Saturday, July 12, 2008

மதுரைக்குப் போகாதேடி! - பகுதி ஒன்று


மதுரைக்குப் போயிட்டு வந்த அனுபவத்தை எழுதணும், எழுதணும்னு ஒரு ஆறு மாசமா நினைச்சும் முடியாமப் போயிட்டே இருக்கு. கல்வெட்டுக்கு திருப்பரங்குன்றம் பத்திய பதிலை இன்னும் சொல்ல முடியலை, அதனாலேயே வரதுக்கு யோசிச்சுட்டு இருந்தேன். இப்போ பதில் கிடைக்கலைனாலும், சில இடங்களில் கல்லை விட்டு எறிஞ்சு இருக்கேன். வரும்போது வரட்டும்னு இப்போ எழுத வந்தேன். டிசம்பரில் மதுரைக்குப் போனப்போ முதல் அதிர்ச்சி, மத்தியானம் 12-00 மணி அளவுக்கே போயும் தங்க இடம் கிடைக்காதது தான். பைபாஸ் ரோடில் அண்ணா இருக்கின்றார் என்றாலும் திடீர்னு போய் 4,5 பேர் அங்கே இருக்கிறது எப்படினு யோசிச்சு, லாட்ஜில் ரூம் போடலாம்னு போனால், காலேஜ் ஹவுஸில் ஒரே ஒரு ரூம், கீழே இருக்கு, அதுவும், ஏசி ரூம், ஆனால் ஏசி போட மாட்டோம், சார்ஜ் என்னமோ ஏசிக்கு உள்ளதுதான். அதிலேயே எல்லாரும் தங்கிக்கணும்னு கண்டிஷனா சொல்றாங்க. வேறே ரூமே இல்லைனு திட்டவட்டமாச் சொல்லிட்டாங்க. பக்கத்தில் எல்லாம் போய்ப் பார்க்கலாம்னா, காலேஜ் ஹவுஸ் அனெக்ஸிலும் ரூம் இருக்குனு சொல்லிட்டு, கடைசியில் மெயின் பில்டிங்கில் பார்த்துட்டுத் தான் வரீங்களா? அங்கே கிடைக்கிறதை வாங்கிக்குங்க, அது இல்லைனால் இங்கே வாங்கனு சொல்றாங்க. இதுக்கு நடுவிலே, எல்லாருக்கும் பசி வேறே வந்தாச்சு. சாப்பிட்டுட்டுப் பார்க்கலாம்னு முடிவு பண்ணி, வண்டியைத் தேடினால் வண்டி விட்ட இடத்தில் இல்லை. வண்டிக்குள்ளே பர்ஸ் மாட்டிட்டு இருக்கு. கடைசியில் அங்கே, இங்கே திரட்டி, எல்லார் கிட்டேயும் கையிலே இருக்கிற காசை எண்ணிப் பார்த்துட்டு, சாப்பாட்டுக்குப் போதும்னு முடிவு பண்ணிட்டு சாப்பிடப் போனால், பையர் முறைப்பு! இது என்ன உங்க ஊர்? இப்படி இருக்கு? னு ஏதோ இப்போத் தான் முதல்லே மதுரைக்கு வர மாதிரி என்னைக் கேட்கிறார். கேட்கணுமா? நம்ம ம.பா.வுக்கு. ஏகக் குஷி! ஒரே சந்தோஷத்தோட ஃபுல் மீல்ஸ் ஆர்டர் பண்ணிச் சாப்பிட ஆரம்பிச்சார். நமக்கு ஏற்கெனவே வெளியே போனால் சாப்பிட முடியாது. இப்போ டென்ஷன் வேறே. ஜூஸ் மட்டும் போதும்னு போனால் பையர் விரட்டறார், போய்ச் சாப்பிடுனு.

தலையில் அடிச்சுட்டு, வந்து ஒரு தயிர் சாதம்னு சொல்லிட்டு உட்கார்ந்தேன். தயிர்சாதத்துக்கு முதலிலேயே பணம் கொடுத்துடணுமாம். அப்புறம் வேண்டாம்னு சொல்லக் கூடாதாம். பொதுவா எல்லா ஓட்டலிலேயும் தயிர் சாதம் பில் தனியாத் தான் வரும். இங்கே என்னனு நினைச்சுட்டு சரினு பணம் எவ்வளவுனு கேட்டால்? ஒரு மூட்டை அரிசிவிலை தயிர்சாதத்துக்குச் சொல்றாங்க. எனக்கு அவ்வளவெல்லாம் வேண்டாம், அன்னதானம் பண்ணலைனு விளக்கறதுக்குள்ளே, அந்த ஊழியர் என் கையிலே இருந்து பணத்தைப் பிடுங்கிட்டுப் போய்ட்டு, ஒரு தட்டைக் கொண்டு வந்து வச்சார். தட்டிலே வெள்ளையாக ஏதோ ஒரு சின்ன ஐஸ்க்ரீம் ஸ்பூன் அளவுக்கு இருந்தது. அதன் உச்சியிலே பொட்டு வச்சாப்பலே சிவப்பா ஏதோ இருக்கு! என்னமோ முதலில் சாப்பிட வச்சிருக்காங்க போலிருக்கு, தயிர்சாதம் எப்போ வரும்னு தெரியலையேனு, மறுபடி அந்த ஊழியரைக் கூப்பிட்டு, ரொம்ப முறைப்பா, "நான் தயிர்சாதம் கேட்டேனே?" என்று கேட்க, அவர் அதைவிட முறைப்பாகவும், அலட்சியமாகவும் என்னைப் பார்த்து, "என்னம்மா, கிண்டலா?" என்று கேட்க, "நான் ஏன் உங்களைக் கிண்டல் பண்ணறேன்? நான் சாதம் தானே கேட்டேன்?" என்று ரொம்பவே அப்பாவியாய் நான் பதில் சொல்ல, அவர் தட்டிலிருந்து வெண்மையான வஸ்துவைச் சுட்டிக் காட்டி, "இது என்ன?" என்று கேட்கவே, நான் ,"என்ன? இதான் தயிர்சாதமா?" என்று கத்திய கத்தலில், மொத்த காலேஜ் ஹவுஸும் அங்கே திரண்டுவிட்டது.

22 Comments:

மெளலி (மதுரையம்பதி) said...

முதல்ல இந்த 'பையர்' யூசேஜ்க்கு திவாண்ணாவுக்கு ராயல்டி பே பண்ணியாச்சான்னு தெரிஞ்சுக்க விரும்பறேன்.

ஆஹா!, நீங்க அம்புட்டு செளண்ட் விடுவீங்களா?.

சரி, அடுத்த பாதிவையும் போடுங்க சீக்கிரம்.

cheena (சீனா) said...

என்னது இது - கீதா மதுரைக்கு வந்தீங்களா - எப்போ - நாங்க இங்கே இருக்கோம்ல - ஏன் சொல்லலே - சாப்பாடுக்கு 100 ஹோட்டல் இருக்குல்ல - ரூம் இல்லன்னா - எங்க வூடு இருக்குல்ல - ஏதோ எல்லொரும் சேந்து இருந்திருக்கலாம்ல - ம்ம்ம் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ம்ம்ம்ம்ம் காலேஜ் ஹவுஸில் தயிர் சாதம் இப்படியா - செக் பண்ணிடறேன் - நான் அங்கே தயிர் சாதம் சாப்பிட்டதே இல்லை.

ம்ம்ம்ம்ம்ம் - இரண்டாம் பகுதி பாக்கலாம்

Geetha Sambasivam said...

//முதல்ல இந்த 'பையர்' யூசேஜ்க்கு திவாண்ணாவுக்கு ராயல்டி பே பண்ணியாச்சான்னு தெரிஞ்சுக்க விரும்பறேன். //

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., நாங்க சொன்னதைத் தான் அவர் சொல்றார், அதை முதல்லே புரிஞ்சுக்குங்க! :P

//என்னது இது - கீதா மதுரைக்கு வந்தீங்களா - எப்போ - நாங்க இங்கே இருக்கோம்ல - ஏன் சொல்லலே - //

அட, ஒருத்தரா, இரண்டு பேரா?? சொல்லிட்டு வரதுக்கு? அதான் லாட்ஜுக்குப் போனோம், 2-ம் பாகம் வரும் பாருங்க, அப்போ என்ன சொல்லப் போறேன்னு!

தருமி said...

என்னங்க இது அநியாயமா இருக்கு. அஞ்சஞ்சு ரூபார் இருந்தால் போதும் ஒரு 'நாஷ்டா' ஒரு ராவு சாப்பாட்டுக்கு எங்க ஊர்ல. நீங்க இப்படி புலம்புறீங்களே ..

இலவசக்கொத்தனார் said...

இந்த மாதிரி பதிவு எழுதினா நாங்களும் வந்து உள்ளேன் ஐயா, சரி, உள்ளேன் அம்மான்னு சொல்லுவோமில்ல!

கம்ப்யூட்டர் அவுட், கேபிள் வொர்க் பண்ணலை, தண்ணி வரலை, மதுரையில் ரூம் கிடைக்கலை, தயிர்சாதத்தைத் தட்டில் காணும்.

இராமாயணம் எழுதலைன்னா எதையாவது சொல்லி புலம்பணுமுன்னே விரதமா? :)))

சரியான கம்ப்ளெயிண்ட் கமலாவா இருக்கீங்களே!! (அப்பா, இனி அம்பி பார்த்துப்பார்!)

கோபிநாத் said...

உள்ளேன் தலைவி ;)

cheena (சீனா) said...

தருமி மறுமொழியத் தொடர்ந்து அத ஆமோதிச்சு நானும் ஒரு மறு மொழி இட்டேனே - அது எங்கே கீதா ?

cheena (சீனா) said...

ஆமாமாமாம் - தருமி சொல்வது சரிதான் - மதுரை தான் தமிழ் நாட்டிலேயே சீப்பஸ்ட் அண்ட் பெஸ்ட்

( இது மருதைக் குழுமத்தில் இருக்கிறது )

Geetha Sambasivam said...

தருமி சார், நீங்க சொல்றது எந்தக் கால மருதங்கோ??? இப்போ வீட்டை விட்டு வெளியே வரதுண்டா?? :P :P

இ.கொ. வாங்க, வாங்க, மொக்கைக்கே உங்கள் ஆதரவுனு நல்லாத் தெரியுது! இதிலே போட்டு வேறே கொடுக்கிறீங்க? அதெல்லாம் அம்பி இப்போ டயப்பர் மாத்தறதிலே பிசினாலே வர மாட்டார்! :P

Geetha Sambasivam said...

@கோபிநாத், கொஞ்சம் கமெண்ட் போடுங்களேன் ஒருமுறையாவது! :P

@சீனா சார், நானே இப்போத் தான் பார்த்தேன், குழுமத்தில் இருந்தது, ஜி3 பண்ணிட்டு வந்தால், நீங்க போட்டுட்டீங்க, நன்றி சார்.

நம்பிக்கைபாண்டியன் said...

மதுரை பதிவர்களையும்,மதுரையின் புகழ் பரப்புவதையும் இங்கு கண்டறிந்ததில் மகிழ்ச்சி

கோவை விஜய் said...

மதுரையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்படியாகிவிடுமா?

தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 20 மறுமொழிகள் | விஜய்

Anonymous said...

போனவருடம்தான் நண்பன் திருமணத்திற்கு முதல் முறையா மதுரை போயிருந்தேன். பேருந்து நிலையத்தில் இறங்கியவுடனே கேட்டது ஒலிபெருக்கியில்:

"பயணிகளே திருடர்களிடம் ஜாக்கிரதை! நண்பர்கள் போல் நைசாக பேசி, நல்லவர்கள் போல் நடித்து பணம் பறிப்போரிடம் எச்சரிக்கை! பணம் நகைகள் பத்திரம்!" நொடி இடைவெளின்றி திரும்ப திரும்ப இவ்வொலிபரப்பு ஹை டெஸிபலில்.

'என்னடா வந்துதம் ஒருத்தன் இப்படி கேட்டா உங்க ஊர்மேல் எப்படி மரியாதை வரும்' என நண்பனிடம் நொந்துகொண்டேன்.

'ஓ! அப்படியா! நீ வந்ததும் அதை போட்டிருப்பார்கள்' என்றான் குறும்பாக ;-)

இன்னும் இருக்குங்களா?

சிவமுருகன் said...

கீதா மேடம்! பகுதி ஒன்று சூப்பர்!

மதுரை இந்த கலக்கு கலக்குதா?

அதே மாதிரி இந்த பெங்களூர் இருக்கே!

எது நம்மூர் இல்லையோ அங்கே பிரச்சனை தான் போலிருக்கு.

அடுத்த பதிவை எதிர்நோக்கி :=:

Geetha Sambasivam said...

அட, பாண்டியன் வாங்க, வாங்க, நீங்களும் நம்மூரு தானே, வந்து கலக்குங்க! இங்கேயும்! :))))))

@விஜய், உங்க புகைப் பேழை பேரை மாத்துங்க, வரேன்!:P நமக்கும் புகைக்கும் அலர்ஜிங்கோ! :))))

@நவீன், எப்போவும் உங்க சிநேகிதர் உண்மையே பேசுபவர்னு நினைக்கிறேன், என்ன சொல்றீங்க???

@சிவமுருகன்,
ரொம்ப நாளாச்சு, பார்த்து, பெண்களூரிலே இருக்கீங்களோ??? அதான் பார்க்க முடியலை, அதிகமா!! :P :P :P

கோவை விஜய் said...

//விஜய், உங்க புகைப் பேழை பேரை மாத்துங்க, வரேன்!:P நமக்கும் புகைக்கும் அலர்ஜிங்கோ! :))))

புகைப்படப் பேழை என மாற்றிவிட்டேன்.
தி.விஜய்.
http://pugaippezhai.blogspot.com/

Anonymous said...

//@நவீன், எப்போவும் உங்க சிநேகிதர் உண்மையே பேசுபவர்னு நினைக்கிறேன், என்ன சொல்றீங்க???//

அப்டீங்கறீங்க! சொன்னா, நண்பன் சந்தோசப்படுவான் :)

ஆனாலும், மதுரக்காரங்களுக்கு அநியாயத்துக்கு ஊர்ப்பாசமுங்க :D

Geetha Sambasivam said...

@விஜய், இதோ வந்துட்டேன், ஆனால் புகைப் பேழைனு தான் காட்டுது, மூக்கிலே கவசம் மாட்டிட்டு இருக்கேன் ஏற்கெனவே, அதனால் இன்னிக்கே வந்துடறேன்! :P

நவீன், புரிஞ்சாச் சரி! :)))))))))

இலவசக்கொத்தனார் said...

இது என்ன அரதப்பழசான பதிவு என்னமோ புதுப் பதிவு மாதிரி தமிழ்மண முகப்பில் வருது? இவ்வளவு லேட்டா என்ன இணையம் வேண்டி இருக்கு. உடம்புக்கு ஆகுமா? :)

துளசி கோபால் said...

ஆரம்பமாச்சா?

ஆஹா ஆஹா ஆஹா


சீனா,
நாங்க ரெண்டே பேர்தான். சொல்லாம வந்தாலும் பரவாயில்லைதானே?:-)

பர்ஸை வண்டியில் வச்சுட்டுப்போகக்கூடாது.
நான் 'பட்டுட்டேன்'(-:

Bleachingpowder said...

//ஒரு மூட்டை அரிசிவிலை தயிர்சாதத்துக்குச் சொல்றாங்க.//

பத்து ருபாய் இருந்தாலே சூப்பரா சாப்பிடலாம் அந்த ஊருல.

முதல் முறையா மதுரையின் உணவைவும், விலையும் குறை சொல்வதை படிக்கீறேன்.

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, கொத்து, நாங்க மதுரைக்காரங்க, எப்போ வேணா பதிவைத் திருப்பித் திருப்பிப் போட வைப்போமுல்ல!!!!!! இல்லைனா என்ன நடக்கும்னு தெரியுமில்ல??? :))))))))))

வாங்க, துளசி, பதிவு எழுதி இருக்கிறது நானு, பின்னூட்டம் சீனா சாருக்கா?? இது என்ன reciprocal arrangementங்கறேன்?? :)))))))

அட, ப்ளீச்சிங் பவுடர் எல்லாம் எழுத வந்து இருக்காங்களே?? வாங்க ப்ளீச்சிங், ஒரு முறை காலேஜ் ஹவுஸில் உள்ளே டைனிங் ஹாலில் தயிர்சாதம் கேட்டுப் பாருங்க, வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்.

பை தி பை, நானும் மதுரைக்காரி தான். அந்த வயித்தெரிச்சல்ல தான் நம்ம ஊரா இப்படினு எழுத வேண்டியதாப் போச்சு, அடுத்தது எழுதலாம்னா அதைத் திறக்கிறதுக்குள்ளே போதும்டா சாமினு ஆயிடுச்சு! :(((((