Saturday, April 25, 2009

மதுரை அரசாளும் மீனாக்ஷி!


வைகாசி மாசம் கோடை வசந்தத் திருவிழா. திருவாதிரை நக்ஷத்திரத்திலே இருந்து பத்து நாட்கள் எண்ணெய்க்காப்பு நடக்கும்.

ஆனி மாசம் மகம் நக்ஷத்திரத்திலே இருந்து ஊஞ்சல் உற்சவம். தினம் சாயங்காலம் மாலை ஆறு மணியிலே இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நூறுகால் மண்டபத்திலே ஒரே ஊஞ்சலில் தன் அருமைக் கணவரான சுந்தரேஸ்வரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சல் ஆட, கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள், மாணிக்க வாசகரின் பொன்னூசல் பாடல்களைப் பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

ஆடி மாதத்திலே ஆயில்ய நக்ஷத்திரம் பத்து நாளைக்கும் முளைக்கொட்டு உற்சவம். கொடியேற்றம் மீனாக்ஷிக்கு மட்டுமே நடை பெறும்.

ஆவணிமாதம் மூலத் திருநாள், ஆவணி மூல உற்சவம் என்றே பெயர் பெற்றது. நான்கு ஆவணி வீதிகளிலும் அம்பாளும், சுந்தரேஸ்வரரும் வீதி உலா வருவார்கள். வளையல் திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல், நரியைப் பரியாக்கியது , விறகு விற்றல் போன்ற திருவிளையாடல்கள் நடைபெறும். மூல நக்ஷத்திரத்தன்று சுந்தரேஸ்வரருக்குப் பட்டாபிஷேஹம் நடைபெறும்.

புரட்டாசி மாதத்தில் எல்லா ஊரிலேயும் நடக்கிற மாதிரி நவராத்திரி கொலு. ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலங்காரத்தில் மீனாக்ஷி ஜொலி ஜொலிப்பாள். கொலு மண்டபத்தின் அழகையும், அலங்காரத்தையும் அந்த நாட்களிலேயே வர்ணிக்க இயலாது.

ஐப்பசி மாசம் பிரதமையிலே இருந்து சஷ்டி வரையிலும் கோலாட்ட உற்சவம். புது மண்டபத்திலே அம்மன் அன்று கொலுவிருந்து, மதுரை இளம்பெண்கள் கூடி இருந்து கோலாட்டம் ஆட, உற்சவம் காணுவாள். இப்போ நடக்குதா|?? தெரியலையே!

கார்த்திகை மாசம் பத்துநாட்கள் தீப உற்சவம். கார்த்திகை தீபத்தன்னிக்கு அம்மன் சந்நதியிலும், சுந்தரேஸ்வரர் சந்நதியிலும் சொக்கப் பனை கொளுத்துவார்கள்.

மார்கழி. தனுர் மாத வழக்கப் படி காலையில் சீக்கிரமே நடை திறந்து விடும். இரவு ஒன்பது மணிக்கெல்லாம் அர்த்த ஜாமம் முடிந்து விடுகின்றது. முன்பெல்லாம் பத்து மணி வரை இருந்தது. தினமும் வெள்ளியம்பல நடராஜர் சந்நதியில் மாணிக்க வாசகர் முன்பாக கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிப்போற்றுவார்கள். அதிகாலை ஐந்தரை மணியில் இருந்தே இது நடக்கும். இதில் பத்து நாட்கள் எண்ணெய்க்காப்பு நடக்கும். இந்தப் பத்து நாட்களும் சுவாமியும், அம்பாளும் புறப்பாடு கிடையாது. மாணிக்கவாசகர் மட்டுமே புறப்பாடு காணுவார். பதினோராம் நாள் ரிஷபாரூடராய் அம்பாளோடு சுவாமி ஆடி வீதியில் வலம் வருவார்.

தை மாதம். தெப்பத் திருநாள் நடக்கும். வண்டியூரில் திருமலை நாயக்கரால் தோண்டப் பட்ட தெப்பக் குளத்தில் வசந்த மண்டபத்தில் தெப்பம் கட்டி சுவாமியையும், அம்பாளையும் அதில் எழுந்தருளப் பண்ணித் தெப்போற்சவம் நடைபெறும். விளக்குகளாலும், பல்வேறுவிதமான அலங்காரங்களாலும் அலங்கரிக்கப் பட்டு மொத்த மதுரையுமே வண்டியூரில் இருக்கும்.

அடுத்து மாசி, பங்குனி இரண்டு மாசத்துக்கும் சேர்த்து நடக்கும் மண்டல உற்சவம். இது அநேகமாய்க் கோயிலோடு நெருங்கிய தொடர்பு உள்ளவர்களுக்கே தெரிந்த ஒன்று. நாற்பத்தி எட்டு நாட்கள் நடக்கும் இந்த உற்சவம் கொஞ்சம் பெரியது என்றே சொல்ல வேண்டும்.

அடுத்துப் பங்குனி உத்திரம், சாரதா நவராத்திரி இரண்டும் சேர்ந்து வரும் திருவிழா. பங்குனி மாசக்கார்த்திகை நக்ஷத்திரத்துலே இருந்து உத்திரம் வரைக்கும் அம்பாளும், சுவாமியும் வெள்ளியம்பலத்திலே அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். சுவாதி நட்சத்திரத்தன்று இருவரும் மகனின் திருமணக் கோலம் காண திருப்பரங்குன்றம் செல்வார்கள். மகனின் திருக்கல்யாணத்தை நடத்தி வச்சுட்டு இரவுக்கிரவே இருப்பிடம் வந்துவிடுவார்கள் இருவரும்.

எல்லாத்தையும் விட முக்கியமான ஒன்று என்னவென்றால், அம்மையின் அர்ச்சனைகளும், ஐயனின் அர்ச்சனைகளும் தூய தமிழிலேயே சொல்லப் படுகின்றன, இவை எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே நான் காண்கின்றேன். என் அப்பாவும் பெருமையாய்ச் சொல்லுவார். அப்பா, பெரியப்பா எல்லாரும் கோடி அர்ச்சனைக் கமிட்டியில் உறுப்பினர்களாய் இருந்தவர்களே. ஆகையால் மதுரையில் தமிழில் அர்ச்சனையும் உண்டு. அந்த அந்தக் காலத்துக்கு ஏற்ப திருவெம்பாவை, தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் போன்றவையும் பாடப் பட்டு வருகின்றது. ஆடி வீதிகளில் தமிழ் கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் எடுக்கின்றனர். திருப்புகழ் சங்கமும், திருக்குறள் மண்டபமும் உள்ளன. இவற்றில் திருப்புகழ் பற்றிய வகுப்புகளும், திருக்குறள் பற்றிய வகுப்புகளும் எடுக்கப் பட்டு வந்தன. மாணவ, மாணவிகளுக்கு இவற்றைப் பயிற்றுவித்து சிறப்பாய்ச் சொல்லுவோர்க்குத் திருமுருக கிருபானந்த வாரியார், ஹரிதாஸ் ஸ்வாமிகள் போன்ற பல்வேறு பெரியோர்களின் கையினாலும் ஆன்றோர்களின் கையினாலும் பரிசுகளும் வழங்கப் பட்டு வந்தன.

37 Comments:

Anonymous said...

Are you sure Madurai is still ruled by Meenakshi. Last week I had been to Madurai temple. Inside the temple many areas are as dirty as madurai streets which is ruled by a rogue (every madurai citizen know who it is)

நானானி said...

மீனாட்சி கோயிலில் ஒரு முறை கோலு பாத்திருக்கிறேன். அன்று பெருமான் பிட்டுக்கு மண் சுமந்த காட்சியை வைத்திருந்தார்கள்.
போன இம்மாதம் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு போனதை பதிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். பாத்துவிட்டு கமெண்டவும்.

Geetha Sambasivam said...

http://marudhai.blogspot.com/2008/12/blog-post_20.html

I know! What to do??? see my post about this. Whole Tamilnadu is sufferring like anything and all the temples, especially. Now-a-days temples are becoming commercial complex. :((((((((((( I am remembering the Madurai between 60 to 70 only. not this Madurai. It is only in the name. Meenakshi also went from Madurai, and I believe in it. She is not in Madurai now. :((((((((

Geetha Sambasivam said...

நானானி, இதோ வந்தாச்சு, உங்க பதிவுக்கு, யானைக்குட்டியைத் தயார் செய்து வைக்கவும்.

supersubra said...

மதுரை காரர்கள் பெயர் வரிசையில் என் பெயர் காணுமே. நான் பிறந்தது மட்டும் தான் சென்னை வளர்ந்தது படித்தத்டு வேலைக்கு சேர்ந்தது எல்லாம் மதுரைதான். பின் பத்து வருடம் சென்னை கடந்த பன்னிரண்டு வருடங்களாக கோயம்புத்தூர். நீங்கள் குடியிருந்ததாக சொன்ன பெரும்பாலான இடங்களில் தானப்பா முதலி தெரு , வடுக காவல் கூட தெரு, மேல ஆவணி மூல வீதி (கணபதி தட்டச்சு பயிலகம் எதிர்புறம்) என்று வாழ்ந்ததெல்லாம் ஒரு கனவு. மதுரையின் இன்றைய நிலையை பார்த்தபின் நான் கோயம்புத்தூர் காரனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.

Geetha Sambasivam said...

வாங்க சூப்பர் சுப்ரா, வரவுக்கு நன்றி, முதல்வரவு இந்த மதுரை மாநகரம் வலைப்பக்கத்துக்கு ஒரு மதுரைக்காரரா வந்திருக்கீங்க. தலைவினு பேரு தான் எனக்கு. எல்லா அதிகாரமும் ராயலார் கையிலே, அவர் கிட்டே விண் அப்பம் போட்டு வைக்கலாம்.

அப்புறம் மஹாகணபதி டைப் இன்ஸ்டிட்யூட் எதிரேயா வீடு??? ம்ம்ம்ம்?? எதிர் வரிசையில் தான் எங்க வீடும், அதாவது நாங்க குடி இருந்த வீடு இருந்தது. எதிரே எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர், எங்கப்பா அவரை கோத்திரம் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். ஒரே பையர் அவருக்கு. நீண்ட திண்ணை வாசலில், தாழ்ந்த வாயிற்படி, வடக்கே குழாய், 12-ம் நம்பர் வீடு, அதுக்கு அடுத்து பரமக்குடி மாமா வீடு, சுப்பிரமணியன் தான் அவர் பேரும், எனக்கு மாமா முறை வேண்டும், தனலக்ஷ்மி புத்தகக்கடை, பின்னால் ஜவுளிக்கடைனு மாறியது, வெங்கட குப்பையர் கடையை நடத்தியது. கடையிலேயே என்னோட அப்பா உட்கார்ந்திருப்பார் இரவு பத்து மணி வரைக்கும்.பத்தாம் நம்பர் கோடவுன், ஒன்பதாம் நம்பர் ஐயா மாமா என்பவர் வீடு, எட்டாம் நம்பர் பாரி அண்டு கம்பனி, ஏழாம் நம்பர் நாங்க இருந்த வீடு, எதிரே சித்ராலயா ஃபிலிம்ஸ் கம்பெனி. :))))))))))))))))) அப்போதைய மேலாவணி மூல வீதி இது தான். ஒன்றாம் நம்பர் ஜி.எஸ். மணி வீடு, இப்போ கச்சேரிகளில் பிரபலம்.

பாச மலர் / Paasa Malar said...

//சுவாதி நட்சத்திரத்தன்று இருவரும் மகனின் திருமணக் கோலம் காண திருப்பரங்குன்றம் செல்வார்கள். மகனின் திருக்கல்யாணத்தை நடத்தி வச்சுட்டு இரவுக்கிரவே இருப்பிடம் வந்துவிடுவார்கள் இருவரும்.//

மிகவும் அழகான காட்சி..

Muniappan Pakkangal said...

Madurai Meenakshi anga illaiyaa ? Eppadi ? I am also at Madurai & native of Madurai Dt also.

Geetha Sambasivam said...

வாங்க முனியப்பன்,
வெறும் விக்ரஹத்தை மீனாக்ஷினு சொல்லணும்னா மீனாக்ஷி இருக்கா அங்கே. ஆனால் உண்மையில் மீனாக்ஷி அங்கே இல்லை. :((((((

Muniappan Pakkangal said...

Unmaiyil Meenakshi ange illaiyendral enna nadanthuchu ?

ஜீவி said...

மதுரை மாநகரைப் பற்றி 'ஆலவாய்' என்கிற பெயரில் எழுத்தாளர் நரசய்யா அவர்கள் அருமையான நூலொன்றை சமீபத்தில் எழுதியிருக்கிறார். நூலை விமரிசித்து, திருவாளர்கள் வெங்கட் சாமிநாதனும், இந்திரா பார்த்தசாரதியும் எழுதிய விமரிசனங்களைப் படித்தேன்.
புத்தகம் மதுரைமாநகரப் பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இது தங்கள் தகவலுக்காக.

Geetha Sambasivam said...

வாங்க இன்போ, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

Geetha Sambasivam said...

வாங்க ஜீவி சார், நரசையா அவர்களின் இந்தப் புத்தகம் பற்றி மின் தமிழ்க் குழுமம் மூலம் அறிந்திருக்கிறேன். இன்னும் படிக்கலை. பார்க்கலாம் கிடைக்கிறதானு! ரொம்ப நன்றி தகவலுக்கு. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

குறும்பன் said...

இடுகைக்கு தொடர்பில்லாத மறுமொழி ஆனால் இப்பதிவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொடர்புடைய கேள்வி.
மதுர தமிளு அப்படின்னா என்னண்ணேன்னு நான் இங்க கேட்டதுக்கு இராமு தம்பி சுசுபி காசா பணமா எழுதிட்டா போவுதுன்னு போன வருசம் சொல்லிச்சு. இன்னும் ஒன்னத்தையும் காணோம். மதுரயின் மத்த தருமவான்களாவது மதுர தமிளுன்னா என்னான்னு சொன்னா புண்ணியமா போவும்.

Thenammai Lakshmanan said...

நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்

மதுரை பற்றிய விவரங்கள் அருமை

ஆ! இதழ்கள் said...

நான் மதுரைக்காரன், இப்பொழுது வேலை விஷயமாக வெளிநாட்டில், ஏன் இத்தனை பேர் எழுதுவதற்கு இருந்தும் இவ்வளவு நாட்கள் ஒன்றும் காணோம்.

Geetha Sambasivam said...

லிஸ்டைப் பார்த்தால் என் பேரிலே தான் நிறைய இருக்கும், நானே எத்தனை பதிவு போடறது? மத்தவங்களும் போடட்டுமேனு தான். :D

Anonymous said...

nanum madurai thangooo

Anonymous said...

nanum madurai thangooo

Anonymous said...

nanum madurai than.....

Anonymous said...

i also madurai

hayyram said...

மீனாட்சி கோவிலின் அழகே அழகு

regards
ram

www.hayyram.blogspot.com

வம்பன் said...

தான்க்ஸ் டூட்,ஹாட்ஸ் ஆஃப் டு யூ.
ஐ நெவர் பீன் தேர்,வில் யு கிவ் உவர் அட்ரெஸ் டு கைட் மி ஃபார் யெ விசிட்,தட்ஸ் க்ரேட் மேன்.

பா.ராஜாராம் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சீனா அய்யா!

நெருக்கமான மதுரை பதிவு.

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமையான பதிவு . பகிர்வுக்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

நானும் மதுரைதான் . பகிர்வுக்கு நன்றி !

Geetha Sambasivam said...

பதிவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் அனைவருக்கும், நன்றி.

மதுரைக்காரர்களான பனித்துளி சங்கருக்கும், மஹாவுக்கும் நல்வரவு.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

சிறியவன் said...

திருப்புகழ் மண்டபம் இடிக்கப்பட்டது என்று படித்ததாக ஞாபகம், சரிதானா?

அழகர் பட்டாணி said...

Thanks Mr.chenna

VELAN said...

வணக்கம். நண்பர் சீனா அவர்களே. எனது வலைப்பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. தங்கள் அன்பையும் நட்பையும் என்றும் விரும்பி வேண்டுகிறேன். தங்களை பற்றிய மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி. கடவுளின் ஆசி என்றும் உங்களோடு தங்கட்டும்.

வணக்கங்களுடன்

வேலன்.

Guruji said...

குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com

thiyaa said...

மிகவும் அருமை

erodethangadurai said...

நல்ல கருத்துக்கள் .. வாழ்த்துக்கள் ...! அப்புறம் .. ஜெயா டிவி - ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் .. கொஞ்சம் வந்து பாருங்கள்... ! http://erodethangadurai.blogspot.com/

erodethangadurai said...

நல்ல கருத்துக்கள் .. வாழ்த்துக்கள் ...! அப்புறம் .. ஜெயா டிவி - ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் .. கொஞ்சம் வந்து பாருங்கள்... ! http://erodethangadurai.blogspot.com/

Vijiskitchencreations said...

நல்ல பதிவு. எனக்கு மதுரை என்றால் ரொம்ப பிடிக்கும் நல்ல ஊர். நல்ல கண்ணுக்கு பார்க்க நல்ல் அழகான கோபுரங்களும் அதன் கலைபாடுகளும் நிறைந்தது.
என் பெரியம்மா திருபங்குன்றம் பக்கம் பைகாராவில் இருக்காங்க. வந்திருக்க்கேன்.


www.vijisvegkitchen.blogspot.com
www.vijiscreation.blogspot.com

வார்த்தை said...

if possible consider to add the following link to your post so that visitors can get 360 degrees virtual tour of the temple
http://www.view360.in/virtualtour/madurai/