும் பார்ப்பது இல்லை.
ஊரின் ஒரு அடையாளம். நல்ல கட்டடக்கலைக்குச் சான்று.
பின்பு ஏன் இந்த கருமாந்திர போர்டு?

****************

வவ்வால்,

//அறிவிப்பு பலகை பெரும்பாலான கோவில்களில் காணப்படுகிறது(அதன் படி எல்லாரையும் தடுப்பதும் இல்லை)//

இது நடைமுறைப்படுத்த முடியாத ஒன்று. மதம் சார்ந்த புற அடையாளம் இல்லாத மக்களை எப்படித் தடுக்க முடியும்? எல்லாரும் சாதிச் சான்றிதழுடன் / ரேசன் கார்டுடன் வந்தால்தான் முடியும்.


கோவில்களில் கக்கூஸ் இருக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு.

இந்த அளவுக்குமேல் மக்கள் வந்தால் இந்த இந்த சுகாதார வசதிகள் இருக்க வேண்டும் எனபது முக்கியமானது.

கர்ப்பகிரகத்தில் சாமிக்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்கள் குசுவே விடுவது இல்லையா? பொதுவில் விடப்படும் பல்வேறு பக்தர்களின் இந்த "அப"காற்றை ஏற்றுக்கொள்ளும் கோவிலும் கடவுள், உண்டியலுக்கு அருகில் உள்ள கக்கூசை ஒன்றும் சொல்ல மாட்டார்.


ஒரே சுவற்றுக்கு அந்தப்பக்கம் பெருமாள், இந்தப்பக்கம் கக்கூஸ் என்று சுகாதாரா வசதிகளுடன் உள்ள கோவில்கள் உண்டு. அங்கே சாமியும் பார்த்துள்ளேன், ஒண்ணுக்கும் போயுள்ளேன்.

*****************

இளவஞ்சி,

நன்றி :-)))))

******************

தருமி,

// என்று நமக்கு அந்த அறிவெல்லாம் பிறக்குமோ? //

நமக்கு என்று சொல்லாதீர்கள், நாம் குறைந்த பட்சம் கேள்வியாவது கேட்கப்பழகி வருகிறோம்.

ஒருநாள் தவழ்ந்தோம் என்பது உண்மை.

ஆனால் இப்போது எழுந்து நடக்க ஆரம்பித்து இருக்கிறோம்.

நாளை ஓட முயற்சிக்கலாம்...

ஆனால், இன்னும் தவழ்ந்து கொண்டே இருப்பவர்களை என்ன செய்வது.

*****

கருத்துக்களைப் பகிர்ந்த அனைவருக்கு நன்றி!!

Ayyanar Viswanath said...

பலூன் மாமா,
திருவண்ணாமலை அளவிற்கு மதுரையை இன்னும் சிதைத்துவிடவில்லை என சந்தோஷப்பட்டுக்குங்க..வரிசையா கம்பிக் கேட்டுகள் மரத்தடுப்புகள் னு கோயிலை சினிமா கொட்டா சாயலில் மாற்றிவிட்டிருக்கும் அவலங்கள் திருவண்ணாமலையில் நடந்தேறி இருக்கின்றன..

/யார் இந்துக்கள் என்பது என்னளவில் இன்னும் புரியாத ஒன்று . அது இங்கே விளக்கப்படப்போவது இல்லை/

ரொம்ப ரொம்ப முக்கியமான கேள்வி..எனக்கும் எனக்கும் னு கூவத் தோணுச்சி இத படிக்கும்போது :)

ஒரு சிலர் என்னா சொல்றாங்கன்னா சைவம்,வைணவம்,பெளத்தம் இது மூணுதான் இருந்தது வெள்ளக்காரன் தன்னோட வசதிக்காக இந்து ங்கிற லேபிள கொடுத்து எல்லாத்தையும் ஒரே கொட்டாயில கட்டிட்டான் அப்படிங்கிறாங்க..இப்ப திடீர்னு எனக்கொரு கேள்வி?..நான் யாரு?இந்துன்னு இவ்ளோ நாளா நம்பிட்டிருந்தேன் அப்போ நான் இந்து இல்லையா?..அப்போ திராவிடன் அப்படின்னு வேற சொல்லிக்கிறாமே இது எங்கிருந்து வந்தது?..ரொம்ப கன்ஃபியூசனா இருக்கு (என் புனைவு மாதிரியே :)

யாராச்சும் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்...

Ayyanar Viswanath said...

மத்தபடி இந்த மீனாட்சி லாம் வவ்வால் சொல்றா மாதிரி கத யா இருக்குமோன்னும் எனக்கொரு எண்ணம்

Unknown said...

அய்யனார்,

// ரொம்ப கன்ஃபியூசனா இருக்கு (என் புனைவு மாதிரியே :) //

:-))))


மதம் கடவுளைத் தேடும் வழி அல்லது புண்னியத்தை/மோட்சத்தை அடைய ஒரு வழி அப்படின்னு சொல்லலாம்.

இல்லாங்காட்டி மதம் ஒரு போதை. கஞ்சா,அபின்,சிகரெட்டு,சாராயம்,சுண்டக் கஞ்சி,..என்ற பலவகைகளில் கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால் , உங்கள் உடல் எதைத்தாங்குமோ அதை உட்கொள்ளலாம். எல்லாம் உங்கள் விருப்பம். :-)))

இது எதுவும் இல்லாமல் விரதம்,மந்திரம்,நோன்பு என்ற குழப்பங்கள் இல்லாமல் , நோகாமல் நொங்கு திண்ண வேண்டுமா?
இருக்கவே இருக்கு மோடிவழி...

இந்து மதத்தில் இருந்துகொண்டு சும்மா பீயள்ளினாலே கடவுள் அனுபவம் கிடைக்கும். மேல் விபரங்களுக்கு
திரு. மோடி அவர்கள்
குஜராத்.

Geetha Sambasivam said...

தொல்லியல் துறையினரின் பாதுகாப்பில் இருக்கும் கைலாசநாதர் கோயில், காஞ்சியில் 30 வருஷங்களுக்கு முன்னர் நான் பார்த்ததுக்கு இப்போது பல சித்திரங்கள் அழிந்த நிலையிலேயே உள்ளது. இன்னும் விவரம் வேணுமென்றால், குற்றாலம் சித்திரசபை ஒண்ணே போதும்!!! இதுக்கும் பக்திக்கும் என்ன சம்மந்தம் கொண்டு வரீங்கனு புரியலை!!! வரலாற்றுச் சிதைவுகளையும் சேர்த்துச் செப்பனிட வேண்டிய பொறுப்பு, கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கும் அறநிலையத் துறையைச் சேர்ந்ததே என என்னுடைய கருத்து. கோவில்களை வியாபாரக் கூடமாக்கி வசூலில் மட்டுமே குறியாக இருக்கும் அறநிலையத் துறை அந்த வசூலில் 4%கூட கோவிலின் வளர்ச்சிக்குச் செலவிடவில்லை என்று பத்து நாட்கள் முன்னர் கூட தினசரிப் பத்திரிகைகளில் படித்தேன். முதலில் கோவிலின் வளர்ச்சிக்குச் செலவிடட்டும் அறநிலையத் துறை.

Geetha Sambasivam said...

கர்ப்பக் கிரஹத்துக்குள் தனிச்சீட்டு வாங்கி முன்னர் அனுமதித்து வந்தார்கள். இப்போதைய மதுரைக் கோவிலின் நிலைமை தெரியாது. போயிட்டு வந்து பார்த்துத் தான் சொல்லணும்!! :))))))

Anonymous said...

கல்வெட்டு,
//எந்த ஒரு சுயமரியாதை உள்ள மனிதனும் "எங்க ஏரியா உள்ள வராதே" என்ற தொனியில், இந்து அல்லாதோர் உள்ளே வரக்கூடாது என்று சொல்லும் அறிவிப்புப் பலகையை கண்டு வேதனைப்படவே செய்வான்.//

இந்த வரிகளை ரொம்பவே ரசித்தேன். நீங்கள் சொல்வது போன்ற பிரச்சினைகள் மதுரை கோயிலுக்கு என்று இல்லை. பெரும்பாலான கோயில்களிலும் இப்படியேதான் இருக்கிறது.

அப்புறம் மதுரை மீனாட்சியைப் பற்றி பல கதைகள் உலாவி வருகின்றன. வவ்வால் சொன்னதும் அதில் ஒன்றாக இருக்கலாம். அல்லது அதுவே உண்மையானதாய்க் கூட இருக்கலாம். சரியாய்த் தெரிய வில்லை.அய்யனார் சொன்னது போல இந்து, ஆரியன்,திராவிடன் இதன் பிறப்பிடங்களிலிருந்து ஆரம்பித்து இதன் உண்மையான வரலாற்றை தெரிந்துக் கொள்ள ஆர்வமாய் இருக்கிறது.

மதுரை மீனாட்சி விஷயத்திற்கு வருவோம்.

தனது கணவருக்குப் பிறகு மதுரையைக் காப்பாற்ற தானே அரியணை ஏறி ஆட்சி புரிந்தார் என்றும், ஆனால் தன்னால் சமாளிக்க முடியாத நிலையில், அப்போதைய ஆற்காட்டு நவாபாக இருந்த சந்தா சாகிபின் உதவியை நாடியதாகவும், இருந்தாலும் எங்கே சந்தா சாகிப் தன்னை ஏமாற்றி விடுவானோ என்று பயந்த மீனாட்சி, ஒரு தட்டில் திருக்குர் ஆனை வைத்து அதன் மீது சத்தியம் செய்யச் சொல்லி, சந்தா சாகிப் செய்த பின்பே மீனாட்சி அவனை முழுமையாக நம்பினாள் என்றும் ஒரு சில புத்தகங்களில் பார்த்திருக்கிறேன்.

ஆனால் இயல்பாகவே மண்ணாசை உடைய சந்த சாகிப் குரானிற்குப் பதிலாக ஒரு செங்கல்லை வைத்து அதன் மீது ஒரு துணியைப் போர்த்தி சத்தியம் செய்தான் என்றும், பின்னர் அவன் மீனாட்சியை சிறையிலடைத்து துன்புறுத்தினான் என்றும் படித்திருக்கிறேன்.

திருமலை நாயக்கர்கள் என்ற்ழைப்பப் படும் மதுரையை ஆண்ட நாயக்கர்களில் இரண்டாம் சொக்கனாதர் என்றழைக்கப்படும், ஸ்ரீ விஜயரங்க சொக்கநாதரின் முதல் மனைவிதான் மீனாட்சி. சொக்கநாதர் இளம் வயதிலே இறந்து போக பட்டத்திற்கு வந்தார் மீனாட்சி.

தனக்கு குழந்தை இல்லாத காரணத்தால், தனது கணவர் வழி உறவில் திருமலை நாயக்கரின் இளையசகோதரர் குமரமுத்து நாயக்கரின் வழிவந்த பங்காருதிருமலை நாயக்கரின் மகன் விஜயகுமாரனை சுவீகாரம் செய்துகொண்டார். பிற்காலத்தில் பங்காருத்திருமலை அப்போதய தளபதி (தளவாய்) வெங்கடாச்சார்யாவோடு சேர்ந்து உள் நாட்டுச் சதியில் ஈடுபட்டார். இங்குதான் மீனாட்சி சந்தாசாகிப்பின் உதவியை நாடினார்.

பின்பு சந்தாசாகிப்பால் ஏமாற்றப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பின்பு, விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இங்கே மீனாட்சியை அடைய நினைத்தான் சந்தாசாகிப் என்று சிலர் சொல்கின்றனர். இல்லை அந்த விஷயத்தில் சந்தாசாகிப் ஒழுங்காக நடந்து கொண்டான். ஒரு ச்கோதரனைப் போலத்தான் நடந்து கொண்டான் என்றும் சொல்கின்றனர்.

இது எந்தளவிற்கு உண்மை என்று தெரிய வில்லை. நம்ம ஊரில் ஒரு பெண்ணைக் கொண்டாடத் தொடங்கி விட்டால், அவள் எல்லா வகையிலும் புனிதமானவளாகவே இருக்க வேண்டும் என்றுதான் எல்லாரும் நினைப்பார்கள். அதற்காக கூட இந்த சகோதரன் கதை கட்டப் பட்டிருக்கலாம். தெரிய வில்லை.

இவை எல்லாம் நடந்த 1750 காலகட்டங்களில் என்று நினைக்கிறேன். நடுவில் உண்மையான ஆற்காட்டு நவாப் யார் என்பதில் சந்தா சாகிப்புக்கும், முஹம்மது அலிக்கும் சண்டைகள் இருந்து வந்திருக்கின்றது. அப்போதய கால கட்டத்தில் மக்களுக்கே யார் நவாப் என்பதில் பெரும் குழப்பம் இருந்து வந்தது.

இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியப் பகுதிகளில் தனது ஆதிக்கம் ஏற்பட வேண்டுமென்று ஃப்ரஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் பெரும் போட்டி நிலவி வந்தது. இதைச் சாக்காக கொண்டு, சந்தாசாகிப்பை ஃப்ரஞ்சுக்காரர்கள் ஆதரிக்க, முஹம்மது அலியை ஆங்கிலேயர்கள் ஆதரித்தனர்.

இதே சமயத்தில் ராணி மீனாட்சியின் சுவீகாரப் புத்திரன் விஜயகுமாரன் தனது தாயின் மரணத்திற்குப் பழிவாங்கக் கிளம்பினான். அவன் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து கொண்டு சந்தா சாகிப்பிற்கு எதிராகப் போர் தொடுத்தான். இறுதியில் சந்தா சாகிப் விஜயகுமாரனாலும், ஆங்கிலேயர்களாலும் சாகடிக்கப் பட்டான்.

இந்த சமயத்தில் இந்தப் போர்களில் இரண்டு மாவீரர்களின் பங்கும் இருந்திருக்கிறது. இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் ஏற்பட பெரும் காரணமாயிருந்த ராபர்ட் க்ளைவ்வும், முஹம்மது யூசுஃப் என்றும் யூசுஃப்கான் என்றும் அழைக்கப் படும் மருதநாயகமும்தான் அவர்கள்.

போரில் சந்தாசாகிப் பக்கம் மருதநாயகமும், விஜயகுமாரன் பக்கம் க்ளைவ்வும் துணை நின்றனர். விஜயகுமாரன் போரில் வெற்றி பெற ரொம்ப கஷ்டப்பட்டதிற்கு மருதநாயகமே காரணம் என்றும் அவன் மட்டும் இல்லாமலிருந்தால் இன்னும் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம் என்று சொல்லப்பட்டது.

இந்தப் போரையும், மீனாட்சியின் விஷயத்தையும் அடிப்ப்டையாகக் கொண்டு, ஒரு கற்பனை கலந்த நாவலை சாண்டில்யன் "ராஜபேரிகை" எனும் நூலை எழுதி இருப்பார்.

இதைத் தவிர்த்து மருதநாயகத்தை மையமாய் வைத்து எஸ்.பாலசுப்பிரமணியன் எழுதிய "பொன் அந்தி" எனும் நாவலில் கூட இந்த போரின் ஒரு பகுதி வரும்.

ராணி மங்கம்மாள் பயங்கர வீராங்கனை, நல்லவள் என்று இட்டுக்கட்டி எழுதப்பட்டிருந்த பள்ளிக்கூட வரலாறை படித்திருந்த எனக்கு, மங்கம்மாளும், அப்போதைய அரசர்கள் போல மண்ணாசையும், ஆதிக்க வெறியும் உடையவள்தான். தனாக்கு கீழ்ழிருந்த பாளையக்காரர்களை அடிமைகளாய் நினைத்த சாதாரணப் பிறவிதான் என்று உண்மையான வரலாறு முகத்திலறைந்து விட்டுச் சென்றது. இந்திரா சௌந்தர்ராஜன் எழுதி இருக்கும் "சேது நாட்டு வேங்கை" படியுங்கள். நாயக்கர்களின் ஆட்சி முறை, மதுரை உள் நாட்டுக் குழப்பங்கள், பாளையக்காரர்கள் மத்தியில் மதுரை அரசு பற்றி இருந்த மதிப்பீடு பற்றிய ஒரு தெளிவு பிறக்கும்.

இதைத் தவிர R.சத்யநாத அய்யர் எழுதியுள்ள History of the Nayaks of Madura வில் முழுதாக விவரங்களை அறிந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நானே அந்த புத்தகத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்.

துளசி கோபால் said...

//"சேர,சோழர்களை வென்று இமயம் முதல் குமரிவரை ஆட்சி புரிந்தாள்"//

தன் கருணையால் அவர்கள் மனதை வென்று, இமயம் முதல் குமரி வரை இருக்கும் மக்கள் மனதில் ஆட்சி புரிந்தாள்.

இப்படி நினைச்சுக்கிட்டா வம்பே இல்லை:-)))))

Anonymous said...

கலக்கல் நந்தா..நல்ல தகவல்கள்..
அப்படியே இந்த இந்து பிரச்சினைக்கும் யாராவது பதில் சொல்லுங்களேன்..ரொம்ப நாள் சந்தேகம்....

Unknown said...

கீதா,

// தொல்லியல் துறையினரின் பாதுகாப்பில் இருக்கும் கைலாசநாதர் கோயில், காஞ்சியில் 30 வருஷங்களுக்கு முன்னர் நான் பார்த்ததுக்கு இப்போது பல சித்திரங்கள் அழிந்த நிலையிலேயே உள்ளது. இன்னும் விவரம் வேணுமென்றால், குற்றாலம் சித்திரசபை ஒண்ணே போதும்!!! //

தொல்லியல்துறையினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லவில்லை. தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் வரும் இடங்கள் இந்த அளவுக்கு மோசமாக இல்லை என்று நான் சொன்னது அந்த அர்த்தத்திலும் இல்லை. பூசை புணஸ்காரங்கள், பக்தி நம்பிக்கைகள் சார்ந்த (வெள்ளித்தகடு சாத்துறேன்,செப்புத்தகடு சாத்துறேன்) செயல்களும் கட்டிடம் சிதிலமடைவதற்கு மேலும் ஒரு காரணம்.

நீங்கள் சொன்ன இடங்களைப் பார்த்தது இல்லை. அப்படி சிதிலமடந்து இருக்கும் படத்தில் தொல்லியல்துறைக்கும் கண்டனங்கள்.

// இதுக்கும் பக்திக்கும் என்ன சம்மந்தம் கொண்டு வரீங்கனு புரியலை!!! //

இந்தியாவில் 99.9% மக்கள் ஏதேனும் ஒரு மதம் சார்ந்த ஒரு தெய்வத்தின் பக்தர்கள்தான். இந்த 99.9% பக்தர்களின் பக்திக்கும் எதற்கும்தான் சம்பந்தம் உள்ளது? சொல்லுங்கள் அந்த வரையறைக்குள் வினா தொடுக்கிறேன். :-))

பக்தர்களாக / ஆன்மீகவாதிகளாக வலம் வருபவர்களின் கண்களுக்கு ஏன் இது போன்ற (மீனாட்சி இந்தியாவை ஆண்டார்) வரலாற்றுத்திரிபுகள் தெரியவில்லை. கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்திதான் என்று நினைக்கிறேன்.

**

//கர்ப்பக் கிரஹத்துக்குள் தனிச்சீட்டு வாங்கி முன்னர் அனுமதித்து வந்தார்கள்.//

இப்போதும் இருக்கலாம். நான் சொன்னது சாதாரண மூன்றாம் கிளாஸ் பக்தனுக்கு.பக்தியையும் இறைவனின் தரிசனத்தியும் கூறுகட்டி விற்கும் கடைந்தெடுத்த ஸ்பெசல் டிக்கெட் பற்றிப் பேசவில்லை.

கடவுள் முன்னாலேயே நாம் எல்லாம் சமம் இல்லை என்று வந்துவிட்டது. அது பற்றிப் பேச வேண்டாம்.நீங்கள் பெரிய VIP என்றால் மீனாட்சியின் அருகிலேயே செல்லலாம்.

**
போதும் சண்டை போட்டது என்று நினைக்கிறேன்.கீதா :-)) மிச்சத்தை திருப்பரங்குன்ற பதிவில் பார்க்கலாம்.

நந்தா நிறைய விசயங்களைச் சொல்லியுள்ளார். வாசிப்போம்

Geetha Sambasivam said...

@நந்தா, வவ்வாலின் பின்னூட்டத்தை நான் அப்போது சரியாக் கவனிக்கலை, உங்களோட பின்னூட்டத்தைப் படிச்சதும் தான் திரும்பவும் உள்வாங்கிப் படிச்சேன். உங்களோட தெளிவான பதிலுக்கு நன்றி, இந்த விவரம் நானும் படிச்சிருக்கேன். ஆனாலும் அது, இந்தப் பதிவுக்குத் தேவையானு யோசனையாகவும் இருந்தது. அருமையான பதில், ரொம்பவே நன்றி. நிஜமாவே அய்யனார் சொன்னாப்பலே கலக்கிட்டீங்க!!!!

Geetha Sambasivam said...

இப்போதும் இருக்கலாம். நான் சொன்னது சாதாரண மூன்றாம் கிளாஸ் பக்தனுக்கு.பக்தியையும் இறைவனின் தரிசனத்தியும் கூறுகட்டி விற்கும் கடைந்தெடுத்த ஸ்பெசல் டிக்கெட் பற்றிப் பேசவில்லை.

இது மட்டும் சொல்லிக்கிறேன், அப்புறம் வரவே இல்லை, சரியா? மேலே சொல்லி இருக்கீங்களே, ஸ்பெஷல் டிக்கெட், இதுவும் அறநிலையத் துறைதான் பொறுப்பு, சாதாரண பக்தன் இதனால் எவ்வளவு தொல்லை அனுபவிக்கிறான் என்பது கோவில்களுக்குச் செல்லும் என் போன்றவர்களுக்குத் தான் தெரியும், எந்த பக்தனும் ஸ்பெஷல் டிக்கெட் வைக்கச் சொல்லிக் கேட்பதில்லை, எந்த பக்தனையும் கேட்டு இதைச் செய்யவும் இல்லை. சொல்லணும்னு ஆரம்பிச்சா இன்னும் நிறையவே இருக்கு, ஆனால் நீங்க போதும்னு சொன்னதாலே நிறுத்திக்கிறேன். பார்க்கலாம் அடுத்த பதிவில், அதுவரை நன்றிகளுடன்.

Anonymous said...

இந்த பதிவில் இவ்வளவு விரிவா எழுத காரணம் மதுரை மீனாட்சி முழுக்க முழுக்க கற்பனையானவள் இல்லை. அதே சமய்ம் அவள் ஒன்றும் சேர, சோழ, பாண்டியர்களை வென்று இமயம் வரை ஆட்சி செய்ய வில்லை, அவள் தெய்வப் பிறவியும் இல்லை. என்ற தெளிவை உண்டாக்கவே.

சொல்லப்போனால் சொக்கனாதர்,மீனாட்சி தம்பதிகளுக்கு குழந்தை இல்லாத காரணத்தால், அவர் காமாட்சி எனும் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்றும், காமாட்சிக்கும், மீனாட்சிக்கும் பகை இருந்து வந்திருக்கிறது என்றும், காமாட்சி-சொக்கனாடர் இடையே ஒரு பெண் குழந்தை பிறந்தது என்றும், தனது சுவீகாரப் புத்திரனிற்கு அரியணை வரவேண்டும் என்று எண்ணி காமாட்சி குடும்பத்தினரை ஒழித்து கட்ட வேண்டும் என்று ஆட்களை ஏவினாள் என்றும் ஒரு கதை நிலவுகிறது. (நிலவுகின்ற கதைதான். எனது கற்பனைகள் ஏதும் இல்லை. அதே சமய்ம் இதன் உண்மை நிலவரமும் தெரிய வில்லை)

இந்தளவிற்கு மீனாட்சி ஆசாபாசங்கள் உடைய ஒரு சாதாரணப் பிறவிதான். இவருடைய சிறப்பு என்றால் அது நாயக்கர் வம்சத்தின் கடைசி அரசி என்பதாய் மட்டுமே இருக்கும்.

Unknown said...

நந்தா,

நிச்சயம் மீனாட்சி என்ற அரசியின் இருப்பைக் கேள்வி கேட்கவில்லை. நிச்சயம் மீனாட்சி என்ற ஒரு அரசகுலப் பெண் இருந்திருக்கிறாள் என்று நானும் நம்புகிறேன்.

மீனாட்சி என்பவளை ஒரு அரசியாகத்தான் கோவில் வரலாறும் சொல்கிறது. பதிவிலும் அப்படியே சொல்லியுள்ளேன்.

ஒரு மனிதர் கடவுளாக கட்டமைக்கப்படும்போது கொடுக்கப்படும் பில்டப்புகளை அப்படியே ஏற்கும் பட்சத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச வரலாறும் கேலியாகப்போகும்.

இருக்கும் வரலாற்றுக் குழப்பங்கள் பத்தாது இந்த பக்த கோடிகளின் பில்டப்புகளையும் செரித்து தனிமைப்படுத்த வேண்டியுள்ளது.

உங்களின் தகவல்களுக்கும் , அதை பொறுமையாக தட்டச்சு செய்து பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.

நான் கேட்ட கேள்விக்கான விடையை சொல்லிவிட்டீர்கள். யாரும் வேறு எந்த தகவலும் சொல்லாத பட்சத்தில் உங்களின் கருத்தையும், வவ்வாலின் கருத்தையும் ஒரு தனிப்பதிவாக இடுகிறேன்.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்????????? நந்தா சொல்லும் ராணி மீனாட்சி, நாயக்கர் காலத்தவள், ஆனால் மதுரைக்கோயிலோ அதுக்கு முன்னரே இருந்து வந்ததாய்த் தெரிகிறது. நந்தா அதற்கு ஒண்ணும் சொல்லாமல் போயிட்டீங்களே? ராணி மீனாட்சி என்ற பெயரில் ராணி இருந்தது வரை சரி, ஆனால் கோயில் அதுக்கும் முன்னால் இருந்திருக்கு இல்லையா?

Kasi Arumugam said...

எனக்கு ஒரு சின்னக் கேள்வி. (இருக்கிறது பத்தாதா இந்தாளும் கேள்வியோட வர்றாரேங்காதீங்க, பலூன்)

இப்ப பேசிக்கிட்டிருக்கிற மீனாட்சிக்கும் புராணப் பாத்திர மீனாட்சியும் வேற வேறதானே. ஏன்னா கோயிலே பல பத்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதுன்னு (நான் அறிந்தவரையில்) கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படின்னா இந்த 18ஆம் நூற்றாண்டு மீனாட்சி அந்த மீனாட்சியா இருக்க முடியாத்தானே?

எனக்கு தெரிந்த மதுரை மங்கையரில் பாதிபேர் மீனாட்சிகள்தான்! ஆகவே இந்த சமீபத்தில்;) ஆண்ட மீனாட்சி அப்படி ஒரு மீனாட்சியா ஏன் இருக்கக்கூடாது?

(சும்மா எதோ கொளுத்திப் போடுவமே:-))
-காசி

குமரன் (Kumaran) said...

கல்வெட்டு,

உங்கள் இடுகையில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் முகமாக இந்த பின்னூட்டத்தை இடவில்லை. (பதில் தெரியாது. நானும் அந்தக் கேள்விகளை உங்களுடன் சேர்ந்து கேட்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்)மதுரையில் வணங்கப்படும் மீனாட்சியம்மையையும் மதுரையில்/திருச்சியில் ஆட்சி செய்த நாயக்கர் வம்சத்தில் வந்த மீனாட்சி அரசியையும் ஒரே ஆள் என்பதான கருத்து இங்கு சொல்லப்படுகிறதோ என்ற ஐயத்தில் இந்தப் பின்னூட்டத்தை இடுகிறேன்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நாயக்கர் ஆட்சிகாலத்திற்குப் பல வருடங்கள் முன்பிருந்தே இருக்கின்றது. பாண்டியர்கள், சோழர்கள், முஸ்லீம்கள் என்று பல அரச வம்சத்தவர்கள் மதுரையை ஆண்ட போதிலிருந்தே இருந்திருக்கிறது. மதுரை மீனாட்சியம்மையைப் பற்றி பல பழங்கால இலக்கியங்களும் கூறுகின்றன.

நாயக்கர் வம்சத்தில் வந்த மீனாட்சி அரசி ஆட்சி புரிந்தது 18ம் நூற்றாண்டில்.

மதுரையில் வணங்கப்படும் மீனாட்சியும் ஒரு அரசி தான். ஆனால் அவள் பாண்டிய அரசியாகத் தான் சொல்லப்படுகிறாள். நாயக்க அரசியாக இல்லை. அதனால் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாயக்க அரசியைத் தான் கடவுளாகக் கட்டமைக்கப்பட்டாள் என்று நீங்களோ நந்தாவோ சொல்லவில்லை என்று நம்புகிறேன். அப்படிச் சொல்ல விழைந்தால் அது பெரும் வரலாற்றுத் தவறாக இருக்கும்.

வவ்வாலும் புராணங்கள் சொல்லும் மீனாட்சியம்மையை மறுதலித்துவிட்டு வரலாற்றில் இருக்கும் இன்னொரு அரசியான நாயக்க அரசியைச் சொன்னார். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவரே என்று சொல்லவில்லை. சரி தானே வவ்வால்?

தரவுகள் வேண்டுமென்றால் விக்கிபீடியாவில் தொடங்கி பார்க்கலாம். விக்கிபீடியாவை பலர் சரியான தரவாகக் கொள்வதில்லை. அதனால் நான் அதனை இங்கே எடுத்து வைக்கவில்லை. தகவல்கள் அறியலாம் என்ற முறையில் வேண்டுமானால் விக்கிபீடியாவில் தொடங்கலாம்.

குமரன் (Kumaran) said...

ம்ம்ம். நான் கொஞ்சம் நீளமா யோசிச்சு யோசிச்சு பின்னூட்டம் எழுதுறதுக்குள்ள கீதாம்மாவும் காசியும் அதையே சொல்லியிருக்காங்க. அவங்க சொன்னதை கொஞ்சம் முன்னாடி பாத்திருந்தா நான் பின்னூட்டம் போட வேண்டியது இருந்திருக்காது. :-)

Unknown said...

காசி,
குட்டையைக் கலக்கியதற்கும் மேலதிகத்தகவல் சொன்னமைக்கும் நன்றி :-))

**
குமரன்,
விரிவான விளக்கத்திற்கு நன்றி !!

****



நந்தாவின் (அ) வவ்வாலின் மீனாட்சிக்கு ( "நாயக்கர் மீனாட்சி (No 2) ") முன்னாலேயே கோவில் இருந்தது என்றால் அதற்கு முன்னும் இன்னொரு ஒரு மீனாட்சி "பாண்டியர் மீனாட்சி (No 1 )" இருந்திருக்கிறாள்.

காசி,குமரன் மற்றும் கீதாவின் கருத்துப்படி கோவிலில் உள்ளவள் "பாண்டியர் மீனாட்சி (No 1) "

"மீனாட்சி No 1 " -ன் வரலாறுகள் கிடைக்குமா என்று தெரியாது. பக்தி வழிப் புராணக் கதைகளில் இருந்து மேற்கோள் காட்டினால் பேனைப் பெருமாளாக்கிய கதைதான் தெரியவரும். இருந்தாலும் தெரிந்தவர்கள் சொல்லவும்.

"மீனாட்சி No 1 " -ன் எப்போது சேர,சோழர்களுடன் போரிட்டாள்? ..etec..etc . back to same questions

Ayyanar Viswanath said...

இதென்ன புதுக்குழப்பம் :(

குமரன் (Kumaran) said...

//வரலாறு என்பது எழுதுபவனின் பார்வையில் சொல்லப்படும் ஒரு கடந்தகால நிகழ்வு.வரலாறு என்று சொல்லும்போதே, அது அதைப் படிப்பவனின் காலத்துக்கு முன்னாள் நடந்த சம்பவங்கள் என்றாகிவிடுகிறது. இப்படி, வரலாறு என்பது அதை வாசிப்பவனின் காலத்திற்கு முந்தைய சம்பவங்கள் என்று சொல்லும்போதே, அது குறித்த நம்பகத்தன்மை மற்றும் ஐயப்பாடுகளும் வந்துவிடும்.
//

இதனை முழுக்க முழுக்க ஒத்துக் கொள்கிறேன் கல்வெட்டு. என்னைக் கேட்டால் நமக்கு முந்தைய நிகழ்ச்சிகள் என்ன, நம் கண்ணெதிரே நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் பார்ப்பவனின்/எழுதுபவனின் பார்வைக்கு ஏற்ப பல வித விளக்கங்கள், சில நேரங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட விளக்கங்கள் சொல்லப்படவில்லையா? அப்படி இருக்க முந்தைய நிகழ்ச்சிகளை எழுதும் போது ஒருவர் எழுதுவது மற்றவருக்கு கட்டமைப்பதாகவும் திரித்து எழுதுவதாகவும் தோன்றுவது இயல்பே. அவரவர் புரிதலின் அடிப்படையில் அமையும் கருத்துகள் அவை.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் (தமிழகத்தில் உள்ள பல கோவில்களில்) இருக்கும் இந்த போர்டு ஒரு தேவையில்லாத காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைபடுத்த இயலாத ஒரு தடை. முன்பு வேறு சில இடங்களில் இந்த போர்டினைப் பற்றிய உரையாடல்களைப் படித்திருக்கிறேன். முன்பொரு காலத்தில் அரசியல் சூழலுக்கேற்ப (ஆங்கிலேயர்களின் வருகைக்கு முந்தைய காலத்தில்) இந்தத் தகவல் பலகைகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்றொரு கருத்தும் அப்போது சொல்லிப் படித்தேன். என்ன காரணத்திற்காக அப்படி எழுதி வைத்தார்களோ தெரியாது; இந்தக் காலத்திற்கு ஒவ்வாத ஒன்று இது.

ஒரு முறை அம்மன் சன்னிதியில் நான் வணங்கிக் கொண்டிருந்த போது ஒரு வெள்ளைக்காரர் என் அருகில் நின்று வணங்கிக் கொண்டிருந்தார். ஒரு கோவில் பணியாளர் அவரை வெளியே போ என்று விரட்டத் தொடங்கி, அவர் எதற்கு என்று கேள்வி கேட்டு, இருவரும் வெவ்வேறு மொழிகளில் பேசியதால் ஒருவர் சொல்வதை மற்றவர் புரிந்து கொள்ள முடியாமல் கொஞ்சம் அமளி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. நான் தலையிட்டுப் பேசியதில் 'இந்துக்கள்' மட்டுமே உள்ளே வரலாம்; மற்றவர் வரக்கூடாது என்று கோவில் பணியாளர் கூற, வெள்ளையர் நான் இந்து தான் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நான் கோவில் பணியாளரிடம் அதனைச் சொன்னால் அவர் நம்பவில்லை. ஒரு அதிகாரியை அழைத்துவந்தார். அவர் வந்த பின் மீண்டும் எல்லாவற்றையும் விளக்க அவரும் அரைகுறை நம்பிக்கையுடன் வெள்ளைக்காரரை அங்கே விட்டுச் சென்றார். பின்னர் வெள்ளைக்காரர் ஏன் இந்தக் கட்டுப்பாடு என்று கேட்க என்னால் எந்த பதிலும் சொல்ல இயலவில்லை.

அவர் வெள்ளைக்காரர் என்பதால் அவரை நேரடியாக அவமானப்படுத்த முடிந்தது. இந்தப் பலகையைப் படித்துவிட்டு அவமானப்பட்டு வெளியேறும் மற்ற மதத்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்று அப்போது எண்ணி வருந்தினேன்.

இன்றைக்கும் அந்த பலகை அம்மன் சன்னிதியில் நுழைவாயிலிலும் சுவாமி சன்னிதி நுழைவாயிலிலும் இருக்கின்றன என்று நினைக்கிறேன். அவற்றை உடனே நீக்க கோவில் நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--------

மற்றவை பற்றி மீண்டும் வந்து சொல்கிறேன்.

Anonymous said...

//"மீனாட்சி No 1 " -ன் எப்போது சேர,சோழர்களுடன் போரிட்டாள்? ..etec..etc . back to same questions //

மீனாட்சி வரலாறு எல்லாம் தெரிஞ்சு வெச்சிருந்தேன். ஆனால் கோயிலோட வரலாறு தெரியலையே. :))))

25 கமெண்டு போனதுக்கப்புறம் மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துலயே நிக்குறோமே????

என்ன கொடுமை சரவணன் இது????

குமரன் (Kumaran) said...

//மீனாட்சி என்பவளை ஒரு அரசியாகத்தான் கோவில் வரலாறே சொல்கிறது.//

கல்வெட்டு. புராணத்தை நீங்கள் வரலாறு என்று கருதமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். புராண காலத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் மீனாட்சியம்மையைப் பற்றி அறிய எனக்கெல்லாம் புராணங்கள் தான் இருக்கின்றன. தமிழ் இலக்கியங்கள் மீனாட்சியைப் பற்றிப் பேசும் போதும் அவளைக் கடவுள் என்ற வகையில் தான் பேசுகின்றன.உமையம்மையின் அம்சமாக மீனாட்சி பாண்டிய அரசியாகப் பிறந்து மதுரையை ஆண்டாள்; சிவபெருமானான சொக்கநாதப் பெருமானை மணந்த போது சொக்கநாதர் சுந்தரேஸ்வர பாண்டியன் என்ற பெயர் கொண்டு மதுரையை ஆண்டான் என்று தான் புராணங்களும் புராணம் அல்லாத மற்ற தமிழ் இலக்கியங்களும் பேசுகின்றன. மீனாட்சி வாழ்ந்த காலத்தைப் பற்றியோ அவள் அரசியாக இருந்தாள் என்பதற்கோ 'வரலாறு' என்று பொதுவாகக் கருதப்படும் கல்வெட்டு, அகழ்வாராய்ச்சி போன்றவற்றின் மூலம் பெற்ற தரவுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. இல்லை என்றே நினைக்கிறேன். இலக்கிய வாயிலாக பல கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் என் போன்றவர்களுக்கு அவ்விலக்கிய வாயிலாகப் பெறப்படும் மீனாட்சியைப் பற்றிய கருத்துகளும் போதுமானவையாக இருக்கின்றன.

மற்ற தரவுகள் தேடும் வவ்வால், நீங்கள் போன்றவர்கள் புராணங்கள் சொல்வதை ஒன்று கப்சா என்று முழுவதுமாக மறுதலித்துவிட்டுப் போகலாம்; அல்லது அதில் ஓரளவிற்கு உண்மை இருக்கிறது - பேனைப் பெருமாளாக்கிவிட்டார்கள் என்றும் சொல்லலாம். அது உங்கள் விருப்பம்.கோவிலில் வணங்கப்படும் மீனாட்சியின் புராண அடிப்படையிலான கதையை/வரலாற்றை அறிய வேண்டும் எனில் இந்த 'மதுரை மாநகரம்' கூட்டுப் பதிவில் இதுவரை நான் இட்ட இடுகைகளில் கடைசி இடுகையைப் பாருங்கள். சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். கீதாம்மாவும் அதை அவருடைய இடுகைகளில் தொட்டுச் சென்றிருக்கிறார்.

கோவிலில் அம்மன் சன்னிதி சுற்றுச்சுவரில் செதுக்கப்பட்டிருக்கும் குறுஞ்சிலைகள் சொல்பவை புராண அடிப்படையான செய்திகள் தானே. அவற்றில் நீங்கள் ஏன் வரலாற்றைத் தேடுகிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கும் 'சேர சோழர்களை வென்று இமயம் முதல் குமரி வரை ஆட்சி புரிந்தாள்' என்பதற்கு புராண அடிப்படையில் ஆதாரம் இருப்பதாகவும் சொல்லலாம்; இல்லை என்றும் சொல்லலாம். மீனாட்சியம்மை எட்டுத் திக்குகளிலும் இருக்கும் வேந்தர்களை எல்லாம் வென்றாள்; திக்விஜயம் செய்தாள்; அப்படி செய்யும் போது தான் வடக்கில் கயிலை மலையில் இருக்கும் சிவபெருமானுடன் போரிட்டாள்; அப்போது சிவன் தான் தன்னை மணக்கப் போகிறவன் என்று கண்டாள் - இவை புராணம் சொல்லும் செய்தி.

நான் படித்த வரை மீனாட்சியம்மையைப் பற்றிச் சொல்லும் புராணங்களில்/இலக்கியங்களில் எங்கும் சேர சோழர்களை அம்மை வென்றாள் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அதனால் கோவிலில் காணப்படும் செய்தி தவறென்று சொல்லலாம். ஆனால் அம்மை திக்விஜயம் செய்தாள்; அவள் வடக்கே கயிலை வரை சென்றாள் என்று புராணங்கள் சொல்கின்றன. அம்மை பாண்டிய அரசியானதால் அவள் கயிலை செல்லும் முன் மேற்கில் சேரனையும் வடகிழக்கில்/வடக்கில் சோழனையும் வென்றாள். இப்படியும் விளக்கம் கூறி கோவிலில் சொல்லப்பட்டது சரி எனலாம். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். மேலே சொல்லப்பட்டவை இரண்டுமே புராண அடிப்படையிலானது; கோவிலில் இருக்கும் குறுஞ்சிலைகளும் புராண அடிப்படையில் ஆனது. அதனால் அவை சொல்வதை வரலாறு என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் புராணத்தை நம்பாதவர்களுக்கு இல்லை - முழுவதும் கப்சா என்று சொல்லிச் செல்லலாம். அல்லது பேனைப் பெருமாளாக்கிவிட்டார்கள் என்றும் சொல்லலாம். அவரவர் புரிதலுக்கும் ஏற்பிற்கும் உரியவை அவை.

இப்போது உங்கள் கேள்விகளுக்கு வருகிறேன்.

1. மதுரையில் மீனாட்சியம்மை ஆட்சி செய்த போது ஆண்ட சேர சோழர்களைப் பற்றிய தகவல்கள் நான் படித்த புராணங்கள்/இலக்கியங்களில் காணப்படவில்லை. அவை இருக்கலாம். ஆய்வு நோக்கில் அந்த நூற்களைப் படிக்காததால் என் மனத்தில் பதியாமல் போயிருக்கலாம்.

2. புராண அடிப்படையிலான / இலக்கிய அடிப்படையிலான தரவுகளை நீங்கள் ஏற்கப் போவதில்லை என்பது அடைப்புக்குறிக்குள் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்திலிருந்து தெரிகிறது. கல்வெட்டு, அகழ்வு போன்றவற்றால் கிடைத்த தரவுகளைப் பற்றி தெரியவில்லை. அவை தெரியாததால் வசதிக்கேற்ப பேனைப் பெருமாளாக்கினார்கள் என்று சொல்லிக் கொள்ளலாம்; கப்சா என்றும் சொல்லிக் கொள்ளலாம். மறுப்பில்லை.

3, 4, 5. திருவிளையாடல் புராணம் என்றொரு நூல் இருக்கிறது. புராணம் ஓகே என்றால் தேடிப் படித்துப் பார்க்கவும்.

நான் சொன்னவை எல்லாம் புளியமரத்தில் இருக்கும் பாம்பிடம் பல்விளக்கும் போது பரமசிவன் சொன்னவற்றைப் பற்றித் தான். அதனால் 'வரலாறு தெரிந்தவன்' என்று என்னை எண்ண மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் திருச்சியிலிருந்து ஆண்ட சந்தாசாகிப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்ட மீனாட்சி அரசியைத் தான் கடவுளாகக் கட்டமைத்துவிட்டார்கள் என்று சொல்ல முற்படுவதை அது வரலாற்றுப் பிழை என்று மறுக்கும் அளவிற்கு வரலாறு தெரிந்தவன் என்று ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

கோவிலில் பார்த்த கொடுமைகள் கட்டாயம் கொடுமைகள் என்றே வகைப்படுத்த வேண்டியவை. அதில் மீனாட்சியைத் தொழுபவர்களுக்கும் கோவிலை வெறும் வரலாற்றுச் சின்னமாக மட்டுமே பார்ப்பவர்களுக்கும் எந்த வேறுபாடும் இருக்க முடியாது. இவற்றைச் செய்யும் கோவில் நிர்வாகத்தைத் தான் எல்லாருமே கேள்வி கேட்க வேண்டும். அதனைத் தான் கீதாம்மாவும் அறநிலையத்துறையிடம் தான் கேட்கவேண்டும் என்று சொன்னார் என நினைக்கிறேன். ஆனால் நீங்கள் அதனை 'அங்கே போய் கேள்; இங்கே வந்து ஏன் கேட்கிறாய்?' என்று கேட்பதாக எண்ணி மறுமொழி கூறியிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். கீதாம்மாவும் அதனை நேரடியாக இன்னும் மறுக்கவில்லை - தவறாகப் புரிந்து கொண்டீர்கள் கல்வெட்டு என்று அவர் சொல்லியிருந்தால் என் புரிதல் சரியானது என்று அறிவேன். இனி மேலும் அதனை அவர் உறுதிப்படுத்தலாம்.

அடுத்த ஆப்பு திருப்பரங்குன்றத்திற்கு என்று கூறியிருக்கிறீர்கள். அப்படி என்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நீங்கள் இந்த இடுகையில் ஆப்பு வைத்துவிட்டதாக எண்ணுகிறீர்களா? ஆமாம் என்றால் உங்களை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்கிறீர்கள் என்று நகைத்துவிட்டுச் சென்று விடுகிறேன். நீங்கள் வைக்கும் 'ஆப்புகளில்' நல்ல கருத்துகள் வெளிப்பட்டு அவை நன்மையளிக்கின்றன; அளிக்கட்டும் என்று எண்ணி கொள்கிறேன். :-)

***

நந்தா. நீங்கள் திருச்சியிலிருந்து ஆண்ட மீனாட்சி அரசியைப் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவள் தான் மதுரையில் கோவிலில் இருக்கும் மீனாட்சி என்று நீங்கள் நினைப்பதைப் போல் தோன்றுகிறது. அப்படித் தான் நினைக்கிறீர்கள் என்றால் இங்கே கீதாம்மாவும், காசி அண்ணனும், நானும் வைத்த கருத்துகளைப் படித்துப் பார்த்து உங்கள் மறுமொழியைக் கூறுங்கள். நாங்கள் தான் நீங்கள் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டோம் என்றால் மறுமொழி தேவையில்லை.

குமரன் (Kumaran) said...

//இதென்ன புதுக்குழப்பம் :(//

அய்யனார்,

கோவிலில் இருக்கும் மீனாட்சியெனும் பாண்டிய அரசியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது திருச்சியிலிருந்து மிகவும் பிற்காலத்தில் ஆண்ட நாயக்க அரசி மீனாட்சியின் வரலாற்றைப் பேசத் தொடங்கிய போது வந்தது தான் குழப்பம். இப்போது அந்தக் குழப்பம் தீர்கிறது என்று நினைக்கிறேன். ஒரு வேளை நீங்களும் நந்தா சொன்ன மீனாட்சி அரசி தான் கோவிலில் இருக்கும் அரசி என்று உறுதியாக எண்ணினீர்களோ? அப்படி என்றால் இப்போது பேசப்படுபவை புதுக்குழப்பமாகத் தான் இருக்கும். :-)

Anonymous said...

//நந்தா. நீங்கள் திருச்சியிலிருந்து ஆண்ட மீனாட்சி அரசியைப் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவள் தான் மதுரையில் கோவிலில் இருக்கும் மீனாட்சி என்று நீங்கள் நினைப்பதைப் போல் தோன்றுகிறது. அப்படித் தான் நினைக்கிறீர்கள் என்றால் இங்கே கீதாம்மாவும், காசி அண்ணனும், நானும் வைத்த கருத்துகளைப் படித்துப் பார்த்து உங்கள் மறுமொழியைக் கூறுங்கள். நாங்கள் தான் நீங்கள் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டோம் என்றால் மறுமொழி தேவையில்லை.
//

குமரன், இதற்கு முன்பு அப்படி இந்த நாயக்கர் மீனாட்சிதான் மதுரை மீனாட்சி என்று நினைக்க வில்லை. ஆனால் வவ்வாலின் பின்னூட்டத்தைப் பார்த்ததும் இது குறித்தான அதிகத் தகவல்களை சொல்ல நினைத்து சொல்லி விட்டேன்.

உங்கள் பின்னூட்டங்கள் படித்து தான் உண்மையான மேலதிக விவரம் தெரியப் பெற்றேன். நன்றி.

நீங்கள் சொன்ன வரலாறை வைத்து பேச விரிவாகப் பின்னால் வருகிறேன்.

Geetha Sambasivam said...

"இவற்றைச் செய்யும் கோவில் நிர்வாகத்தைத் தான் எல்லாருமே கேள்வி கேட்க வேண்டும். அதனைத் தான் கீதாம்மாவும் அறநிலையத்துறையிடம் தான் கேட்கவேண்டும் என்று சொன்னார் என நினைக்கிறேன். ஆனால் நீங்கள் அதனை 'அங்கே போய் கேள்; இங்கே வந்து ஏன் கேட்கிறாய்?' என்று கேட்பதாக எண்ணி மறுமொழி கூறியிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். கீதாம்மாவும் அதனை நேரடியாக இன்னும் மறுக்கவில்லை - தவறாகப் புரிந்து கொண்டீர்கள் கல்வெட்டு என்று அவர் சொல்லியிருந்தால் என் புரிதல் சரியானது என்று அறிவேன். இனி மேலும் அதனை அவர் உறுதிப்படுத்தலாம். "

இத்தனை விளக்கமாய்ச் சொல்லி இருக்கணுமோ? எனக்கு அப்போ புரியலை. ட்யூப் லைட் மூளை, அறநிலையத் துறையிடம் கேட்கவேண்டிய கேள்வி என்பதிலேயே பலூன் மாமா புரிஞ்சுப்பார்னு நினைச்சது தப்புனு உங்களோட விரிவான பின்னூட்டத்தில் இருந்து புரியுது. பாண்டிய வம்சம், சந்திர வம்சம் என்றும் அது தென் பகுதியை ஆண்டது என்றும், சூரிய வம்சம் வட பகுதியை ஆண்டது என்றும் படிச்சிருக்கேன். வடக்கே வடமொழியும், தென் பகுதியில் தமிழும் மட்டுமே இருந்தது என்றும் படிச்சிருக்கேன். ஆனால் படிச்ச புத்தகங்கள் எது என நினைவில் இல்லை, முதல் பாண்டியனுக்கு அடுத்தவனோ என்னமோ, "கடல் வடிவலம்ப நின்ற பாண்டியன்" என்ற சிறப்புப் பெயர் பெற்றிருந்தான் என்றும், இவன் காலத்தில் தான் முதல் தமிழ்ச்சங்கம் ஆரம்பிச்சது என்றும் படித்த நினைவு, பல புத்தகங்கள் தொலைந்து போய்விட்டதால் ஆதாரம் தேடவோ, குறிப்புக்கள் தேடவோ முடியவில்லை. முடிந்தால் தேடிப் பார்த்துவிட்டு வந்து சொல்றேன். குமரன் சொல்கிற மாதிரி விக்கிபீடியாவில் எனக்கும் நம்பிக்கை கிடையாது. நாம் கொடுக்கும் தகவல்கள் தானே அவை. ஆகவே இன்னும் பழைய ஆதாரங்கள் கிடைக்குதானு பார்க்கிறேன். விளக்கம் கொடுக்க வாய்ப்பளித்ததுக்கு நன்றி. கோயிலில் நடக்கும் நிர்வாகச் சீர்கேட்டுக்குக் காரணம் அறநிலையத் துறையின் நிர்வாகம் தான் காரணம். இதை என்னால் மறுக்க முடியாது. 70களுக்கு முன்னர் உள்ள மீனாட்சி கோயிலையும், அதன் பின்னர் உள்ள மீனாட்சி கோயிலையும் பார்த்தவர்கள் கட்டாயம் புரிந்து கொள்ளுவார்கள்.

Unknown said...

மதுரை மீனாட்சி கோயில் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் நிறுவப்பட்டுள்ளது. அக்கோயில் பல்வேறு அரசர்களால் பல்வேறு காலகட்டங்களில் இடிக்கப்பட்டு புணரமைப்பு செய்யப்பட்டிருந்தாலும் மாலிக்கபூரின் படையெடுப்பில் முற்றிலுமாக சிதைக்கப்பட்டு திருமலை நாயக்கர் காலத்தில் தற்போது உள்ள கட்டிடம் நிறுவப்பட்டது. மேலும் இமயம் முதல் குமரி வரை கதைகளெல்லாம் குடுமிகளின் புனைவே. ஒரு கடைநிலை பெயிண்டர் எழுதிச்சென்றதாக இருக்கும் அது. குடுமிகளுக்கு வரலாற்றில் அவ்வளவு ஆர்வமில்லை. சேர சோழர்களை விட்டால் பாண்டியர்கள் அறிந்தது இமயம் அவ்வளவே.

எங்க ஏரியா குடுமித்தனம் எல்லா கோயிலிலும் காணக்கிடைப்பதே. தலித் வெறி இன்னமும் பல கோயில்களில் நிலவி வந்தாலும் அனைத்து பின்னூட்டர்களுக்கும் நான் முன் வைக்கும் கேள்வி

ஒட்டு மொத்த அரசாங்கமே ( பெரும்பாலும் சிற்ப, கூலித் தொழிலாளர்கள்-தலித் மக்கள்) சேர்ந்து கட்டிய கோயில்கள் மற்றும் வரலாற்று சின்னங்கள் இத்தகைய குடுமிகளின் ஆதிக்கத்தில் அல்லல்படுகிறதே இது எத்தகைய சமுதாயப்பிழை??

குமரன் (Kumaran) said...

இது முன்பு எழுதிய இடுகையில் இருந்து... இதனைத் தான் கல்வெட்டிற்குத் தந்த பதிலில் குறிப்பிட்டிருந்தேன்.

**

அன்னை அங்கயற்கண்ணியின் வரலாறு சுருக்கமாக.

மதுரையை ஆண்ட மலயத்துவஜ பாண்டியன் தனக்கு வாரிசு வேண்டுமென்பதற்காக வளர்த்த வேள்வித்தீயில் தோன்றியவள் அன்னை அங்கயற்கண்ணி. உமையன்னையின் அம்சம். அழகிய மீனைப் போன்றக் கண்களைக் கொண்டிருந்ததாலும் மீன் எப்படி தன் கண்பார்வையாலேயே தன் குஞ்சுகளைப் பாதுகாக்கிறதோ அது போல் தன் அடியவர்களைப் பாதுகாப்பவள் என்பதாலும் இவளுக்கு அங்கயற்கண்ணி (அம்+கயல்+கண்ணி - அழகிய மீனைப் போன்ற கண்கள் உடையவள்), மீனாக்ஷி (மீன் + அக்ஷி - அக்ஷம் என்றால் வடமொழியில் கண்) என்ற பெயர்கள் அமைந்தன. பெற்றவர் வைத்தப் பெயர் தடாதகைப் பிராட்டியார்.

அன்னை வேள்வித்தீயிலிருந்து சிறுமியாகத் தோன்றியபோது அவளுக்கு மூன்று கொங்கைகள் இருந்தன. அதனைக் கண்டு பெற்றோரான மலையத்துவசனும் காஞ்சனமாலையும் வருந்த, தகுந்த மணவாளனை இந்தப் பெண் காணும் போது இயற்கைக்கு மாறாக இருக்கும் மூன்றாவது கொங்கை மறையும் என்று வானமகள் சொல் சொன்னது.

அன்னையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரச மகளுக்குரிய எல்லாக் கலைகளையும் அரசமகனுக்குரிய கலைகளையும் கற்றுத் தேறினாள். அன்னை தகுந்த வயதுக்கு வருமுன்னரே பாண்டியன் காலமாக அன்னையை மதுரைக்கு அரசியாக முடிசூட்டினர்.

அரசியான பின் அவளும் அரசர்களுக்குரிய முறைப்படி எல்லா திசையிலும் சென்று பகையரசர்களை வென்று வாகை சூட விரும்பி திக்விஜயம் மேற்கொண்டாள். எல்லாத் திசைகளிலும் உள்ள அரசர்களை வென்று வடதிசையில் கயிலைக்குச் சென்று எல்லா சிவகணங்களையும் வெல்கிறாள். அன்னையின் வீரத்தைக் கண்டு சிவபெருமானே போருக்கு எழுந்தருளுகிறார். அன்னையை ஐயன் கண்டதும் அன்னையின் மூன்றாவது கொங்கை மறைகிறது. அதனைக் கண்ட அன்னை இவரே தனக்கு மணாளன் என்று உணர்ந்து பெண்ணரசிக்குரிய நாணத்தால் தலை குனிகிறாள். ஐயன் தான் மதுரைக்கு எழுந்தருளி அவளை மணப்பதாக உறுதி கூறுகிறார். அதன் படி மதுரைக்கு எழுந்தருளி அன்னையை மணந்து சுந்தரப்பாண்டியனாக வேப்பம்பூ மாலை சூடி மதுரை அரசனாக மூடி சூட்டிக் கொள்கிறார். பின்னர் அன்னைக்கும் ஐயனுக்கும் முருகப் பெருமானின் அம்சமாக உக்கிரப் பாண்டியன் தோன்ற அவனுக்குத் தகுந்த வயது வந்ததும் அரசனாக முடிசூட்டி அன்னையும் ஐயனும் மதுரை நகரில் கோயில் கொள்கின்றனர். அது தொடங்கி வாழையடி வாழையாக பாண்டிய அரசர்கள் அன்னை மீனாட்சியின் பிரதிநிதியாக மதுரையை ஆண்டு வந்தனர். அன்னை இன்றும் மதுரை நகருக்கு அரசியாய் விளங்குவதால் மதுரை வாழ் மக்கள் அனைவரும், அவர் சைவரோ வைணவரோ, யாராயிருந்தாலும் அன்னையின் அருளை நாடி நாள்தோறும் அன்னையின் கோயிலுக்கு வந்து சென்ற வண்ணமே இருக்கிறார்கள்.

Unknown said...

அனைவருக்கும்,

விரிவான எனது புரிதல்களுடன் பின்னூட்டம் இட சில மணி நேரங்கள் ஆகும்.

கருத்துப் பகிர்விற்கு நன்றி !

Anonymous said...

குமரன் முதலில் உங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி. பல சந்தேகங்களை உங்களது பதில் தீர்த்துள்ளது.

நான் பார்த்த வரை ஸ்தல புராணங்களாக பல கோயில்களுக்கு சொல்லப்படும் எல்லாமே அதீத கற்பனைகளின் மறுவடிவமாய்த்தான் தெரிகின்றன. இது தவறு இப்படி இருக்கக் கூடாது என்று நாம் வாதாட ஆரம்பித்தால், ஆத்திக நாத்திக பேச்சுக்களாக போய் முடியும். அதை விட்டு விடலாம்.

ஆனால் என் மனதில் ஏற்படும் கேள்விகள், இந்த கோயிலில் எழுந்தருளியிருக்கும் தெய்வம், இந்த அசுரனை வென்றது, இந்திரனிடம் சபதம் செய்து..... என்பது போன்ற புராண கதைகளை கேட்டிருப்போம். இதில் அது நடைபெற்ற காலங்களோ, அல்லது அதில் உண்மை போன்ற தோற்றங்களோ இருக்காது. அது போன்ற புராணக் கதைகள் வேறு வகை.

ஏனெனில், அப்போ அந்த காலத்தில் இருந்த மற்ற ஊர்கள் என்ன என்ன, அந்த காலகட்டத்து மக்களின் கலாச்சாரம் என்ன, வேற்று நாட்டு அரசர்கள் யார் யார், என்பது போன்ற விவரங்கள் தெரிய வராது. விக்கிபீடியாவிலோ, அல்லது வேறு எந்த இலக்கியத்திலும் இதைப் பற்றி தெளிவான விஷயங்கள் இருக்காது. பக்தர்களும் அதைத் தெரிந்து கொள்ளும் மன நிலையில் இருக்க மாட்டார்கள்.

இது போன்ற ஸ்தல புராணங்கள் அந்த கோயிலைச் சுற்றியுள்ள கல்வெட்டுகளிலும், சிற்பங்களிலிருந்து தெரிந்துக் கொள்ளப் பட்டதாய் இருக்கும். கோயிலைத்தாண்டி, வெளியே பொது இடங்களில் கிடைக்கும் கல்வெட்டுகள் அந்த மண்ணின் அரசர்களின் கீர்த்திகள், புகழ், மக்களின் வாழ்க்கை முறை உள்ளிட்ட வெளி விஷயங்களைச் சொல்பவையாகவே பெரும்பாலும் இருக்கும்.

இதன் மூலம் தெரிய வருவது, கோயிலைக் கட்டும் போதே, இதுதான் புராணம், இப்படித்தான் மக்களிடம் சொல்ல வேண்டும் எனும் நோக்கில் சிற்பங்களைச் செதுக்கி, முன் முடிவுடன் செய்யப்பட்ட புராணக் கதைகள் இவை.

இவை எல்லாம் மக்களின் நம்பிக்கையைப் பொறுத்து, பரிகாசத்திற்குடையதாகவோ, அல்லது பக்தியுடன் நோக்குவதற்குடையதாகவோ இருக்கும். இது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.

இதில் நான் கேட்க வருவது, சேர சோழ, பாண்டியர்களின் வரலாறு என்பது ஓரளவிற்கு, ஆய்விற்குட்பட்ட காலம். இந்த மன்னர்களின் முழு தலைமுறையும், ஒவ்வொரு மன்னர்களின் பெயரையும், அவர்கள் காலங்கள் நாடு அடைந்த சுபிட்சங்களையும், யாரும் கற்பனையாக சொல்லி விட்டுச் செல்ல முடியாது. இந்த காலகட்டத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் ஏதேனும் ஒரு வலிமையான ஆதாரத்தின் மூலம் நிறுவப் பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த காலகட்டத்தில், சக மன்னர்களான சேர சோழ, பாண்டியர்களை அன்னை தோற்கடித்தாள், கைலாயம் வரை சென்றாள் என்பது வரலாற்றை சிதைத்தல் ஆகாதா? மக்களுக்கு தன்னை மீறிய ஒரு சக்தியின் மீது அதீத நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக, இலக்கியங்களில், புலவர்கள் ஏற்படுத்திய இத்தகைய புனைவுகள் காலாகாலத்துக்கும் தொடர்ந்துக் கொண்டேதான் இருக்க வேண்டுமா?

ஆன்மீகத்தினடிப்படையில் எழுதப்படும் வரலாறுகளை (கவனிக்க வரலாறுகள் என்று சொல்கிறேன்.) முழுக்க முழுக்க புனைவுகள் என்று சொல்லிவிட்டால் இவ்வளவு கேள்விகள் கேட்க தேவையில்லைதான். ஆனால் இவை யாவும் உண்மைதான் என்று பெரும்பாலானோர், ஒத்துக் கொள்வதாலும், ஒரு கூட்டம் உண்மை என்று நிறுவ முயற்சிப்பதாலும் தான் இந்த கேள்விகள் எனக்குத் தோன்றியது.

தெரிஞ்சுக்கறதுக்காக கேட்கிறேன். வேற எந்த நோக்கமும் இல்லை.

Geetha Sambasivam said...

"மேலும் இமயம் முதல் குமரி வரை கதைகளெல்லாம் குடுமிகளின் புனைவே. ஒரு கடைநிலை பெயிண்டர் எழுதிச்சென்றதாக இருக்கும் அது. குடுமிகளுக்கு வரலாற்றில் அவ்வளவு ஆர்வமில்லை. சேர சோழர்களை விட்டால் பாண்டியர்கள் அறிந்தது இமயம் அவ்வளவே. "

நண்பர் இசை அவர்கள் கவனத்திற்கு,
உங்கள் எழுத்தில் முரண்பாடு உள்ளதே? ஒருபக்கம் "குடுமிகளின் புனைவு"னு சொல்றீங்க, இன்னொரு பக்கம் குடுமிகளுக்கு வரலாற்றில் அவ்வளவு ஆர்வமில்லைனு சொல்றீங்க. முன்காலத்தில் "குடுமி" அனைத்துத் தரப்பினரும் வைத்துக் கொண்ட ஒன்று என்பதைத் தங்களுக்கு நினைவூட்டத் தேவையில்லை என நம்புகிறேன். :D
இருந்தாலும் வரலாற்று ஆய்வு எழுதிய சிலரின் பெயரை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். "சோழர்கள்" பற்றி எழுதிய "நீலகண்ட சாஸ்திரி"
மற்றும் விஜயநகர சரித்திரமும், இன்னும் பல சரித்திர புத்தக ஆய்வுகளும் செய்த கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார், கேரள, தமிழ் இலக்கிய ஆராய்ச்சி செய்த மு. ராகவ ஐயங்கார், தென் இந்தியக் கோயில்கள் பற்றி எழுதிய பி.வி. ஜகதீச ஐயர், தென்னிந்தியக் கோயில்களின் பொருளாதாரம் பற்றிய ஆய்வு செய்த திருவி.ஜி.ராமகிருஷ்ண ஐயர் போன்றோர், என் நினைவில் வந்த பெயர்கள் மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இன்னும் நிறைய இருக்கலாம். இதனால் தங்களுக்கு ஏதும் மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பையும் கோருகிறேன். :))))))))

Geetha Sambasivam said...

பலூன் மாமா, நான் சொல்லுவதற்கு ஆதாரம் இல்லை, தவறா, சரியா எனத் தெரியாது, ஆனால் சேரர்களும், சோழர்களும் பாண்டியர்களில் இருந்து பிரிந்தவர்களே எனப் படித்திருக்கிறேன். முன்னால் பாண்டியர்கள் மட்டுமே தென்னாட்டை ஆட்சி செய்து வந்ததாயும் தாயாதிச் சண்டைகளால் பிரிந்தவர்கள் சேர நாட்டுக்கும், சோழநாட்டுக்கும் பிரிந்து போய்த் தனி நாடு அமைத்துக் கொண்டதாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன். அதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை, அதனாலேயே சேர, சோழர்களை மீனாட்சி எப்போது வென்றாள் என்ற உங்கள் கேள்விக்குப் பதில் சொல்வதைத் தவிர்த்தேன். அப்போது சேரநாடு, சோழநாடு என்ற பிரிவினை இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லவா? நாடு தாயாதிச் சண்டைகளால் பிரிந்து போவதும் புதிய விஷயம் இல்லையே??? எப்போது எனத் தெரியாத காலத்தில் இருந்தே இருக்கும் ஒரு கோயிலுக்கு இப்போதைய புனர் நிர்மாண வரலாற்றுச் சான்றுகள் தான் கிடைக்கின்றன என்றால் அதைக் கட்டிய காலம் நம்மால் நிர்ணயிக்க முடியாத ஒன்று அல்லவா?

Unknown said...

நந்தா,

வரலாறு மற்றும் புராணங்கள் குறித்தான உங்களின் பார்வை செல்லும் திசையில் பக்த கோடிகள் செல்வார்களா என்று தெரியவில்லை. பக்தி என்பதே கேள்வி கேட்கமுடியாத ஒரு புனிதம்.

கீதா,

கோவிலின் காலத்தை இந்த நடப்பு அறிவியல் காலத்தில் இருக்கும் சாதனங்களின் துணையுடன் கண்டுபிடிக்கமுடியாதா? நிச்சயம் முடியும்.

அப்படி அறிவியலின் துணையை நாடினால் நம்பிக்கைகள் சிதைக்கப்படும், என்பதாலேயே பக்தி அரசியலில் இது போன்ற அறிவியலை அனுமதிப்பது இல்லை.


அனைவருக்கும்,
.....
மதுரை மீனாட்சி கோவில் சுவற்குறிப்பு - முடிவுரை
http://pathivu.madurainagar.com/2007/11/blog-post_29.html