Friday, December 7, 2007

திருப்பரங்குன்றம்- இடமிருந்து வலமாக பவளக்கனிவாய் பெருமாளும் மற்றும் சில தெய்வங்களும்

தி ருப்பரங்குன்றம்! தன்னுள் வரலாற்றின் காயங்களையும், எண்ணற்ற மக்களின் வேண்டுதல்களையும் சுமந்து கொண்டு இருக்கும் ஒரு குன்று.இந்தக் குன்றைப் பற்றி பேசவேண்டும் என்றால் எந்தக் கோணத்தில் இருந்தும் பேசலாம். யாரும் தட்டையாக இதுதான் இதன் 'தல' புராணம் என்று ஒரு சில பக்கங்களில் சொல்லிவிட்டுப்போக முடியாது.சரித்திர/வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஒரு புதையல் கிடங்கு என்பது எனது எண்ணம்.

பலருக்கும் இந்தக் குன்று முருகனின் ஆறுபடைவீடுகளில் முதல்வீடு என்ற வடிவத்தில்தான் அறிமுகமாயிருக்கும்.

குன்றைப்பற்றி கேள்விகள் கேட்க முனைந்தால் ...

  • மலையின் மேல் இருக்கும் சமணப்படுகை பற்றி...
  • மலையின் மேல் இருக்கும் சிக்கந்தர் தர்கா பற்றி...
  • மலையின் தென்புறமும் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைச் சிவன் கோவில் பற்றி (கி.பி 2 ஆம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை சமணர் கோவிலாக இருந்திருக்கிறது)
















  • இபோது இருக்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலும் ஒருகாலத்தில் சமணர்களின் குடைவரைக் கோவிலாக இருந்திருக்குமோ என்ற அய்யங்கள் பற்றி ... (சமணர் கோவிலாக இருந்ததை அழித்து அல்லது மறைத்து ,ஒட்டுமொத்தமாக இந்துத் தெய்வங்கள் அனைத்தையும் சுவற்சிற்பமாக செதுக்கிவிட்டார்களோ என்று சந்தேகம் , கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் வந்தது உண்டு.)

....என்று பல விசயங்களை ஆராயலாம்.

ஆனால் இந்தக் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. மேற்சொன்னவை எல்லாம் ஆராய்ச்சிக்கான விசயங்கள். வரலாற்றின் பாதையில் கட்டுக்கதைகளை நீக்கிவிட்டு ஆராய வேண்டும்.

பக்த கோடிகள் மற்றும் வரலாற்றை அறிந்தவர்களுக்கான கேள்வி.

ஒவ்வொரு கோவிலிலும் கருவறை அல்லது மூலஸ்தானம் அல்லது சன்னிதி என்ற ஒரு தனிப்பட்ட அறை இருக்கும். இந்த அறையில்தான் அந்தக் கோவிலின் கதாநாயக கேரக்டர் இருக்கும். திருப்பரங்குன்றத்தில் அப்படி ஏதும் கிடையாது.

அநேக வீடுகளில் 5 தெய்வங்களின் ஒரே சட்டகத்தில் இருக்குமாறு ஒரு படம் இருக்கும். திருப்பரங்குன்றமும் அப்படியே. இது தனியொரு கேரக்டருக்கான கோவில் இல்லை.

(மேலே உள்ள படத்தில்,பச்சை வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள பாதை அப்பிராணி பக்தர்களுக்கு.நீல வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள பாதை 10 ரூபாய் மொய் செய்பவர்களுக்கு. நீல வண்ணப்பாதையில் சென்றால்தான் (A) மற்றும் (E) கேரக்டர்களைப் பார்க்க முடியும்)

இங்கே...
(A) பவளக்கனிவாய் பெருமாள்
(B) முருகன்
(C) துர்க்கை

(D) கற்பகவிநாயகர்

(E) அர்த்தகிரீஸ்வரர் (சிவன்)
என்று 5 தெய்வ உருவங்கள் உண்டு.


யாருக்கும் தனியாக ரூம்கள் இல்லை. மேலே சொன்ன அனைவருக்கும் ஒரே அந்தஸ்து கொடுக்கப்பட்டே சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கும். அது அந்தக்காலம், அதாவது கோவில் சிற்பத்தை செதுக்கியவர்களின் காலத்தில்.

இப்போது முக்கியத்துவம் எல்லாம் முருகனுக்கே. அதுவும் (A) பவளக்கனிவாய் பெருமாள் மற்றும் (E) அர்த்தகிரீஸ்வரர் இருவரும் பக்தகோடிகளுக்கு நேரடிப்பார்வை அளித்துவிடாவண்ணம் அல்லது முருகனுக்கு மட்டுமேயான கூட்டத்தை ஒதுக்கி வழிவிடுவதற்காக (A) & (B) க்களை ஓரம் கட்டி இருப்பார்கள். அதற்கு சாட்சியாக இருப்பது (A) & (B) மறைத்து கட்டப்பட்டுள்ள சுவர்.மக்களை ஏமாற்றும் வண்ணம் இந்தச் சுவர் கற்களுக்கு இணையாண வண்ணம் பூசப்பட்டு இருக்கும். அதை அறிந்து கொள்ள ஆராய்ச்சிப்பார்வை எல்லாம் தேவை இல்லை. அருகில் இருந்து பார்த்தாலே தெரிந்துவிடும்.

அர்ச்சனைத் தட்டை கொடுத்தால் "எந்த கேரக்டருக்கு அர்ச்சனை?" என்று கேட்பதே இல்லை. எந்தெப் பெயருக்கு என்று கேட்டுவிட்டு நேரே முருகனுக்குப் போய்விடும். "முருகனைப் பார்க்க வரவில்லை, துர்க்கவிற்காக வந்தேன்" , என்றால் அர்ச்சகரால் நீங்கள் டேப்பராகப் பார்க்கப்பட வாய்ப்பு உண்டு. மேலும் இங்கே முருகன் என்ற ஒரு கேரக்டருக்காக கொண்டாடப்படும் விழாக்கள் போல சம அந்தஸ்தில் உள்ள மற்ற கேரக்டர்களுக்கு விழாக்கள் கொண்டாடப்படுவது இல்லை.


கேள்விகள்:

(1). 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?

(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?

(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?


தகவலுக்காக:

திருப்பரங்குன்றம் - தலவரலாறு
http://sriramprasath.blogspot.com/2007/01/blog-post.html

திருமலையின் மதுரை சமணக்குகைகள் குறித்தான பதிவுகள்


மதுரை சமணக் குகைக் கோவில்கள் - ச. திருமலை
http://www.maraththadi.com/article.asp?id=2696

மதுரை சமணர் பள்ளிகள், குகைகள், சிற்பங்கள், குன்றுகள்-
தொடர்ச்சி... - ச. திருமலை

http://www.maraththadi.com/article.asp?id=2698

மதுரை சமணர் பள்ளிகள், குகைகள், சிற்பங்கள், குன்றுகள்-
தொடர்ச்சி... - ச. திருமலை

http://www.maraththadi.com/article.asp?id=2699

மேலக்குயில்குடி சமணர் குன்று, குகை, திருப்பரங்குன்றம்
சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், சமணர் குகைக் கோவில் மற்றும் படுக்கைகள் - ச. திருமலை

http://www.maraththadi.com/article.asp?id=2708

**

கல்லில் ஊரும் காலம் -எஸ்.ராமகிருஷ்ணன்
http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=17&fldrID=1

தமிழ்நாட்டின் தொடக்கக் காலக் கலை வரலாறும் குடைவரைகளும் -மு. நளினி
http://www.varalaaru.com/Default.asp?articleid=416


Picture Courtesy:
www.madurawelcome.com
http://thiruparankundram.blogspot.com/2007/04/blog-post_06.html

22 Comments:

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்ம்ம்???????? திருமுருகாற்றுப் படையை மறுபடி படிக்கணும். தெரியாமல் வந்து பேச முடியாது. தெரிந்து கொண்டு வரேன். அதுவரை மற்றவர் கருத்துக்குக் காத்திருக்கும்

Unknown said...

கீதா,
என்னத்தைப் படிச்சு என்ன செய்யப் போறீங்க? :-(( .எனது அனுபவத்தில் எந்த மதம் சார்ந்த பக்தகோடிகளும் உண்மைகளை அறியத் தயாராய் இருப்பது இல்லை.

பதினெட்டுப்படிகளின் பெருமையை எழுதும் நீங்கள், அதே படியில் செல்வதற்கு பெண்ணின் தாய்மைத் தன்மைக்கு ஆதாரமான விசயங்களைச் கொச்சப்படுத்தி பெண்களைத் தடை செய்யும் கேவலங்களை மறந்தும் சொல்ல மாட்டீர்கள். கேட்டால் அதைச் செய்வது நிர்வாகம், கடவுள் அல்ல என்பீர்கள்.

அப்படிப்பட்ட கேவலமான நிர்வாகத்தில் ஏன் கடவுள் இன்னும் இருக்க வேண்டும்? என்றால் பதில் இருக்காது.

கடவுளை நம்புபவர்களை , அவர்களின் நம்பிக்கை சார்ந்த எந்த விசயத்தையும் கேள்வியால் மாற்றிவிட முடியாது. ஏன் என்றால் அவர்கள் அதற்கும் ஒரு கதை வைத்து இருப்பார்கள்.

என்னவோ போங்கள்......

மதுரையில் இருக்கும் சில கோவில்களின் வரலாற்றுக் குழப்பங்களை கேட்டு வைக்கிறேன் அவ்வளவே. :-((( மற்றபடி பக்தர்களிடம் நேர்மையான பதில் வருமா என்று தெரியாது.

பாச மலர் / Paasa Malar said...

கல்வெட்டு சார்,

திருப்பரங்குன்றம் படத்துக்கும் செய்திகளுக்கும் நன்றி...

நான் கூட நினைத்ததுண்டு..துர்கைதான் நேர் சன்னதி...துர்கை கோவிலாகத்தான் இருந்ததாகவும், சூரன் வதத்துக்குப் பின் நிலைமை திருப்பி (மாற்றி) வைக்கப் பட்டதால் தென்பரங்குன்றம் மாறித் திருப்பரங்குன்றம் ஆனதாக..

(உங்கள் கேள்விக்குத் தொடர்பு இல்லாத விளக்கம்தான்..)

நம்ம ஊரைப்பற்றிய விளக்கங்கள் தெரிந்து கொள்ள உதவிய இந்தப் பதிவுக்கு நன்றிகள் பல..

Geetha Sambasivam said...

எங்கே இருந்து எங்கே போறீங்க பலூன் மாமா, பெண்ணின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படும் அந்தச் சமயங்களில் பூரண ஓய்வு தான் அவளுக்குத் தேவை என்பது விஞ்ஞான ரீதியாகவே நிரூபிக்கப் பட்ட ஒன்று. காலமாற்றங்களால் இன்றைய பெண்கள் வேலைக்குச் செல்ல நேரிட்டு இருக்கிறது. அதுக்கே எத்தனை பெண்கள் சிரமப் படுகின்றனர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கழிவறைக்குச் சென்றுவிட்டுக் கால் கழுவாமல் வீட்டுக்குள் வருவோமா? அதே மாதிரியான ஒரு காரணம் தான் இதுக்கும். உடல் அசுத்தத்தோடு கோவிலுக்குச் செல்ல எந்தப் பெண்ணும் ஒத்துக் கொள்ள மாட்டாள். இதற்கு நீங்கள் மதத்தைக் காரணம் காட்டினால் என்ன செய்வது? நிர்வாகத்துக்கு இதை நான் காரணம் காட்டவும் முடியாது. இது பெண்களே ஒத்துக் கொண்ட ஒரு விஷயம். மற்ற நாட்களில் பெண்கள் செல்ல எந்தத் தடையும் இல்லை என்பதையும் நினைவு கூருங்கள். அது ஏன் பிடிவாதமாய் அவ்வாறு ஒரு பெண் இருக்கும் சமயத்தில் கூட கஷ்டப் பட்டு மலை ஏறிச் சாமி தரிசனம் செய்தால் தான் பெண்மையைக் கெளரவப் படுத்தியதாகவும், பெண்ணின் உரிமை நிலைநாட்டப் பட்டதாயும் நினைக்கிறீர்கள் என்று யோசித்துப் பார்த்தால் குழப்பம் தான் மிஞ்சுகிறது. ரத்த வாடைக்குக் காட்டு மிருகங்கள் வேறே வரும். இன்னும் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. பருவ வயதுப் பெண்கள் சென்றால் ஆண்களின் மனமோ, பெண்களின் மனமோ சலனம் அடையக் கூடிய சாத்தியக் கூறு உண்டு. இது ஒன்றும் வேண்டுமென்று யாரும் செய்தது இல்லை. ஆண்களே வரக்கூடாது என ஒரு பண்டிகையும், பெண்கள் மட்டுமே பங்கு கொள்ளும் ஒரு விழாவும் இருக்கிறது. அது பற்றியும் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஆகவே எதுவுமே அவங்க அவங்க மனம் சார்ந்தது. பெரும்பான்மையான பெண்கள் ஏற்றுக் கொள்ளும் போது பகுத்தறிவு வாதிகள் பிடிவாதமாய்ப் பெண்கள் அதுவும் இளம்பெண்கள் தங்கள் கஷ்டமான நாட்களில் கூட மலைப் பிரயாணம் செய்து போய் சாமி தரிசனம் செய்வது தான் சரி எனச் சொல்லுவது ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை!

Geetha Sambasivam said...

அப்புறம் கேவலமான நிர்வாகத்தில் கடவுள் இருக்கவில்லை, நிர்வாகத்தைக் கேவலம் ஆக்கியது, அரசியல்வாதிகள் தான். அதை மறந்து விடாதீர்கள்.

Anonymous said...

//பருவ வயதுப் பெண்கள் சென்றால் ஆண்களின் மனமோ, பெண்களின் மனமோ சலனம் அடையக் கூடிய சாத்தியக் கூறு உண்டு. //

மன்னியுங்கள் கீதா. இந்த வார்த்தைகளில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை. பெண்கள் பர்தா அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும் என்று காலம் காலமாக கத்திக் கொண்டிருப்பவர்களும் இதே வார்த்தைகளைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேல் இதை பற்றி பேசினால் பதிவின் நோக்கம் திசை மாறும் வாய்ப்பு அதிகம். அதனால இதோட ஜூட்.

Unknown said...

கீதா,
எங்கிருந்தோ எங்கோ போனதற்கு மன்னிக்க! அந்த உதாரணம் , நீங்கள் (பக்தியாளர்கள்) என்னதான் படித்தாலும் உங்களின் நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துவது இல்லை.

உங்களின் விளக்கம் எதிர்பார்த்ததுதான்.

சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

Unknown said...

பாச மலர்,

திருப்பரங்குன்றத்திற்குத்தான் "தென்பரங்குன்றம்" என்ற இன்னொரு பெயரா ?

அல்லது அதன் பின்புறம் உள்ள, குடைவரைக் கோவில் உள்ள குன்றிற்குத்தான் தென்பரங்குன்றம் என்ற பெயரா ?

குடைவரைக்கோவில் உள்ள இடமே (குன்றே) தென்பரங்குன்றம் என்பது எனது எண்ணம்.

***

வியாபார ரீதியாக முருகபத்தி விற்கப்படும் இடம் திருப்பரங்குன்றம் என்பதையும் தாண்டி அந்த குன்று பற்றி நிறைய தகவல்கள் உள்ளது.

இணையத்தில் கிடைக்கும் சில தகவல்களை "தகவலுக்காக
"
என்று தலைப்பில் மேலே பதிவிலேயே புதிதாக இணைத்துள்ளேன்.

உங்களின் தேடலுக்கு உதவும் என்ற எண்ணத்தில்.

பாச மலர் / Paasa Malar said...

இப்போதும் மலையின் பின்பகுதி தென்பரங்குன்றம் என்றே அழைக்கப்படுகிறது..

ஊர் மொத்தமும் அப்படி முன்னால் அழைக்கப்பட்டது என்பது என் மூதாதையர் வழியாக நான் அறிந்த செவி வழிச் செய்தி...தகவல் சரியா என்று தெரியவில்லை..

ramachandranusha(உஷா) said...

கீதா,
எங்கிருந்தோ எங்கோ போனதற்கு மன்னிக்க! அந்த உதாரணம் , நீங்கள் (பக்தியாளர்கள்) என்னதான் படித்தாலும் உங்களின் நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துவது இல்லை//

கல்வெட்டு என்னா சொல்றீங்கோ :-)
எப்பொழுது மனதில் கேள்விகள் எழுகின்றதோ, அப்பொழுதே அனைத்து மதநம்பிக்கைகளும் நீர்த்து
விடுமல்லவா?
"ஆடுகள் தம்மை ஆடுகள் என்று உணரும்பொழுது, அவை மந்தையில் இருந்து விலகிவிடுகின்றன"
-கலீல் கிப்ரான் (இந்த மேற்கோள் இங்கு சரியான்னு தெரியலை :-)

Geetha Sambasivam said...

"எப்பொழுது மனதில் கேள்விகள் எழுகின்றதோ, அப்பொழுதே அனைத்து மதநம்பிக்கைகளும் நீர்த்து
விடுமல்லவா? "
"ஆடுகள் தம்மை ஆடுகள் என்று உணரும்பொழுது, அவை மந்தையில் இருந்து விலகிவிடுகின்றன"


உங்கள் மேற்கோள் சரியோ, தப்போ, உஷா, உங்களுக்குப் புரியவில்லை என்றே நினைக்கிறேன். ஆடுகளாகவே இருந்துவிட்டுப் போகலாமே! கேள்விகள் நிறைய மத நம்பிக்கைகளிலும் எழுந்துள்ளன. பதில்களும் கிடைத்துள்ளன. நீங்கள் படிக்காமல் இருந்திருக்க முடியாது. கேள்விகள் எழுவதாலேயே, பகுத்தறிவு எனச் சொல்லவும் முடியாது. பலூன் மாமா சொன்னதுக்கு இன்னும் எழுதலாம், இருந்தாலும் பதிவின் நோக்கம் மாற வேண்டாம் என்பதால் நான் நிறுத்திக் கொள்கிறேன்.

Geetha Sambasivam said...

கருத்துச் சொல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றி பலூன் மாமா! உங்கள் அடுத்த வாதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! :)))))

Geetha Sambasivam said...

நீங்கள் குறிப்பிட்டிருந்த சுட்டிகளில் உள்ளவை எல்லாம் நான் ஏற்கெனவே படிச்சது தான் பலூன் மாமா, புதிசா ஒண்ணும் இல்லை. நீங்க சொன்ன மாதிரி இது பத்தி மேலே தொடர வேணாம்னே நானும் நினைக்கிறேன், நன்றி. :D

ramachandranusha(உஷா) said...

கீதா, யாருடைய நம்பிக்கையையும் நான் இகழ்ந்தது இல்லை. எனக்கு நம்பிக்கையில்லை. இதை நான் பகுத்தறிவு என்று சொல்ல மாட்டேன். கடவுள் என்ற உருவங்கள், பூஜை, சாங்கியங்கள் இவைகளில்
நம்பிக்கையில்லை. என் சிறு வயதில் இருந்தே, ஏன் என்ற கேள்வியைக் கேட்டே வளர்ந்தேன்.
என் மகளுக்கு இருபது வயது, மகனுக்கு பதினாறு. அவர்களும் ஏதீஸ்ட் என்று சொல்லிக் கொள்வார்கள்.
என்னைவிட, அதிக குப்பைகளைப் படிக்கிறார்கள் :-)
என் வழியில் நடப்பதை பார்த்து இன்று எனக்கு சந்தோஷமே. நாளை அவர்கள் கும்பிட ஆரம்பித்தால் நான் எந்த தடையும் செய்ய மாட்டேன்.

கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் எத்தனை வன்முறைகள்? இன்று உலக நாடுகளில் பிரச்சனை
உடைய நாடுகள், இடங்கள் குறித்து சொல்லுங்கள். அனைத்துக்கும், ரத்த ஆறு ஓடுவதற்கும் மதமும்,
இந்த நம்பிக்கைகளும் தானே காரணம்?
இதை பேச ஆரம்பித்தால், முடியாத கதையாய் போகும். நன்றி

சாலிசம்பர் said...

நல்ல பதிவு கல்வெட்டு.சமணம்,புத்தம் போன்ற மதங்களில் சாதிக்கு இடமில்லை,அதனால் அம்மதங்களுக்கும் இங்கு இடமில்லாமல் போய்விட்டது.அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று போராடுவது கூட இரண்டாயிரம் வருட பாரம்பரியத்தின் தொடர்ச்சி தான்.

சமண மதத்தின் பெருமைகளை மறைக்கும் செயல் தான் கீழே இருக்கும் முருகன் கோவில், இதில் சந்தேகமேயில்லை.நீங்கள் விரும்புவது போல் வரலாறை தோண்டித்துருவினால் இந்துமதம் எனப்படும் பிராமண மதத்தின் நாற்றமெடுக்கும் பக்கங்கள் வெளிச்சத்திற்கு வந்துவிடுமே?

பாச மலர் / Paasa Malar said...

சுட்டிகள் கூறிய செய்திகள் ...அதிலும் திருமலை அவர்கள் விவரித்த‌ முறை மிகவும் நன்றாய் இருந்தது...

வரலாறுகள் இப்படித்தான் இருக்குமோ? எது உண்மை என்று தெரிய வாய்ப்புகள் மிகவும் குறைவு..ஆராய ஆராயக் கேள்விகள்தான் அதிகமாகுமே தவிர பதில்கள் கிடைக்கப்போவதில்லையென்றே தோன்றுகிற‌து..

Sridhar V said...

நல்ல பதிவு.

நீங்கள் சொல்வதை பார்க்கும் பொழுது அது சமணர் கோவிலாக இருக்க வாய்ப்புகள் அதிகம்தான்.

இன்னும் கொஞ்சம் நுணுக்கி பார்த்தீர்களென்றால் சமணம், பௌத்தம், சாக்கியம், காபாலிகம், சைவம், வைணவம் என்று பல வெவ்வேறு வழிமுறைகள் பின்னர் ஒன்றாக கலந்திருக்க கூடும்.

அடிப்படையில் ஆப்ராகிமிய மதங்கள் (யூத, கிறித்துவ, இஸ்லாமிய) மற்றும் பாகனிய மதங்கள் என்று இரு எதிரெதிர் கூறுகளாகவும் கொள்ளலாம்.

enRenRum-anbudan.BALA said...

நல்ல சுவாரசியமான பதிவும், பின்னூட்ட விவாதமும் !

கீதாவின் விளக்கம் சரியாகவே பட்டது !

மற்றபடி, Not getting into any argument, ஏனெனில், நான் கொஞ்சம் பிஸி (காரணம்: நட்சத்திர வார பதிவு/பின்னூட்டப் பணி :))

எ.அ.பாலா

Unknown said...

உஷா,
உங்களின் கருத்ததைப் பகிர்ந்தமைக்கு நன்றி! வாய்ப்பு வரும்போது விரிவாகப் பேசலாம். உங்களின் எழுத்துகள் வழியாக உங்களின் கருத்துகளை ஓரளவு அறிவேன். இந்தக் குழுப்பதிவில் நான் மேற்கொண்டு அந்த விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை.

ஜாலி ஜம்பர்,
சமண மதத்தின் அடையாளங்களை அழித்தது மிகப்பெரிய வரலாற்றுக் கொலை.

ஆன்மீக அரசியலில் மாற்றுக் கருத்துக்களை ஏற்க முடியாமல் ஒன்று மற்றவைகளை அழிப்பது மிகவும் சாதாரணமான ஒன்று.

பாச மலர்,
வரலாறு இப்படித்தான் இருக்கும். கேள்விகள் கேட்பது உங்களை உண்மைக்கு அருகில் கொண்டுபோய் நிறுத்தும். ஆனால் உண்மை என்பது காலம் மட்டுமே உணர்ந்த ஒன்று.

என்றென்றும் அன்புடன் பாலா,
கீதாவின் விளக்கம் உங்களுக்கு ஆச்சர்யமாய் இருந்தால்தான் மேட்டர். அவருடன் நீங்கள் ஒத்துப்போவது அதிசியமல்ல :-)

கருத்துப் பகிர்விற்கு அனைவருக்கும் நன்றி



திருப்பரங்குன்றம்-கேள்விகள் முடிவுரை

திருப்பரங்குன்றம- முருகனும் அவனுக்கு பக்கத்தில் சிலரும் அனைவருக்கும் தெய்வம் என்று பெயர் அல்லது தெற்கே சமணத்தின் நினைவுச்சின்னம்

http://pathivu.madurainagar.com/2007/12/blog-post_10.html

Unknown said...

வெங்கட்
திருப்பரங்குன்றம் சமணர்களின் நினைவுச்சின்னமாகிவிட்டது. :-)

ஆபிரகாமிய மதங்கள் மற்றும் பாகனிய மதங்கள் ஒற்றுமை/வேற்றுமை விரிவான ஆராய்ச்சிக்கு உட்பட்டது.

Vino said...

this is very very late comment.. i have seen many other temple being converted into this category.. Finest eg. would be Kanchipuram.. during Mahendra Verma's period it was considered capital of Jain religion.. all temple were already transformed into some other religion now.. the list are end less Thiruvannamalai which I saw vividly there are few other places too . Thirukural discusses the first 10 kurals are worshiping Jain gods.
The list are endless. If we look back history neutrally many plagiarism can be revealed! with respect Jain history in Tamilnadu especially.

சித்திரவீதிக்காரன் said...

திருப்பரங்குன்றத்தில் மலையைச் சுற்றி வருமிடத்தில் (ரயில்நிலையம் பக்கம்) மலையில் சில சிறுகுகைகள் தெரியும். அங்கு செல்வதற்கு படிக்கட்டுகளும் இருப்பது தெரியும். அங்கே சமணர்படுகைகளும், கல்வெட்டுக்களும் காணப்படுகிறது.