Sunday, May 25, 2008

வைகையில் வந்திறங்கிய வள்ளல் அழகர்

நண்பர் குமரன் அரிய புகைப்படங்களைத் தந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக வைகைத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பின் போது ஒலித்த பாடல். இசையோடு கேட்டால் இன்பமோ இன்பம். படியுங்கள் - பாடிப்பாருங்கள்.
------------------------------------------------------------------------------------------
ஐயிரண்டு அவதாரம் அவணியில்
எடுத்த அழகரவர் ஆடிவருவார் !
அரிதாரம் பூசிவரும் அன்பர்களின்
கூட்டத்திலே அழகரவர் ஆடிவருவார் !

நான்மாடக் கூடலிலே திருமணமாம் !
நாள்தோறும் வீதியிலே தேர்வருமாம் !
அழகர்மலை அழகனவன் சீர்வருமாம் !
அதைக்காண கோடிசனம் ஊர்வருமாம் !

வாராறு வாராறு மலையை விட்டு
வாராறு வாராறு அழகரவர் வாராறு !

தங்கையவள் திருமணத்தை
தமையனவர் நடத்திவைக்க
தங்கக்குதிரையிலே வாராறு !
அடவாராறு அழகரவர் !

சித்திரையில் வைகறையில்
வைகைநதி பொன்கரையில்
பொற்பாதம் நனைக்க வாராறு !
தீவினைகள் அத்தனையும்
தீர்த்துவைக்க அழகரவர்
தீர்த்தங்கள் கொண்டு வாராறு !

சீனா .... (Cheena)
----------------------
இணைப்பு : http://www.youtube.com/watch?v=F4EW1GOqlqA
07.06.2008
சீனா .... (Cheena)
----------------------

18 Comments:

குமரன் (Kumaran) said...

பாடல் ரொம்ப எளிமையா நல்லா இருக்குதுங்க சீனா ஐயா.

N Suresh said...

சீனா ஐயா,

இதை நீங்கள் பாடி பதிவு செயததை இந்த வலைப்பூவிலே இடலாமே நாங்கள் சந்தோஷமாய் கேட்போமே:-)

cheena (சீனா) said...

குமரன்,

பாடல் எளிமை - கிராமப் புற மக்கள் எளிமையாகப் பாடும் பாடல்தானே !!
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

cheena (சீனா) said...

நான் பாட வேண்டுமா - சுரேஷ் - யார் கேட்பார்கள் - சந்தோஷமாய்க் கேட்பீர்களா ?

எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள் - ம்ம்ம்ம்ம்

மெளலி (மதுரையம்பதி) said...

//இதை நீங்கள் பாடி பதிவு செயததை இந்த வலைப்பூவிலே இடலாமே நாங்கள் சந்தோஷமாய் கேட்போமே:-)//

ரீப்பிட்டே!!!! :)

சுரேஷுடன் இன்னொருத்தனும் கிளம்பியிருக்கிறேன் சீனா சார். :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாம் ஆமாம் பாடித்தான் போடுங்களேன்.. :)

சிவசுப்பிரமணியன் said...

சீனா சார்.. உங்க குரல் நல்லா தானே இருக்கும் பாடலாமே

சதங்கா (Sathanga) said...

//எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள் - ம்ம்ம்ம்ம்//

ஹி. ஹி. நானும் தான். அப்படினு இன்னும் மக்கள்ஸ் எழுச்சி பெற்று வருவாங்க சீனா ஐயா.

cheena (சீனா) said...

மதுரையம்பதி, கயல்விழி முத்து லெட்சுமி, சிவா, சதங்கா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பாடு பாடு ன்னு சொன்னா நான் என்ன குயிலா - குரல் படுத்திடும் தெரியுமா ?

உங்அ தலை எழுத்து கேக்கணும்னா நான் என்ன செய்ய முடியும் - பாடிப் பாக்குறேன்

cheena (சீனா) said...

மக்கள்ஸ் அன்புத் தொல்லை - பாடி விட்டேன் - கேட்டாக் கேளுங்க விட்டா விடுங்க


http://www.youtube.com/watch?v=F4EW1GOqlqA

சதங்கா (Sathanga) said...

அதெப்படி விடுவோம். கேட்டோம்ல, அதிருதுல்ல ....

NewBee said...

அன்பு சீனா ஸார்,

எனக்கு மிகவும் பிடித்தது தங்கள் குரல்...:).

இது முதல் முயற்சி தான்...தயவு செய்து தொடருங்கள்....மேலும் மேலும் மெருகேறும்...தங்ஸ்-இடமும் சொல்லுங்கள்.:))))

அட!உங்க தங்க்ஸ் கிட்ட தான் ஸார்...:D :D.

பி.கு.:தங்கள் 'அசைபோடுவதில்' இந்தச் சுட்டியைக் காணோமே???????

cheena (சீனா) said...

அன்பின் சதங்கா

நன்றி

cheena (சீனா) said...

புது வண்டே

என் குரல் பிடித்ததா ? நன்றி

தங்க்ஸிடம் கூறினே - அட என் வீட்டுத் தங்க்ஸிடம் தான் - பிறகென்ன அடுத்த வீட்டுக்காரன் தங்க்ஸிடமா சொல்ல முடியும் ?

அகரம் அமுதா said...

///நான்மாடக் கூடலிலே திருமணமாம் !
நாள்தோறும் வீதியிலே தேர்வருமாம் !
அழகர்மலை அழகனவன் சீர்வருமாம் !
அதைக்காண கோடிசனம் ஊர்வருமாம்///

அட! அட! என்ன அருமையான சந்த வரிகள். வாழ்த்துக்கள் சீனா ஆவர்களே!

Geetha Sambasivam said...

ஆஹா, கமெண்ட் பொட்டி திறந்துடுச்சு, சீனா சார், பத்து நாளாப் பார்த்தும் இன்னிக்குத் தான் பொட்டி திறந்துச்சு!! என்னனு புரியலை!

பதிவு நல்லா இருக்குங்க, அழகர் திருநாள் மறக்க முடியுமா??? அழகரையும் பார்த்தேன், யூ ட்யூபில், ஆனால் கமெண்டத் தான் நாளாயிடுச்சு!! :((((((((

cheena (சீனா) said...

அகரம் அமுதா

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

cheena (சீனா) said...

கீதா

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்