Wednesday, April 8, 2009

அன்னையின் கிளியும், பிரியாவிடையும்! மதுரை அரசாளும் மீனாட்சி!

இது பழைய நாயக்கர் காலச் சித்திரங்களில் ஒன்று. கூகிளாரைக் கேட்டதில் கொஞ்சம் கஷ்டப் பட்டே கிடைத்தது. இப்போ மதுரை மீனாட்சி கோயிலைப் பத்தின சில முக்கிய தகவல்கள் இங்கே கொடுக்கப் போறேன். யாருப்பா அது? புதிரா, புனிதமாவுக்கு பதில் எழுதறது? அவங்களுக்கு இங்கே சில டிப்ஸ் கிடைக்குமே. அந்த சாக்கிலேயாவது வாங்க. :))))))))) அம்மன் கையிலே ஏன் கிளி இருக்குனு கேஆரெஸ் கேட்டிருக்கார் இல்லையா? நாம் நம்மோட குறைகளை அம்மனிடம் சொல்லும்போது, அந்தக் கிளிதான் கேட்டுட்டு அதை அம்மனிடம் சொல்வதாகவும், அம்மன் நம் குறைகளைத் தீர்க்க அது உதவுவதாகவும் ஐதீகம். மேலும் ஐயன் பிரம்மதத்துவத்தைக் கைலை மலைக் குகையில் தனித்திருந்து அம்மைக்கு உபதேசித்தபோது ஒளிந்திருந்து அதைக் கேட்ட கிளிக்குஞ்சு தான் பின்னால் சுகர் ஆகப் பிறந்தார் என்பதும் தெரியும் தானே? அந்தக் கிளியாகவும் இருக்கலாம். அன்னைக்குத் திருமணப்பரிசாய் ஐயன் திருக்கயிலையில் இருந்து எடுத்து வந்து கொடுத்திருக்கலாம். (இது என்னோட கற்பனை மட்டுமே) பொதுவாய்ச் சொல்லப் படுவது கிளி மூலம் நம் குறைகள் தீர்க்கப் படும். கிளி சொன்னதைத்திரும்பச் சொல்லுமல்லவா? ஆகவே அன்னையிடம் நம் முறையீடுகள் கிளி மூலம் கேட்கப் படுகின்றது.

அடுத்து இப்போ ஸ்வாமி சந்நதிக்குப் போனவங்க எல்லாரும் சுந்தரேஸ்வரரை மட்டுமே பார்த்திருப்பீங்க இல்லையா? ஆனால் அங்கே உள்ளேயும் ஒரு அம்மன் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மதுரைக்காரங்க எல்லாம் வாங்கப்பா, வந்து சொல்லுங்க, உங்களுக்குத் தெரியுமானு! ஹிஹிஹி, நானும் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கேன், ஆனால் கருவறையில் இல்லை. 62-63 கும்பாபிஷேஹம் சமயம். அவ்வளவாய் நினைவிலும் இல்லை. ஆனால் அம்மனைப் பார்த்த நினைவும், பிரியாவிடை இவள் என்று சொன்ன நினைவும் இருக்கு. உற்சவரோடும் பிரியாவிடை வருவாள் ஆதலால், அதைப் பற்றிய ஐதீகத்தை அப்போது கேட்டு அறியவில்லை. இப்போது நண்பர் ஒருவர் மூலம் அது கிடைத்தது. உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் ஆனதுமே அம்பிகை தன் ஆட்சியைக் கணவனிடம் கொடுத்துவிடுகின்றாள் அல்லவா? அப்போது அவள் ஐயனுடனேயே ஐக்கியம் ஆகிவிடுகின்றாள் என்றே சொல்கின்றனர். சிவனோடு ஐக்கியமான சக்தி சிவசக்தி சிவத்தை விட்டுப் பிரிவது எங்கனம்? ஆகவே அங்கே சுந்தரேஸ்வரரோடு அவளும் இருக்கின்றாள் கருவறையிலேயே.
ஆனால் அர்ச்சகர்கள் மட்டுமே காணமுடியுமாறு பிரதிஷ்டையின் அமைப்பு உள்ளது. சக்தியானது வெளியே தெரியாது. ஒருத்தரிடம் இருந்த சக்தி வெளிப்படும்போதே நாம் அறிகின்றோம் அல்லவா? ஆஹா, இவர் கிட்டே இத்தனை சக்தியா என்று? அவ்வாறே சிவனிடம் உள்ள சக்தி மறைந்தே இருப்பதால் நம்மால் காணமுடியாதபடிக்குப் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். மனோன்மணி என்னும் பெயருடைய இவள் மறைப்பு சக்தியாக இருப்பதால் நாம் இவளைக் காணமுடியாது. ஆனால் இப்போது கும்பாபிஷேஹத்திற்காக வெளியே வந்திருப்பாள். வந்திருக்கின்றாள் எனவும் நண்பர் தகவல் அனுப்பி இருக்கின்றார். யாகசாலையில் பூஜையில் இவளை வைத்திருக்கின்றனர்.

இவளைக் கும்பாபிஷேஹத்தின்போது நடக்கும் யாகசாலை பூஜைகளிலேயே காணமுடியும். மற்ற நாட்களில் மீண்டும் மறைவிடம் சென்றுவிடுவாள். காணமுடியாது. இப்போது வந்து பூஜைகளில் இடம்பெற்ற இவள் மீண்டும் வெளியே வருவது அடுத்த கும்பாபிஷேஹத்தின்போது மட்டுமே. உற்சவரோடு வருபவள் உற்சவப் பிரியாவிடை. அவளை நாம் சாதாரணமாய் எல்லா உற்சவங்களிலும் காணமுடியும். சிவத்தை விட்டு சக்தி பிரியாதவள் என்பதாலேயே எப்போதுமே சிவனுக்கு அருகிலே சக்தியைப் பிரியாவிடை உருவில் தரிசிக்கின்றோம். மெயிலிலே வந்த இவளை உங்களோட பகிர்ந்துகொள்ளுவதற்குள் கொஞ்சம் கஷ்டமாய்ப் போச்சு. Your brouser may not support அப்படினே செய்தி கொடுத்துட்டு இருந்தது. ஒருவழியாப் போட்டிருக்கேன். பப்ளிஷ் கொடுத்ததும் தான் தெரியும் வண்டவாளம், தண்டவாளத்தில் ஏறாமல் இருக்கானு.


பிரியாவிடை படம் உதவி, மற்றும் யாகசாலைக் குறிப்பு உதவி: நன்றி திரு அனந்தபத்மநாபன் அவர்களுக்கு.

6 Comments:

Geetha Sambasivam said...

மீனாட்சி அருளால் படம் வலையேறிவிட்டது. மீனாட்சிக்கு நன்றி.

ச.பிரேம்குமார் said...

மீனாட்சி தாள் போற்றி

Ungalranga said...

கேட்டதா சொல்லுங்க.

யார?

அம்மன் மீனாட்சியதான்.

இங்கயும் ஒரு பிள்ளை இருக்கான்னு ஞாபகப்படுத்திடுங்க.

Geetha Sambasivam said...

நன்றி, ரங்கன், பிரேம்குமார், நிச்சயமா மீனாட்சி கேட்பாள்.

BadhriNath said...

piriyavidai amman, siva sakthiyaaga kaatchi kuduthirundhaal innum nandraaga irundhirukkum. kidaikkuma pugai padam ?

Geetha Sambasivam said...

வாங்க பத்ரிநாத், பிரியாவிடை அம்மன் படம் கிடைச்சதே ஒரு அதிசயம், நீங்க சிவசக்தியாக் கேட்கறீங்க??உள்ளே இருப்பாருங்க சிவம், இங்கே யாக சாலையிலே அவரை ஏதாவது குண்டத்திலே பிரதிஷ்டை செய்திருப்பாங்க. அம்மன் மட்டுமே வரா வெளியே! :)))))))