Wednesday, January 9, 2008

மருத # 2. (மதுரை)

மதுரையில் கடந்த 2006ஆம் ஆண்டில் கோர்ட் உத்தரவின் பேரில் பல அனுமதி பெறாத இடங்கள் இடிக்கப்பட்டன, பல கட்சி கொடிகம்பங்களும், மன்றங்களும், வைரம் பாய்ந்த பல மரங்களும், கோவில்களும் தப்பவில்லை. அனுமதி பெறாத இருபது அடி உயர கோபுரங்களை கொண்ட கோவில்களும் புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டது. பல ரோட்டு கோவில்கள் உள்தெருவில் தஞ்சம் புகுந்தது. பல கடைகள் தயவில்லாமல் குப்பகள் ஆகப்பட்டன.

அச்சமயத்தில் மதுரை அரசமரமும் இதில் ஒன்றாகி விடுமோ என்று பயந்த பல பக்தர்கள் அவ்வாலயம் காக்க வேண்டும் என்று அவனையே வணங்கி வந்தனர். தற்போது காமராஜர் சாலையில் அரசமரம் பிள்ளையார் கோவில் தவிர மற்ற சிறிய, பெரிய கோவில்களனைத்தும் நடவடிக்கை மூலம் மறை(ற)ந்து போயின.பல பள்ளி மாணவர்களின் இஷ்ட தெய்வமான இந்த விநாயகரின் ஆலயத்தில் சிவராத்திரி சமயத்தில் நடக்கும் கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலமானவை. திருமுருக. கிருபானந்தவாரியர் அவர்களின் சொற்பொழிவுகள் இவ்வாலயத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் டி.எம்.எஸ். போன்ற புகழ் பெற்ற பாடகர்களும், தமிழ், சௌராஷ்டிரா நாடகங்களும், அரங்கேறி வந்துள்ளது. பல கச்சேரிகளும், பட்டிமன்றங்களும், பல இசை வல்லுனர்கள் இங்கே வந்து இசைத்து அரசமரம் கணேச பெருமானின் அருள் பெற்றுள்ளனர், மேலும் திரு. தா.கு.சுப்ரமணியன், திரு. ராஜா போன்ற பேச்சாளர்கள் பலவிதமான தலைப்புகளில் எண்ணற்ற சொற்பொழிகளை ஆற்றியுள்ளனர். ஏ.ஜி.எஸ். ராம்பாபு போன்ற பல அரசியல் பிரபலங்கள் பலரும் இக்கோவிலில் வந்து வணங்கி வழிபட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி நாளில் இங்கே மண்ணால் செய்து வணங்கப்படும் விநாயகர் இராமேஸ்வரம் கடலில் சென்று கரைக்கப்படுவது மேலும் ஒரு சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.

அப்பேற்பட்ட மிகவும் வலிமைவாய்ந்த, புகழ்பெற்ற இக்கோவிலின் படம் சில நட்களுக்கு முன் இணையத்தில் கிடைத்தது. ஒரு பொங்கல் பண்டிகையின் போது எடுக்கப்பட்ட படம் என்று அதில் குறிப்பிருந்தது.

சாதிமத பேதமில்லாமல் பல சமூக மக்கள் சென்று வழிபடும் மற்றுமொரு கோவில். மதுரை பேச்சியம்மன் கோவில் பல வேற்றுமதத்தவர்களும் இங்கே வந்து அம்மனை வேண்டி தொட்டில் கட்டுகின்றனர்.

இங்கே கட்டப்பட்ட தொட்டில் வீட்டிலும் விரைவில் ஆடுகிறது என்று பலர் சொல்ல கேட்டுள்ளேன். மேலும் ஆண்குழந்தை வரம் வேண்டுவது இக்கோவிலின் முக்கியம்சமாகும். ஆடி மாதம் மற்றும் மார்கழி மாதத்தில் செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் எல்லா நாட்களிலும் இக்கோவிலில் கூட்டம் கூடுகிறது. நானும் கடந்த 1997-98ல் ஒவ்வொரு வாரமும் தவறாமல் இக்கோவிலுக்கு சென்று வழிப்பட்டுள்ளேன்.

நாயக மன்னர் காலத்தில் பல கோவில்கள் உருவாகப்பட்டன, இன்று அவர்களது பெயர்களை சொல்லும் சான்றுகளாக நிமிர்ந்து நிற்க்கின்றன. அப்பேற்பட்ட கோவில்களுள் ஒன்று ஹயகிரீவர் கோவில். மதுரை கூடலழகர் கோவிலருகில் இருக்கும் இக்கோவில் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல் இக்கோவில் சிறிதானாலும் இதன் கீர்த்தி பெரிது. மஹாவிஷ்ணுவின் முதல் வடிவம், முதல் அவதாரமாக கருதப்படும் ஹயகிரீவர் தான் திருபதி ஏழுமலையானுக்கு அங்கே இடமளித்தவர் என்று ஸ்ரீநிவாச ஸ்தல புராணம் சொல்கிறது மேலும் அங்கே முதலில் அவருக்குதான் பூஜை வகைகள் செய்யப்படுகின்றன.

மதுரை தெப்பக்குளம். கடந்த 1990-1995 தெப்பகுளம் பகுதியில் இருக்கும் தியாகராஜ நன்முறை மேல்நிலை பள்ளியில் உயர்-பள்ளி படிப்பை படித்து வந்த போது காலையில் நடைபெறும் தெப்போற்ச்சவம் கண்டாலும் இரவில் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பகுளத்தையும், நடைபெறும் தெப்போற்ச்சவத்தையும் காண்பதுண்டு. இப்படத்தை கண்டபோது இது போன்ற பழைய நினைவுகள் கண்கள் முன் நிழலாடின.
நான் விளையாடி திரிந்த மதுரை, இது தான் என் எல்லை என்றிருந்த என்னை, உயர் பள்ளி படித்த சமயத்தில் என்னை முக்தீஸ்வரரின் மடியில் கொண்டு சென்றாள், அதுவும் மதுரை எல்லையில் தான் என்றாலும் இந்த எல்லையில் அல்ல, வேலையில் அமர்ந்ததும் முதலில் இந்த (படத்தில் உள்ள்) எல்லையில் தான்.

பிறகு நானிருப்பது தற்சமயம் இருப்பது தில்லி என்று பலருக்கும் தெரிந்த விஷயம்.

இதோ வெளிவீதீயை எல்லைகளாக உள்ளடக்கிய படம்

இப்படம் கடந்த டிசம்பரில் கிடைத்தது இதில் இருந்து தான் மீனாக்ஷி அம்மன் கோவிலை தனியாக எடுத்து பதித்திருந்தேன். இப்போது முழு படத்தையும் இங்கே பதிக்கிறேன். மதுரையின் சுற்றுலாஇடங்களில் சில முக்கிய இடங்களை இங்கே இப்படத்தில் பார்க்கலாம்.

1. மீனாக்ஷி அம்மன் கோவிலை மையமாக கொண்டு வடிவமக்கப்பட்ட மதுரை மாநகர்.
2. வெளி வீதீயை எல்லையாக கொண்ட படமாக இது உள்ளது. மேலும்,
a) திருமலை நாயகர் மஹால்,
b) மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள
மதுரை சென்ட்ரல் காய்கறி மார்கெட்
ஆவில் பூங்கா
c) தெற்காவணி மூலவீதியில் உள்ள மதுரை ஆதினம்
d) பிற கோவிலகளான ஜடாமுனீஸ்வரர் கோவில்
e) கூடல் அழகர் கோவில்
f) தெற்க்கு கிருஷ்ணன் கோவில்
g) வடக்கு கிருஷ்ணன் கோவில்
h) தென் திருவால சுவாமி கோவில்
i) டவுன் ஹால் ரோட்டில் உள்ள கூடல் அழகர் கோவிலின் தெப்பக்குளம் (தற்சமயம் இதில் மழைநீர் தேக்கிவருகிறார்கள்)
j) தெற்கு மாசிவீதியில் உள்ள பழமை வாய்ந்த புகழ்பெற்ற மசூதி,
k) வெளிவீதியில் உள்ள (+) சிலுவைவடிவில் அமைய பெற்ற புனித மரியன்னை தேவாலயம் (St. Mary’s Church).
3. படத்தில் இடப்பக்கம் உள்ள ரயில் தண்டவாளங்கள்.
4. ‘டி.வி.எஸ்’ நிறுவனத்தின் தலைமை அலுவலகம். “TVS” என்று பொறித்திருப்பதும் படத்தில் தெளிவாக இருக்கிறது.
5. தெற்க்கு வெளிவீதியில் உள்ள காவலர் வீட்டு வளாகம்.
6. மேலும் உங்களின் விருப்பமான இடங்களும், மற்ற இடங்களும் இப்படத்தில் காண்டு கொள்ளலாம்.

Highlights of the Satellite photo,

1) Shows the Temple as Center
2) Shows the other major temples and places in Madurai within the area of Veli street like
a) Thirumalai Nayakar Mahal,
b) Central Market Avin Park Near to the Meenakshi temple
c) Madurai Adhinam in South Avani Moola street.
d) Other Temples also like Jadamuneeshwara temple
e) Koodal Azhagar Temple
f) South Krishnan Temple(South Masi Street)
g) North Krishnan Temple (North Masi Street)
h) Then Thiruvalavay temple
i) Koodalazhagar temple’s Teepakkulam in Townhall road
j) Masque in South Masi Street
k) Church in South Veli Street (in + “Cross” shaped building in right corner)

3) Rail way line in left
4) TVS work shop in bottom left with ‘TVS’ name in the top of the building.
5) Police quarters in South Veli Street
6) You can also spot your place or any other place in the picture.
மேலும் ஒரு படம் 1794 (1974 அல்ல)ல் தீட்டப்பட்ட ஒரு படம் வடபகுதியில் இருந்து தென் பகுதியை காணும் சமயத்தில் எப்படி தெரிந்தது என்று காட்டும் ஒரு அருமையான படம் மீனாக்ஷி அம்மன் கோவில் ஒரு புரமும், நாயகர் மஹால் மறுபுரமுமாக வைகையில் யானையும் ஒட்டகங்களும் கொண்டு கடக்கும் வியாபாரிகள், என்று இருநூற்றாண்டுகள் பழமை வாய்ந்த படம், உங்கள் பார்வைக்கு.

மர நிழலில் இளைப்பாறும் வழிப்போக்கர்கள், மீனாட்சி அம்மன் கோவிலின் நான்கு உயர்ந்த கோபுரங்கள் மேலும் மூன்று சிறிய கோபுரங்கள், திருமலை மன்னரின் அரண்மனை(மஹால்), சாரை சாரையாய் காட்டு வழியில் குதிரைகளுடனும், ஒட்டகங்களுடனும் ந(க)டக்கும் வியாபாரிகள், வீரர்கள். தரையை தொட ஆவலாய் இருக்கும் ஆல விழுதுகள். தூ...ரத்தில் மதுரையை சுற்றி வளைக்க துடிக்கும் மலைகள் என 1858ல் வரையப்பட்ட இந்த படம், மிகவும் அழகாக இருந்தது.

காணகிடைக்காத படங்கள் உங்கள் பார்வைக்கு.

மருத தொடர் இத்துடன் நிறைவடைகிறது.

படத்தை சொடுக்கினால் பெரிதாகும். தங்களது கணினியில் சேமித்து வைத்து அதை மேலும் ‘ஜூம்’ செய்தால் ஓரளவுக்கு தெளிவாக காணாலம்.

5 Comments:

cheena (சீனா) said...

தம்பி சிவ முருகன், படங்கள் அருமை. தேடித் தேடி புதையல் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள். மதுரையை மறக்க முடியாமல் பசுமை நிறைந்த நினைவுகளை, படங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். விளக்கங்களும் அழகாகக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. படித்து மகிழ்ந்த பதிவு. வாழ்த்துகள்

சிவமுருகன் said...

சீனா ஐயா,

மிக்க நன்றி.

தருமி said...

அந்த இரண்டு படமும் time machine-ல் போன உணர்வைக் கொடுக்குது.

பாச மலர் / Paasa Malar said...

மீண்டும் படங்கள் பார்க்க முடியவில்லை..சரி இருக்கட்டும்..ஊருக்கு வரும்போது பார்ர்த்துக் கொள்கிறேன்.

இராம்/Raam said...

//அந்த இரண்டு படமும் time machine-ல் போன உணர்வைக் கொடுக்குது.//

எனக்கும்தான்.. :)

//பாச மலர் said...

மீண்டும் படங்கள் பார்க்க முடியவில்லை..சரி இருக்கட்டும்..ஊருக்கு வரும்போது பார்ர்த்துக் கொள்கிறேன்.//

அக்கா,


Firefox plug-in உபயோகப்படுத்தி தடை செய்யப்பட்ட பகுதியிலும் படங்களை பார்க்கலாம்... தனி மெயில் அனுப்பி வைக்கிறேன்.. :)