Saturday, May 24, 2008

வைகையில் வந்திறங்கும் வள்ளல்

பச்சை பட்டு உடுத்திக் கொண்டு பவளமால் வந்தான்
பசுமையாக மண்விளங்கிப் பயன் கொடுக்க வந்தான்
இச்சையுடன் எழில் மிகுந்த ஈசன் அவன் வந்தான்
எழிலார்ந்த பரியேறி இன்பமாக வந்தான்


பச்சைப் பட்டு உடுத்திக் கொண்டு கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் எழில் மிகு காட்சியை திரு. ஆர். கணேசன் இங்கே நிழற்படங்களாகத் தந்துள்ளார். அடியவர்கள் ஐயன் மேல் நீர் பீய்ச்சி அடிக்கும் அன்புக்காட்சியையும் காணலாம். படங்களை அனுப்பிய மதுமிதா அக்காவிற்கு நன்றிகள்.





6 Comments:

கவிநயா said...

அரிய படங்களுக்கு நன்றி, குமரா!

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.

cheena (சீனா) said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

நண்ப குமர,

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மறுமொழி

அழகான படங்கள் - வைகையினிலே பச்சைப் பட்டுடுத்தி அழகர் அழகாக இறங்கிய காட்சி. தங்கக்குதிரையினிலே வந்திறங்கிய வள்ளலைக் காண கோடி சனம் கூடி நின்ற காட்சி. அழகர் மீது நீரைப் பீய்ச்சீயடிக்கும் மக்கள் மனம் மகிழ அழகர் அருள் புரியும் காட்சிகள் அற்புதம்.

நன்றி குமரன் - நன்றி மதுமிதா

குமரன் (Kumaran) said...

ஆமாம் சீனா ஐயா. ரொம்ப நாள் தான் ஆச்சு உங்க பின்னூட்டத்தைப் பார்த்து. :-) நன்றிகள்.

அகரம் அமுதா said...

திருவிழாவை நேரில் பார்த்ததுபோல் உள்ளது சீனா அவர்களே! அந்நிழற்படங்களைக் காட்சிக்கிட்ட தங்களுக்கென் மனமார்ந்த நன்றிகள்