Wednesday, April 15, 2009

மதுரை அரசாளும் மீனாக்ஷி!

இப்போது கோபுர தரிசனம், பாப விமோசனம், என்ற வகையில் கோபுரங்கள் பற்றி ஒரு சிறிய அறிமுகம் பார்ப்போமா? கிழக்கு கோபுரமும், மேற்கு கோபுரமும் சரியாக நேரே அமைந்துள்ளன. கீழக்கோபுரத்தின் நடுவிலே இருந்து, மேலக் கோபுரத்திற்கு ஒரு கோடு கிழித்தால் சொக்கா, உன் தலைவழியாக இல்லை போகும்?? ஆம், சிவலிங்க ஸ்வரூபத்தின் உச்சி வழியாகவே செல்லும். வடக்கு, தெற்குகோபுரங்களோ, ஸ்வாமி சந்நிதியைச் சமமாய்ப் பகிர்ந்து கொண்டு செல்லும். சிற்பக் கலைஞர்கள், ஸ்தபதிகள் அந்தக் காலத்தில் எவ்வளவு திறமையோடும், கணக்கோடும் வேலை செய்திருக்கின்றனர் என்பதை வெளிக்காட்டும் இந்த அமைப்பு. \

 

கோபுரங்களை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போமா? மொத்தம் நான்கு ராஜ கோபுரங்கள் உள்ளன. இவை தவிர உள்ளே உள்ள வெளிப்பிரஹாரத்தில் இவை ஆடி வீதி என அழைக்கப் படும். இந்த ஆடிவீதியிலும் ஆறு கோபுரங்கள் உள்ளன. இவற்றில் கிழக்கே உள்ள ராஜ கோபுரம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கி.பி. 1216-ம் ஆண்டு ஆரம்பித்து 1238-ம் ஆண்டு கட்டி முடிக்கப் பட்டது. சுதை சிற்பங்கள் 1011 இருப்பதாயும்,  அவற்றில் திருவிளையாடல் புராணக் கதைகளும், பெரியபுராணக் கதைகளும் அமைந்துள்ளதாயும் சொல்லப் படுகின்றது. (நான் பார்க்கலைங்கோ!) கோபுரத்தின் உயரம் 153 அடியாகும். கலசங்களின் உயரம் 8 அடியாகும். ஒவ்வொரு கோபுரத்திலும் ஒன்பது நிலைகளும், ஒன்பது கலசங்களும் உள்ளன.

 

அடுத்து மேலக் கோபுரம். உள்ளே நுழையும்போதே காற்று அருமையாக வீசும். இத்தகையதொரு அற்புதக் காற்றை எங்கேயும் காண முடியாது. இந்தக் கோபுரமும் பாண்டியன் கட்டியதே. ஆனால் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கட்டினான். கி.பி. 1315-ம் ஆண்டு ஆரம்பித்து `1347-ம் ஆண்டு முடிந்திருக்கிறது.  இதில் 1124 சுதைகள் இருப்பதாயும் 154.6 அடி உயரம் எனவும் சொல்லப் படுகின்றது. இதிலும் திருவிளையாடல் பெரியபுராணம் தவிர, தசாவதாரச் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளதாய்ச் சொல்லப் படுகின்றது.

வடக்குக் கோபுரம். இதைப் பல வருடங்கள் வரைக்கும் மொட்டைக் கோபுரம் என்றே சொல்லுவார்கள். இந்தக் கோபுரத்தின் நுழை வாயில் அருகே ஒரு காவல் தெய்வம் முறுக்கிய மீசையுடன் இருக்கின்றார். அவரை மொட்டைக் கோபுரத்தான் என்றே அழைப்பதுண்டு. முன்பெல்லாம் இந்தக் கோபுரத்தின் வழியே துணை இல்லாமல் போக விட மாட்டார்கள். இப்போது அனைவரும் செல்கின்றனர். கிருஷ்ண வீரப்ப நாயக்கர் என்பவரால் கி.பி.1564-ல் கட்ட ஆரம்பித்த இது கட்டி முடிக்கப் படாமல் பல வருடங்கள் பாதியிலே நின்றிருக்கின்றது. இதனால் மொட்டைக் கோபுரம் என அழைக்கப் பட்டிருக்கலாம். பின்னர் அபிஷேஹ பண்டாரத்தாரும், நகரத்தார் சமூகத்தினரின் உதவியோடு கட்டி முடிக்கப் பட்டதாய்த் தெரிய வருகின்றது. 152 அடி உய்ரம் கொண்ட இந்தக் கோபுரத்தில் 404 சுதைகளே உள்ளனவாம். கலசங்கள் எட்டு அடி உயரம்.

 

அடுத்து கடைசியாகத் தெற்கு கோபுரம். இதுதான் அனைத்து கோபுரங்கலிலும் மிகவும் உயரமானது ஆகும். 160.9 அடி உய்ரம் கொண்ட இந்தக் கோபுர கலசங்களின் உயரமும் அதிகம். 9.9. அடியாகும் கலசங்கள் உயரம். சுதைகளும் அதிகம் கொண்டது. தூரத்தில் இருந்து பார்த்தாலே இது தான் தெற்கு கோபுரம் என அடையாளம் சொல்லிவிடலாம். அவ்வளவு சுதைச் சிற்பங்கள். மொத்தம் 1511 சிற்பங்கள். யாளி சிலை ஒன்றின் கண்களின் குறுக்களவு மட்டும் 2.5 அடி எனச் சொல்கின்றனர். பிரம்மாண்டமான சிலைகள் கொண்ட கோபுரம் இது. கந்த புராணம், தசாவதாரம், விஸ்வரூப சுப்ரமணியர், (எங்கேயும் பார்க்க முடியாது) சபரி, ஏகபாத மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவர், காளி நர்த்தனம் போன்ற சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன.

 

அடுத்து ஆடி வீதிக் கோபுரங்கள். பொற்றாமரைக் குளத்தின் பின்புறம் உள்ள சித்திரகோபுரம் என்றழைக்கப் படுவது கிழக்கு ஆடிவீதிக்கும், தெற்கு ஆடிவீதிக்கும் நடுவே உள்லது. கி.பி. 1570-ம் ஆண்டு காளத்திநாத முதலியார் என்பவரால் கட்டப் பட்டது. உய்ரம் 117 அடியாகும். ஏழு நிலை, ஏழு கலசங்கள், கலசங்களின் உயரம் ஆறே முக்கால் அடி. சுதைகள் 730 உள்ளன. இதை அம்மன் கோபுரம் என்றே அழைப்பார்கள். இங்கே 25 முகங்கள் கொண்ட சதாசிவம் சிலை மிகவும் அரிய ஒன்று. 

 

அம்மன் சந்நிதியின் நுழைவு கோபுரம் கிபி 1227-ல் வேம்பத்தூர் ஆனந்த தாண்டவ நம்பி என்பவரால் கட்டப் பட்டது. 3 நிலைகள், 40.6 அடி உயரம் ஐந்து கலசங்கள், கலசங்கள் உயரம் 4 அடி.

 

மேல ஆடிவீதியில் அம்மன் சந்நதிக்கு நேர்பென்னே உள்ள கோபுரம் கடக கோபுரம் என்றழைக்கப் படும். 1570-ம் ஆண்டு வீரதும்மாசி என்பவர் கட்டினார். ஆனால் இந்தக் கோபுரம் திறந்தே பார்க்க முடியாது. உயரம் 64.6 அடி, ஐந்து நிலை, ஐந்து கலசங்கள் 228 சுதைகள், கலசங்கள் உயரம் 5 அடியாகும்.

 

நடு கோபுரம் முக்குறுணி விநாயகர் சந்நிதியில் உள்ளது  நடைபாதையில் உள்ளதால் நடுக்கட்டுக் கோபுரம் எனச் சொல்லப் படுகின்றது. கிபி 1559-ல் செவ்வந்தி மூர்த்தி செட்டியார் என்பவரால் கட்டப் பட்ட இது 69 அடி உயரமும், ஐந்து நிலை, ஐந்து கலசங்களுடனும் அமைந்துள்லது. 112 சுதைகள் உள்ளன. மேல ஆடி வீதியில் ஸ்வாமி சந்நிதிக்குப் பின்னர் உள்ள கோபுரம் கி.பி.1374-ல் மல்லப்பன் என்பவரால் கட்டப்பட்டது. 72 அடி உயரத்தில் ஐந்து நிலைகளுடனும், 5 அடி உயரம் கொண்ட ஐந்து கலசங்களுடனும் காணப்படும் இந்தக் கோபுரத்தில்  340 சுதைச் சிற்பங்கள் உள்ளன. அடுத்துச் சின்ன மொட்டைக் கோபுரம் என்று சொல்லப்படுவது வடக்கு கோபுரத்தின் பின்னால் வடக்கு ஆடி வீதியில்  கல்யாண சுந்தரர் சந்நிதிக்கு அருகே உள்ளது. 71 அடி உயரமுள்ள இந்தக் கோபுரம் கி.பி. 1560-ம் ஆண்டு செவ்வந்தி வெள்ளையப்பச் செட்டியாரால் கட்டப் பட்டது. ஐந்து நிலைகள், ஐந்து கலசங்கள் கலசங்களின் உயரம் 5 அடியாகும். அடுத்து சுந்தரேஸ்வரரின் கிரீடம் பாண்டிய மன்னன் ஒருவனால் அளிக்கப் பட்டது, என்ற தகவலையும் மீனாட்சியின் ஆபரணங்கள் பற்றியும், பார்க்கலாம். இந்தக் கோயில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் மூடப் பட்டும் இருந்தது. அது பற்றிய விபரங்களும் வரும் நாட்களில்.


இந்தப் பதிவையும் மெயில் மூலமே கொடுக்கிறேன். வருதானு பார்க்கணும். படங்கள் அதனால் சேர்க்கலை. அப்புறமாய்ப் பதிவிலே போய்ச் சேர்க்கணும். இனி வரும் பதிவுகள் படங்களோட மெயில் மூலமாய்க் கொடுத்துப் பார்க்கணும்.

5 Comments:

Geetha Sambasivam said...

போஸ்ட் வந்தாச்சு, ஆனால் படங்களைச்சேர்க்கமுடியலை. code words, :((((((( இதுக்கு ஒரு வழி கண்டுபிடிக்கணுமே!

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, கோபுரங்கள் எல்லாமே டெம்ப்ளேடில் இருக்கு, பார்த்துக்குங்கப்பா! :))))))))

சிவமுருகன் said...

கீதாம்மா!

இதை அப்படியே நானும் வலையேத்தனும்ன்னு தட்டி வச்சுருக்கேன் பார்த்தா நீங்க பதிச்சே விட்டுடீங்க இருந்தாலும் ரொம்ப நல்லா வந்துருக்கு.

ஏனைய பதிவுகளையும் இன்று தான் படிக்க முடிந்தது.

யாருக்காவது படம் பார்க்கனும்னா வாங்க

1

2

ஜோதிஜி said...

ஆனால் என்னை வளர்த்தவர்கள் நீங்கள்.

உங்களுக்கு.


வரவேற்பு பூங்கொத்து தேவியர் இல்லம் திருப்பூர். வளர்க நலமுடன்.


நட்புடன்


ஜோதி கணேசன். (ஜோதிஜி)


தேவியர் இல்லம். திருப்பூர்.

http://deviyar-illam.blogspot.com/

Avargal Unmaigal said...

மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றிய அருமையான தகவல் வலைத்தலம். நான் யூனிவர்சிட்டி பேராசிரியாராக இருந்தால் உங்கள் முயற்சிக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுத்து இருப்பேன். இந்த நேரம் நீங்கள் டாக்டர் சீனா ஆகி இருப்பீர்கள், ஆனால் எனக்கு அந்த தகுதியில்லை. வருத்த பாடாதிர்கள். இங்கே உள்ள ஒபாமாவிடம் சொல்லி ஏதாவது பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். ஓகேவா நண்பரே?