Tuesday, February 5, 2008

மதுரை - 2012 கனவா? நனவா?

மதுரை இப்படி மாறுகிறது, அப்படி மாறுகிறது என்று மின்னஞ்சல் செய்திகள் அவ்வப்போது வந்து ஆர்வத்தை, ஆசையைக் கிளப்பிய வண்ணம் இருக்கும்.

இன்று இணையத்தில் உலவிக் கொண்டிருந்தபோது தற்செயலாக ஒரு வலைப்பூ கண்ணில் பட்டது. அதில் மதுரையில் வரவிருக்கும் மொத்த மாற்றங்களும் அ முதல் ஃ வரை பட்டியலிடப்பட்டுள்ளன..அழகழகான புகைப்படங்களோடு..

http://www.maduraiby2012.blogspot.com/


என்னென்ன திட்டங்கள் இருப்பிலுள்ளன என்று இந்த வலைப்பூ காட்டும் பட்டியல் மதுரைவாசிகளை நிச்சயம் உற்சாகப்படுத்தும். அதே நேரத்தில், இது அத்தனையும் இவ்வளவு சீக்கிரம் சாத்தியமா என்றும் தோன்றுகிறது.

ஒருவேளை இந்த வலைப்பூவை ஏற்கனவே நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இதுவரை பார்த்திராவிட்டால் இப்போது அவசியம் பார்க்கவும். சுவாரசியமான தகவல்கள் நிறைந்துள்ளன..(யப்பா..கண்ணைக் கட்டுதே...)

கனவோ நனவோ..50 சதவிகிதம் நடந்தால் கூட நம் பாக்கியமே..

6 Comments:

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆடா இம்புட்டு எடத்துக்கு எங்கிட்டு போறது? மதுர யில எள் போட்டா இடம் இல்லை, Multi comlplex, malls ன்னு, தூக்கத்தில இருந்து எந்திரிங்க பாசமலர்!

பாச மலர் / Paasa Malar said...

அதென்னங்க கோகிலவாணி அப்படிச் சொல்லிட்டீங்க...எள் போட இடம் இல்லாதது நகரின் உட்பகுதியில்தான்..
இங்கே கூறியிருப்பது எல்லாம் புறநகர்ப்பகுதி..

Anonymous said...

எல்லாஞ் சரிதான்....

குடியிருப்புகளை உருவாக்கும் அளவிற்கு தொழில்கள் வரவில்லையே...ஏற்கனவே இருக்கிற தொழிற்சாலைகள் விரிவு படுத்துகின்றனர் அவ்வளவே....இன்றைய சூழலில் 100 கோடி, இருநூறு கோடியெல்லாம் மிகச்சிறிய முதலீடுகளே.....

எனக்கு தெரிந்து Terry Towel செல்லூர் மற்றும் அவனியாபுரத்தில் ஒரு சில சிறிய முதலீட்டாளர்கள் செய்து வருகின்றனர், இதை பெரிய அளவில் ஒரு தொழிற்பூங்கா மாதிரியான அமைப்பில் செய்தால் ஏற்றுமதிக்கு பெருவாரியான வாய்ப்பும்,வேலை வாய்ப்பும் உருவாகும்.

கப்பலூரை அடுத்துள்ள பகுதியில் வாகன உதிரிபாக தொழில்களுக்கான ஒரு தொழிற்பூங்காவினை அமைக்கலாம்.இன்னமும் நிறைய செய்யலாம்...

ஆமா நீங்க என்ன ஆளுக?, அவய்ங்க கிட்ட ஏன் டீலிங் வச்சிக்கறீங்க, எதுனாலும் நம்ம சாதிசனம்னு தொழில் பண்ணுங்கப்பு அதான் என்னிக்கும் சேஃப்டி...போன்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்து மதுரை தொழிலதிபர்கள் வெளியே வந்தாலொழிய மதுரையில் தொழில் வளம் குறுகிய வட்டத்திற்குள்தானிருக்கும்

பாச மலர் / Paasa Malar said...

//ஆமா நீங்க என்ன ஆளுக?, அவய்ங்க கிட்ட ஏன் டீலிங் வச்சிக்கறீங்க, எதுனாலும் நம்ம சாதிசனம்னு தொழில் பண்ணுங்கப்பு அதான் என்னிக்கும் சேஃப்டி...போன்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்து மதுரை தொழிலதிபர்கள் வெளியே வந்தாலொழிய மதுரையில் தொழில் வளம் குறுகிய வட்டத்திற்குள்தானிருக்கும்//

உண்மையோ உண்மை

cheena (சீனா) said...

தகவலுக்கு நன்றி மலர்

தென்றல்sankar said...

haiyo yeavvalavu yeadam yethukkuyeallam,kanavulapoonaathaan vundu.vaaippu keadaithaal kandippaaka sealveean.