Sunday, May 18, 2008

மதுரையின் முப்பெரும் கோவில்கள்

மதுரை என்றவுடனேயே வடநாட்டாருக்கும் நினைவில் நிற்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்தக் கோவிலின் பறவைப்பார்வையில் இருக்கும் இந்த நிழற்படத்தை இதற்கு முன்பும் பார்த்திருக்கிறேன். அண்மையில் மதுமிதா அக்கா இந்தப் படத்தை இந்தப் பதிவில் இடுவதற்காக அனுப்பியிருக்கிறார். இந்தப் படம் அமரர் கிரிஸ்டோபர் அவர்களால் சுரிப்பறனையில் (Helicoptor) இருந்து எடுக்கப்பட்டது. படத்தில் தெரியும் மக்கள் கூட்டத்தைப் பார்த்தால் திருக்கோவில் குடமுழுக்கன்று எடுக்கப்பட்டப் படம் போல் இருக்கிறது.


தமிழில் முதன்முதலில் முழுக்க முழுக்க இறைவனைப் பற்றிப் பாடப்பெற்ற சமயநூலான திருமுருகாற்றுப்படையில் முதலில் போற்றப்படும் படைவீடாகிய திருப்பரங்குன்றத்தின் முகப்புத் தோற்றத்தை இங்கே காணலாம்.சங்கப்பாடல்களில் (குறிப்பாக பரிபாடல், சிலப்பதிகாரம்) திருமாலவன் குன்றம் என்றும் திருமாலிருஞ்சோலை என்றும் போற்றப்படும் அழகர்கோவிலின் முகப்புத் தோற்றத்தை இந்தப் படத்தில் காணலாம்.திருப்பரங்குன்றம், அழகர் கோவில் படங்கள் எடுத்தவர் திரு.கணேசன். இந்த மூன்று படங்களையும் அனுப்பிய மதுமிதா அக்காவிற்கு நன்றிகள்.

12 Comments:

VSK said...

ஆலய தரிசனம் அற்புதத் தோற்றங்கள்!

அளித்தமைக்கு மிக்க நன்றி, குமரன்!

G.Ragavan said...

ஓங்கி விண்வளர்ந்தக் கோபுரப் படம் காட்டி
தாங்கள் தம் வலைப்பூவில் பதிவிட்டால்
தீங்கின்றி நாளெல்லாம் பின்னூட்டம் பல பெற்று
ஓங்கு பெரும் நெட்வொர்க் டிராபிக் ஊடு ஹிட்டுகள் :)

படங்கள் நல்லாருக்கு குமரன்.

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல படங்கள் நன்றி குமரன்...


//ஓங்கி விண்வளர்ந்தக் கோபுரப் படம் காட்டி
தாங்கள் தம் வலைப்பூவில் பதிவிட்டால்
தீங்கின்றி நாளெல்லாம் பின்னூட்டம் பல பெற்று//

சூப்பரு... :)

கவிநயா said...

படங்கள் மிக அருமை! அதுவும் சுரிப்பறனையில் (பழக நாளாகும் :) இருந்து எடுக்கப்பட்ட படம், சுத்தத் தமிழ்ல சொன்னா சூப்பர்!

குமரன் (Kumaran) said...

நன்றி எஸ்.கே.

-----
புதுப்பாவை நல்லா இருக்கு இராகவப்பெருமாளே. நன்றிகள். ;-)

----

நன்றி மௌலி.

----
சுரிப்பறனை என்ற சொல்லைப் பரிந்துரைத்தவர் பெரியவர் இராம.கி. ஐயா. இந்த இடுகையை எழுதுவதற்கு முன்னர் அவருடைய பதிவில் சென்று ஹெலிகாப்டர் என்று போட்டுத் தேடிப் பார்த்தேன். கிடைத்தது. உடனே இங்கே போட்டுவிட்டேன். இப்படி எழுத எழுதத் தான் குறைந்தது எழுத்திலாவது இந்தச் சொல் புழங்கும். இப்போதும் பேருந்து என்ற சொல்லை எழுத்தில் புழங்கினாலும் பேசும் போது பஸ் என்று தானே சொல்கிறோம். அந்த வகையான தூய தமிழில் நீங்கள் சொன்ன சூப்பரும் அடங்கும். :-) நீங்களும் மஸ்தானா மஸ்தானா தொடர்ந்து பார்த்தீர்களோ? :-)

Geetha Sambasivam said...

அருமையான படங்கள், கூடவே நினைவில் மோதும் பழைய நினைவுகளின் தாக்கங்கள், நல்லதொரு படங்களை இட்டதோடு, சிறு குறிப்புகளும் தந்திருக்கலாமோ? ஏற்கெனவே தெரிந்தவையாகவே இருக்குமென்றாலும், மீண்டும்,மீண்டும் கேட்கவும், படிக்கவும் அலுக்காத விஷயம் என்றால் இது தான்! :))))))

குமரன் (Kumaran) said...

சிறு குறிப்புகள் தந்திருக்கிறேனே கீதாம்மா. ஓ. உங்கள் அளவிற்குத் தகவல்கள் தரவில்லை என்கிறீர்களா? அது சரி தான். ஒவ்வொரு கோவிலைப் பற்றியும் மலரும் நினைவுகளை எழுதத் தொடங்கினால் தொடராகவே எழுதலாமே. :-)

பாச மலர் / Paasa Malar said...

படங்களுக்கு நன்றி குமரன்..

சிவசுப்பிரமணியன் said...

இந்த மூண்று கோவில்களில் நான் அதிகமாக போன கோவில்கள்

திருப்பரங்குன்றம் - கல்லூரிக்கு ரொம்ப பக்கத்துல இருந்ததினால (ரொம்ப பிடிச்ச கோவில்)

மீனாட்சி அம்மன் கோவில் - அடிக்கடி இதுக்காகவே(வாரம் ஒரு முறை) திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரைக்கு போவேன் (அதிகமா ரசிச்ச கோவில்)

அழகர் கோவில் - ஒரே ஒரு முறை மட்டும் தான். அதுவும் நான் மலை மேல இருந்து கீழ நடந்து வரும் போது செம மழை.. ஆனந்தமா நனைஞ்சுகிட்டே காட்டு வழியா இறங்கி வந்தேன்.. மறக்கவே முடியாது. இன்னொரு முறை கண்டிப்பா போகனும்.

குமரன் (Kumaran) said...

கண்டிப்பா அழகர் கோவிலுக்குப் போங்க சிவா. ஒரு முறை என்ன பல முறை போகலாம். நான் மதுரை போகும் போதெல்லாம் கட்டாயம் இந்த மூன்று கோவில்களுக்கும் தவறாமல் போவேன். உண்மையில் நான்கு கோவில்கள். பழமுதிர்சோலைக்கும் போவேன். :-)

cheena (சீனா) said...

அன்பர்களே

மதுரை வருபவர்கள் இக்கோவில்களுக்கெல்லாம் செல்லாமல் திரும்பாதீர்கள். பார்க்க வேண்டிய கோவில்கள்,

அன்புடன் ..... சீனா
http://cheenakay.blogspot.com

குமரன் (Kumaran) said...

உண்மை தான் சீனா ஐயா. நன்றிகள்.