Sunday, April 20, 2008

மதுரை சித்திரை திருவிழா - படங்கள்

அருள்மிகு கள்ளழகர் பல லட்சகணக்கான மக்கள் சூழ இன்று காலை மிகசரியாக 7.05 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் எழுந்தருளினார்.கிளிக்'ன் போது சுவாமி முகத்தை விசிறி மறைத்து விட்டது...... :(கூடியிருந்த மக்களின் ஒரு பகுதி...கள்ளழகர் ஆட்டம்....

contd...

Wednesday, April 16, 2008

மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்

மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்.வெளிநாட்டவரும் யானையிடம் ஆசி பெருவதை இங்கு காணலாம்.


ஏராளமான பூக்கடை, ஸ்வாமி திருஉருவசிலைகளும், படங்களும் விற்க்கும் அங்காடிகள், குங்குமம், விபூதி,மஞ்சள் விற்க்கும் கடைகளையும் காணலாம்।

இந்த மண்டபத்திற்க்கு ஒரு மாபெரும் சிறப்புள்ளது அறிந்தவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.

Wednesday, April 9, 2008

அஷ்ட சக்தி மண்டபம்

இப்போது வர இருப்பது அஷ்ட சக்தி மண்டபம்.

மீனாக்ஷி அம்மன் சன்னதியில் நுழைவுவாயிலில் கௌமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மஹாலக்ஷ்மி, இயங்க்னருபினி, ஷ்யமளா, மஹேஸ்வரி, மனொமோஹினி என்ற 8 பெண் தெய்வங்கள் நின்ற நிலையில் அருள் பாலித்துவருகின்றனர். இவை திருமலை மன்னனின் மனைவி ருத்ரபதி அம்மாவால் நிர்மானிக்கப்பட்டது. இம் மண்டபத்தில் தேங்காய், பழம், கற்பூரம் மற்றும் பூஜைக்குத் தேவையான பொருட்கள் விற்கும் கடைகள் நிறைய இருக்கின்றன.

இம்மண்டபதின் வாயிலில் மையமாக நின்று அம்மன் சந்நதியை நோக்கினால், உள்ளே நடக்கும் கற்பூர ஜோதியை தரிசிக்கலாம்.

பின்னால் நகரா மண்டபம், வலது பக்கம் மகாத்மா காந்தி பூங்கா, இடதுபுரம் பக்தர்க்ளின் காலனிகளின் பாதுகாக்குமிடம்.

மண்டபத்தில் இடது மூலையில் விநாயகரும், வலது மூலையில் ஆறுமுக கடவுளான முருகனும், ஓரேகல்லில் வடிக்கப் பட்டுள்ளனர். 14மீ நீளமும், 5.5மீ அகலமும் கொண்ட இம் மண்டபம் 1960-63 -ல் கட்டப்பட்டது.

Tuesday, April 8, 2008

காக்கும் கடவுள்கள்

அம்மன் சன்னதியின் வாயிலில் காக்ஷியளிக்கும் கணேசனும், கார்திகேயனும்கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே

காக்கும் கடவுள் கணேசனை நினை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருள் துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை

யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்
ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்

காக்கும் கடவுள் கணேசனை நினை

நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
ஓம் என்னும் ஒளி அது உருவமாய் வளர்பவன்
உமையவள் மடியிலே குழந்தையாய் திகழ்பவன்

காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை


கந்தன் திருநீரணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்

கந்தன் திருநீரணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்

சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீரணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப் போய்விடுவாள்
அந்தனேரம் பார்த்திருந்து அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்து சொந்தம் கொண்டாடிடுவாள்

கந்தன் திருநீரணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்

மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே திருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பம் எல்லாம் தெய்வம் துணை தாருமடா

கந்தன் திருநீரணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்

Monday, April 7, 2008

கணபதிக்கு வணக்கம் - 1

மீனாக்ஷி அம்மன் கோவிலில் படங்கள், என் படகோப்பிலிருந்து சில.
முதலில் தும்பிக்கையானை துதித்து.
சிவமுருகன்