நானும் மதுரைப் பதிவிலே மதுரைக்குப் போகாதேடி என்று தலைப்புக் கொடுத்த வேளையோ என்னமோ தெரியலை, அதுக்கப்புறம் பதிவு போடவே திறக்கலை. சரி, நம்ம ராசி தான் இப்படினு தெரியுமேனு நினைச்சுக் கொஞ்ச நாள் ஆனாத் தானாச் சரியாகும்னு இருந்துட்டேன். அதுக்கப்புறம் என்ன என்னமோ நடந்து விட்டதா?? போன டிசம்பரில் போயிட்டு வந்தது மதுரைக்கு. அதை நான் போட ஆரம்பிச்சதே ஜூலையில் தான் அதையும் முடிக்க முடியாமல் சதி மேலே சதி! இதுக்கு நடுவிலே எங்க சிநேகிதர்கள் வீட்டிலே மதுரைக்குப் போயிட்டு வந்து என் கிட்டே கமெண்ட் வேறே. அவங்க கிட்டே நான் ப்ளாகிலே எழுதி இருக்கிறதெல்லாம் சொல்லவும் இல்லை அவங்களுக்கும் தெரியாது இந்த மாதிரி மதுரை ஊரே நாக்கைப் பிடுங்கிக்கிறாப்பல எழுதறேன்னு. ஆனாலும் குற்றப்பத்திரிகை என் கிட்டே தான் வாசிச்சாங்க. "என்ன உங்க ஊரு இப்படி இருக்கு? ஒரே கூட்டம்? வண்டியை நிறுத்த முடியலை, கோயிலுக்குப் போக முடியலை, போனா சாமியைப் பார்க்கவும் முடியலை. இரண்டு நாள் போயிட்டு கடைசியில் மீனாட்சியைப் பார்க்க முடியாமத் திரும்பி வந்தோம். சுந்தரேஸ்வரர் சந்நிதிக்குப் போயிட்டோம். ஆனால் பார்க்கிறதுக்குள்ளே விரட்டிட்டாங்க. கூட்டமும் வந்துட்டது. திருப்பதியை விட மோசமா இருக்கே? கொஞ்சம் கவனிக்கக் கூடாது? ஆனால் நீங்க எல்லாம் ஊர்க்காரங்க, நீங்க போனால் தனியாக் கவனிப்பாங்க!" என்று ஏற்கெனவே மீனாட்சியைப் பார்க்காமல் வந்த என்னோட வயிற்றெரிச்சலை அதிகப் படுத்தினாங்க.
என்னவோ அறநிலையத் துறையே என் கையிலே இருக்குங்கற நினைப்பிலே அவங்க பேசினதும், கொஞ்சம் எனக்கே சந்தேகமாத் தான் இருந்தது. ஒருவேளை அறநிலையத் துறை நாம் சொன்னால் கேட்குமோனு. அப்புறமாத் தான் நம்ம ம.பா. இருக்காரே, நம்ம கனவைக் கலைக்கவென்றே வந்திருக்கும் ஆசாமி, என்ன நாம் போனது மறந்துடுச்சா?? உங்க ஊரின் யோக்கியதை இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு!" என்று கெக்கலி கொட்டிச் சிரிக்க, எங்கே கொண்டு போய் மூஞ்சியை வச்சுக்கிறதுனு தெரியாமல், கணினி முன்னாலே உட்கார்ந்து எழுத வந்தேன். அப்போத் தான் சீனா சார், அதிசயமா என்னோட வலைக்கு வந்துட்டு, என்ன ஆச்சு மதுரைப் பதிவுகளுக்குனு ஒரு கேள்வியையும் கேட்டுட்டுப் போனாரா? ஆஹா, என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு பார்த்தால் மீண்டும் திறக்கலை. நம்ம ராயலைக் கேட்கலாம்னு நினைச்சால், அவர் என்னமோ சிங்கப்பூர் போகப் போறேனு மெயிலி இருந்தாரா? இப்போ தொந்திரவு செய்ய வேண்டாம்னு பொறுத்து இருந்தேன்.
அதுக்குள்ளே நவராத்திரி வந்து, நானும் கீழே விழுந்து, எழுந்து, பதிவுகள் போட ஆரம்பிச்சு, தீபாவளியும் வந்து, ராயலும் இதைச் சரி பண்ணிக் கொடுத்து, ஒரு வழியா வலைப்பக்கமாத் திறக்கும்படியாக தாற்காலிக ஏற்பாடு பண்ணி வச்சிருக்கார். எத்தனை நாளுக்கோ தெரியலை. அதுக்குள்ளே நவராத்திரி நினைவுகள், தீபாவளி நினைவுகள்னு முட்டி மோத ஆரம்பிச்சுட்டது. எல்லாத்துக்கும் மேலே, காலேஜ் ஹவுஸிலே கத்தினதோடு நிறுத்தி இருக்கேனே. மேற்கொண்டு சாப்பிடவில்லை. அதை அப்படியே திருப்பிக் கொடுத்தாச்சு. ப்ளீச்சிங்க் பவுடர் என்னைக் கோவிச்சிருக்கார். என்ன இப்படி மதுரையைச் சொல்லலாமானு? அவர் எந்தக் காலத்து மதுரையைச் சொல்றார்னு தெரியலை! மீண்டும் வரேன். கொஞ்சம் சக்தியைத் திரட்டிக் கொண்டு. அதுக்குள்ளே இது ஒரு அவசர மொக்கை. மொக்கைக்குத் தானே ஆதரவு கொடுக்கிறாங்க. அதனால் ஒரு மொக்கை போட்டுட்டு, அப்புறம் ஆரம்பிக்கலாம்னு!
Tuesday, November 11, 2008
மீண்டும் உயிர்த்தெழுந்த மதுரைப் பதிவுகள்!
Posted by Geetha Sambasivam at 11/11/2008 03:33:00 PM
Labels: கீதா சாம்பசிவம்
Subscribe to:
Post Comments (Atom)
10 Comments:
மதுரைக்கு போகதடி...
\\
அதுக்குள்ளே இது ஒரு அவசர மொக்கை.
\\
மொக்கைப்பதிவு உடல் நலத்துக்கு கேடு...;)
\\
மொக்கைக்குத் தானே ஆதரவு கொடுக்கிறாங்க
\\
யார் சொன்னது...!
\\
அதனால் ஒரு மொக்கை போட்டுட்டு, அப்புறம் ஆரம்பிக்கலாம்னு
\\
அப்ப இன்னும் ஆரம்பிக்கலையா...;)
நல்லாருங்க ராசா...:)
மொக்கைக்கு என்றும் உண்டு நம் ஆதரவு!!
ஆஹா... இவ்வளவு பெரிய புலம்பலா??? :)
சீக்கிரமே நம்ம டொமனை திரும்ப வாங்கிருவோம்... :)
வாங்க கறுப்பி தமிழரே, நானும் அதைத் தான் சொல்லிட்டு இருக்கேன், யார் கேட்கிறாங்க??
மொக்கை போட்டால் தான் நாம் ஃபார்மிலே இருக்கோம்னு சிஷ்ய கேடிங்களுக்குப் புரியும், இல்லைனா என்னவோ, ஏதோனு நினைப்பாங்க! :P
அட, நீங்க மொக்கை வேண்டாம்னால் ஆச்சா?? கீழே பாருங்க, கொத்தனார் முன்னாலே வந்து நிக்கிறார், மொக்கைக்கே எங்கள் ஆதரவுனு கொடி தூக்கிட்டு!
எங்கே ஆரம்பிச்சிருக்கேன், அப்புறம் ஒரு விஷயம்ல!!! நல்லாருங்க ராசா, இல்லை, ராசாத்தினு வந்திருக்கணும், இல்லை ராணி, அல்லது தலைவி எப்படி வேணாலும் வச்சுக்கலாம்.
வாங்க கொத்து, மூக்கிலே வேர்க்குமே, மொக்கைனா! வந்துடுவீங்க உடனேயே! :P:P
வாங்க ராயல், என்ன எல்லாம் சரியா இருக்கானு பார்க்க வந்தீங்களாக்கும்?? சரியா இல்லைனா ஒரு மெயிலைத் தட்டச்சக் கூடாது? அநியாயமா டாடா இண்டிகாம் காரங்களைத் திட்டினேன்! :)))))))
ரொம்ப நாளுக்கப்புறம் இன்னிக்குதான் இந்த வலைப்பூவே திறந்து பார்க்க முடிகிறது..என்ன தொழில்நுட்பக் கோளாறோ என்னமோ..
//"என்ன உங்க ஊரு இப்படி இருக்கு? ஒரே கூட்டம்?//
என்னதான் நம்ம சலிச்சுக்கிட்டாலும் ஊர் மேலே மதுரைக்காரங்களுக்கு இருக்க பாசமே தனி..அதான் இப்படிக் கேள்வி கேப்பாங்க..நாம ஊர் மேலே நாம் எவ்வளவு பாசம் வச்சுருக்கோம்னு எல்லாத்துக்கும் தெரியும்...
Post a Comment