Thursday, January 10, 2008

கொஞ்சம் இனிமை - கொஞ்சம் பொறாமை

மதுரை திருநகரில் ஆறாவது பேருந்து நிறுத்தத்தில் உள்ள "அமலா பெத்தண்ணல் மாண்டிசோரிப் பள்ளி"யில்தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். பின் ஆறாவது முதல் பள்ளியிறுதி வரை மூன்றாம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள "சீதாலட்சுமி பெண்கள் மேல் நிலைப்பள்ளி"யில் படித்தேன். ஒவ்வொரு முறை ஊர் செல்லும் போதும், இப்பள்ளிகளையும் அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் பார்க்க நேரிடும்.

அப்போதெல்லாம் இனம் புரியாத ஓர் இனிமை கலந்த பொறாமை. அவை பலவிதச் சூழல்களில் மாறி நிற்கும் பள்ளிகள் இப்போது.என்றாலும் அந்தப் பகுதிகளைக் கடக்கும் போது இழுத்துப் பிடித்தாலும் பின்னோக்கிச் செல்லும் மனம். பாவாடை, தாவணிக் காலங்கள் போய் சுடிதார் சீருடையாகிய காலம் இப்போது. பள்ளிப் பேருந்திலேயே திருப்பரங்குன்றத்திலிருந்து சென்ற காரணத்தால் அமலா பள்ளிக் காலங்களில் வெளியுலகம் சுற்ற வாய்ப்புகள் அவ்வளவாக இருந்ததில்லை. காலையில் முதல் ட்ரிப்பிலும், மாலையில் இரண்டாம் ட்ரிப்பிலும் சென்ற துரதிர்ஷ்டம் திருப்பரங்குன்றச் சிறுவர் சிறுமியர்க்கு.

இரண்டாவது ட்ரிப் பிள்ளைகள் வரும் வரை மரத்தடியில் இருப்போம். சில சமயம் தரையில் சிதறிக் கிடக்கும் வேப்பங்கோட்டை, வேப்பம்பழம் சேகரிக்கச் சொல்வார்கள். உள்ளங்கையை மடக்கிக் கொண்டு, வேப்பங்கொட்டையை நடுவிரல் மேல் வைத்து, அடித்து
உடைத்துக் கையை மூன்று முறை சுற்றி ஏதோ விளையாட்டு விளையாடிய ஞாபகம். விரல் மேல்சிறு தீற்றலாய்க் கோடிடும் ரத்தம் பார்க்கையில் பயம் கலந்த ஒரு மகிழ்ச்சி.
வேப்பம்பழங்களைச் சுவைத்துத் தின்ற ருசி இன்னும் நினைவில் உள்ளது. அப்பழக்கம்
அதிகமாகி, ஸ்கர்ட்டில் இருக்கும் பாக்கெட்டில் அவற்றைச் சேகரித்து வீட்டிற்கும் கொண்டு வந்து தின்று, அடிக்கடி கண்வலி வந்து, வீட்டார் காரணமறிந்து கொடுத்த உதைகள் மறக்க முடியுமா என்ன?

உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகளைச் சேகரித்து வைத்து ஜோடி சேர்த்து விளையாடும் ஆட்டம் ஒன்று அடிக்கடி விளையாடுவோம். பூக்களடர்ந்த பிளாஸ்டிக் கூடைகள்தான் புத்தக மூட்டைகள் அப்போது. கண்ணாடி வளையல்களுக்குப் பண்டமாற்றாய்ப் பூக்களை பிளேடால் வெட்டித் தோழியிடம் கொடுத்து, பின் வீட்டார் எனக்குத் தெரியாமலேயே பள்ளியில் அதைப்
புகார் செய்ய, ஒரு இனிய காலை நேரப் ப்ரார்த்தனை நேரத்தில் கூடியிருந்த பள்ளிச் சிறார்கள் அனைவர் முன்னிலையிலும் என் பெயரும், தோழி R.M.சாந்தி பெயரும் விளிக்கப்பட, ஏதோ பரிசு என்று பெருமிதப் பார்வை பார்த்துக் கொண்டு போய்ப் பிரம்படி வாங்கியழுத கதையை மறக்க முடியுமா?

சீதாலட்சுமி பள்ளிக்கு டவுன் பஸ்ஸில் போனதால் வெளியுலகம் கொஞ்சம் அறிமுகம். என் அதிர்ஷ்டம், இந்தப் பள்ளித் தோழிகளின் தொடர்பு இன்று வரை இருப்பதுதான். திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் என் தாத்தா தேங்காய், பழக்கடை வைத்திருந்தார். எல்லா
வார, மாதப் பத்திரிகைகளும் விற்பனை செய்ததால் அனைத்துத் தொடர்களையும் சீக்கிரமே சுடச்சுடப் படிக்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த ரீதியில் படித்த சுஜாதாவின் தொடர்களின் அந்த வாரத்திய அத்தியாயக் கதையைக் கேட்பதற்கு ஒரு கூட்டமே பள்ளியில் காத்திருக்கும். கமல்-ரஜினி, ஸ்ரீதேவி-ஸ்ரீப்ரியா,ரத்தி, எஸ்.பி.பி.-யேசுதாஸ் என்று கட்சிகளாய்ப் பிரிந்து மாங்கு மாங்கென்று சண்டை போட்ட காலங்கள் அவை.

இன்றும் அப்பள்ளிப் பிள்ளைகளைப் பார்க்கும் போது இனிமை கொஞ்சம், பொறாமை கொஞ்சம் எழத்தான் செய்கிறது. ஒரு காலத்தில் ஆண்டு அனுபவித்த இடங்களில் இன்று உரிமையில்லாதது போன்ற ஓர் எண்ணம். அப்பிள்ளைகள் எங்கள் இடங்களை ஆக்கிரமித்துக்
கொண்டது போல் ஒரு மாயை..எங்கள் வகுப்பாசிரியர்களில் சிலர் இறந்து போனதாகக் கேள்வி. சிலர் ஓய்வு பெற, சிலர் பதவி உயர்வு பெற...காலம் வேகமாக ஓடுகிறது. தோழிகளைச் சந்திக்கும் போது,அவர்களின் அம்மாக்களை நினைவுகூறும் முகங்கள், உடலமைப்பு...என் தோழிகளும் என்னைப் பார்த்து இதையே சொல்ல..வயதாகிவிட்டது என்று சொல்லிச் சிரித்து...மலர்கின்றன நினைவுகள்.

30 Comments:

நந்து f/o நிலா said...

//அமலா பெத்தண்ணல் மாண்டிசோரிப் பள்ளி"யில்தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன்//

பாசமலர் மாண்டிசோரி சிஸ்டம் ஸ்கூல்ல படிச்சிருக்கீங்க.

நிலாவ மாண்டிசோரி ஸ்கூல்லதான் சேர்கனும்ன்னு நெனைச்சுகிட்டு இருக்கேன். புக்ஸ் ஹோம்வொர்க்ஸ் எதுவும் கொடுக்க மாட்டாங்க. எக்சாம் கிடையாதுன்னு கேள்விப்பட்ட்டிருக்கேன்.

அனுபவப்பட்டவங்க நீங்க,, கொஞ்சம் அதோட சாதக பாதகங்களை ஒரு பதிவா போடுங்களேன், என்ன மாதிரி வெவரந்தெரியாத அப்பாக்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்

நந்து f/o நிலா said...

நான் படிச்ச ஸ்கூல் ஹாஸ்டலுக்கு இப்போ போய் பாத்தா என்னோட இடத்துல வேற வேற பசங்க. மனசு ஏத்துக்கவே இல்லை

அதுமட்டுமில்லாம அதன் பிறகு ஹாஸ்டலை நினைத்தால் புது பசங்க இருக்கும் நினைவுதான் வருது.

இவ்வளவு நாள் கழிச்சு போய் பாத்திருக்க கூடாதுன்னுதான் தோணுது.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்? நான் முதலில் படிச்சது, வடக்காவணி மூல வீதியில். பின்னர் சின்னச் சொக்கி குளம் ஓசிபிஎம் உயர்நிலைப்பள்ளி, இன்னும் எழுத ஆரம்பிக்கலை, ஆரம்பிச்சால் எங்கேயோ போகும், நல்லா இருக்கு உங்க அனுபவங்கள்.

பாச மலர் / Paasa Malar said...

நந்து,

எனக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் ஒரு பதிவு போட்டு விட்டேன்.
http://pettagam.blogspot.com/2008/01/fo.html..

உங்கள் கருத்துக்கு நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கீதா..ஆமாம்..மலரும் நினைவுகள் எங்கேயெல்லாமோ கொண்டு போகும்.

பாச மலர் / Paasa Malar said...

நந்து,

எனக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் ஒரு பதிவு போட்டு விட்டேன்.
http://pettagam.blogspot.com/2008
/01/fo.html

உங்கள் கருத்துக்கு நன்றி.

January 10, 2008 2:40 AM

தருமி said...

ரொம்ப ரொம்ப ஆண்டுகளுக்குப் பிறகு படித்த பள்ளியை, அதன் மாற்றங்களை சமீபத்தில் சுற்றிப் பார்த்த போது ..

பலவித உணர்வுகள் - நீங்கள் சொன்ன இனிமை, பொறாமை இவைகளையும் சேர்த்து.

Anonymous said...

கல்லூரி வாழ்க்கையில மொத மொதலா வகுப்புக்கு கட் அடிச்சிட்டு உங்க கலைவாணி தியேட்டர்லதான் ஜாக்கி சான் படம் பார்த்தது...ம்ம்ம்

அது ஒரு அழகிய நிலாக்காலம்...ம்ம்ம்

மங்கை said...

ம்ம்ம்...உண்மை..எனக்கும் ஏற்பட்டிருக்கிறது..

இதே மாதிரித்தான் முன்பு வேலை செய்த இடங்களைப் போர்த்தாலும்...

இராம்/Raam said...

மலர் அக்கா,

எனக்கு மருத'லே நல்ல தெரிஞ்ச கேர்ள்ஸ் ஸ்கூலு ஈஸ்டாவணி தான்... :))

cheena (சீனா) said...

மலர், இளமைக் காலங்களை நினைத்து, ரசித்து, அனுபவித்து, ஆனந்திப்பது என்பது இரு அரிய செயல். எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதைப் பதிவாகவும் போடுவதற்கு. நானும் என்னுடைய ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை படித்தது பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன். http://cheenakay.blogspot.com/2007/11/5.html

நண்பர்கள் படித்து கருத்து கூற வேண்டுகிறேன்.

Anonymous said...

ஈஸ்டாவணி...ல சாந்தின்னு ஒரு பொண்ணு....

ஹி..ஹி..கொசுவர்த்தி...மக்கா...

Mangai said...

பொறுப்பா எழுதும் உங்கள் எழுத்துக்கு வாழ்த்துக்கள்

பாச மலர் / Paasa Malar said...

தருமி சார், சீனா சார், மங்கை,

நன்றி.

இரண்டாம் சொக்கன்,

கலைவாணி இப்போ தேவி கலைவாணி..

இராம்,

ஈஸ்ட் ஆவணியா...நன்று.நன்று.

வருகைக்கு நன்றி..

Mangai said...

பொறுப்பான எழுத்துக்கான comment 'திருப்பரங்குற்றத்தில் நீசிரித்தால்' க்கு போக வேண்டியது. பொருப்பில்லாம இங்கே போட்டு விட்டேன் போல.

இந்த பதிவுக்கு - மென்மையான உணர்வுகளை மென்மையாகவே சொன்ன உங்களுக்கு பாராட்டுக்கள்.
//தோழிகளைச் சந்திக்கும் போது,அவர்களின் அம்மாக்களை நினைவுகூறும் முகங்கள், உடலமைப்பு...என் தோழிகளும் என்னைப் பார்த்து இதையே சொல்ல..வயதாகிவிட்டது என்று சொல்லிச் சிரித்து...மலர்கின்றன நினைவுகள்.//

இது - அருமையிலும் அருமை உண்மை என்பதால்.

-Mangai (பெண்)

துளசி கோபால் said...

திருப்பரங்குன்றத்தில் எனக்கு 'மொட்டை' போட்டுட்டாங்கப்பா.......

புதுச்சட்டை இருந்த பையைக் குரங்கு தூக்கிட்டுப் போயிருச்சாம்.

டவல் கட்டிக்கிட்டுச் சாமி கும்பிடக் கொண்டுபோனாங்களாம்.

பெரியக்காதான் 'கதைகதை'யாச் சொல்லுவாங்க:-)

இராம்/Raam said...

//இரண்டாம் சொக்கன் said...

ஈஸ்டாவணி...ல சாந்தின்னு ஒரு பொண்ணு....

ஹி..ஹி..கொசுவர்த்தி...மக்கா...//


பங்காளி,

ஒரே ஒரு பொண்ணுதான் ஞாபகம் இருக்கா??? :)

பாச மலர் / Paasa Malar said...

ஆக மொத்தம் எல்லாரையும் கொசுவர்த்தி ஏத்த வச்சாச்சு...

பாச மலர் / Paasa Malar said...

துளசி மேடம்,
வருகைக்கு நன்றி..

மங்கை,
உங்கள் இந்தக் கமெண்டுக்கும் மீண்டும் புதிய ஒரு நன்றி..

மங்களூர் சிவா said...

பழைய பள்ளி நினைவுகளை நல்லா அருமையா எழுதியிருக்கீங்க.

மங்களூர் சிவா said...

//
நந்து f/o நிலா said...

நிலாவ மாண்டிசோரி ஸ்கூல்லதான் சேர்கனும்ன்னு நெனைச்சுகிட்டு இருக்கேன்.
//
சேட்டை ஜாஸ்தியோ!?!?!
இருக்காதே

மங்களூர் சிவா said...

//
இராம்/Raam said...

எனக்கு மருத'லே நல்ல தெரிஞ்ச கேர்ள்ஸ் ஸ்கூலு ஈஸ்டாவணி தான்... :))
//
நல்லா தெரிஞ்சது அதுன்னா அப்ப கொஞ்சம் சுமாரா தெரிஞ்சதெல்லாம்????
அவ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

//
இரண்டாம் சொக்கன் said...
ஈஸ்டாவணி...ல சாந்தின்னு ஒரு பொண்ணு....

ஹி..ஹி..கொசுவர்த்தி...மக்கா...
//
இத ஒண்டியும் சொல்லி மிச்சத்த எல்லாம் விட்டுட்டீங்க!!

மங்களூர் சிவா said...

//
இராம்/Raam said...
பங்காளி,

ஒரே ஒரு பொண்ணுதான் ஞாபகம் இருக்கா??? :)
//
அட நீ கேட்ட இதே கேள்விதான் ராயலு நானும் கேட்டேன்!!!

cheena (சீனா) said...

மதுரையில் 1963-1966 வரை ஒனபதாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்பு வரை தல்லாகுளத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரி உயர்பள்ளியில் படித்தேன். அதைப் பற்றிய ஒரு பதிவு
http://pathivu.madurainagar.com/2007/10/blog-post.html

நேரமிருப்பின் நண்பர்கள் படித்துக் கருத்து கூறலாமே!

G.Ragavan said...

திருப்பரங்குன்றம்னாலே முருகந்தான் நினைவுக்கு வரும். தூத்துக்குடியில இருந்து மதுர வழியா ரயில்ல போனா ஜன்னல் வழியா தெரியிற கோபுரமும் அதுல தெரியிற வேலும்...அதப் பாத்து கண்ணத்துல போட்டுக்கிறதும் சின்ன வயசுப் பழக்கம். இப்ப கன்னத்துல போட்டுக்கிறதில்லைன்னாலும் மனசுக்குள்ள போட்டுக்கிறதுண்டு. அந்த வழியாப் பயணம் போய் ரொம்ப நாளாச்சு.

பாச மலர் / Paasa Malar said...

அந்த கோபுரமும் வேலும் தனி அழகுதான்..ஆனால் இப்போது பல வண்ணங்கள் தீட்டி நிறைய கோவில் கோபுரங்கலின் அழகைச் சற்றே குறைத்து விட்டார்கள்..பழைய சாம்பல்
நிறம் ஒரு தனி அழகுதான்..

C.N.Raj said...

Paasamalar,

Unga blog padiththavudan Madurai school ninaivukal vanthu vittathu.

maduraiyil gnabakam varuvathu...

--Raja barley cake
--Thangam theatre
--en school friends:Avichi,
Vijayaragavan,
ts Venkatraman,GB Vidyasankari,
Deepadevi,Beulah,Selvakumari
--SEVENTH DAY SCHOOL
--Ennoda junior Vanji
--Meenakshi amman koil
--Alamaram Parotta stall
--Fathima college
--Meenakshi college
--Sugapriya theatre
--school vasalla vikkura pineapple ice.................innum neraiya neraiya gnabakangal....

Tortoise kosuvarththi packet 3 lorryila anuppunnga....meethaththa solren..

Raj..

பாச மலர் / Paasa Malar said...

ராஜ்.

உங்கள் மதுரை மலரும் நினவுகள் இன்றுதான் பார்த்தேன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Anonymous said...

marudhai.blogspot.com is very informative. The article is very professionally written. I enjoy reading marudhai.blogspot.com every day.
payday loan
canada payday loans