Thursday, September 13, 2012

கீழக்குயில்குடி - சமணர் படுகை


(மீள் இடுகை)
தொன்மங்களைப் பொறுத்த அறிவும் ,வரலாற்றைப் பற்றிய பெருமித உணர்வும் மக்களுக்குக் குறைந்து வருகிறது.ஒரு சமூகம் அல்லது நாகரிகம் பற்றிய சரியான முழுமையான அறிவு பெறுதல் என்பதைப் பற்றின அக்கறையும் அவ்வாறேஇவையெல்லாம் இருந்திருந்தால் பல்லாயிரம் காலத்துப் பழமையின் மேல் தன்னுடைய பெயரைக் கிறுக்கும் காலித்தனம் வராதுஇவற்றிற்கு காரணமாக நான் இன்றைய கல்வியையும்,ஆசிரியர்களையும்தான் சொல்லுவேன். இவ்வாறான வரலாற்றுப் பெருமைகள் அதிகம் இல்லாத நாடுகளில் நூறு அல்லது இருநூறு வருட விஷயங்களைக் கூட Antique என்று தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர். ஆனால் தொன்மங்களைப் பற்றிய அறிவும் அக்கறையும் இல்லாத நம் சமூகத்திற்கு இடையே எழுத்தாளர் திரு.முத்துக் கிருஷ்ணன் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டத் தகுந்தது.

மலையடிவாரத்திலிருக்கும் அய்யனார் கோவில்
பசுமை நடை என்ற பெயரில் இந்த முறை அவர் அழைத்துச் சென்றது கீழக்குயில்குடி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் படுகைகள் மற்றும் சிற்பங்கள் உள்ள சிறிய கிராமம்பழைய பெயர் உயிர்க்குடி. அங்கிருக்கும் அய்யனார் கோவிலின் பின்புத்தில் இருக்கிறது சமணர்களின் படுக்கை. உள்ளூர் மக்களால் செட்டிப் புடவு என்றழைக்கப் படுகிறது.காரணம் குகைக்கு வெளியில் உள்ள தீர்த்தங்கரரின் சிலையைப் செட்டியார் ன்று நினைப்பதால். வரலாற்றுத் தகவல்களை எங்களுக்குச் சொல்ல திரு அலோஷியஸ், திரு.சாந்தலிங்கம் (தொல்லியல் துறைமற்றும் திருமுத்தையா (நாட்டார் வழக்கு ஆய்வாளர்ஆகியோரும் உடனிருந்தனர்முதலில் பேசிய திரு.அலோஷியஸ் தொன்மங்களின் மதிப்புகள் பற்றிப் பேசினார். அடுத்துப் பேசிய திரு.சாந்தலிங்கம் அந்த இடத்தைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.கடைசியில் பேசிய திரு.முத்தையா அவர்கள் அந்த இடத்தைச் சார்ந்துள்ள வாய்மொழி வரலாற்றைப் பற்றிப் பேசினார்.

தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பம்

மேலே உள்ள படத்தில் உள்ளதுதான் செட்டிப் புடவு என்றழைக்கப்படும் சமணர் படுக்கை.குகையின் உள்ளே இருவர் தங்கக் கூடிய அளவுக்கு இடம்
,கசிந்து வரும் சுனை நீர்(திகம்பரர்கள் சுனை நீர் மட்டுமே அருந்துவார்களாம்) என கடும் கோடையில் கூட அவ்விடம் குளிர்ச்சியுடன் இருக்குமெனப் புரிந்தது.குகையின் மேற்புறத்தில் சில சிற்பங்கள் சமண வேதங்களின் நிகழ்ச்சிகளைக் குறிக்கும் வகையில் சில புடைப்புச் சிற்பங்கள். வெளியில் தீர்த்தங்கரரின் சிலை. 1200 வருடப் பழமையைப் பார்க்கையில் பிரமிப்பு அடங்குவதில்லை.வெளியிலும் உள்ளேயும் இருக்கும் கல்வெட்டுகள் தமிழ் வட்டெழுத்துகளில் உள்ளது. திருக்காட்டான் பள்ளியில் (அருப்புக்கோட்டை அருகில்) அமைந்திருந்த பள்ளியின் மாணவர்களும் ஸ்ரீவல்லபன் என்பவரும் சேர்ந்து அமைத்துக் கொடுத்த படுகை என்கிறது கல்வெட்டு.

குகையின் உள்ளேயிருக்கும் சிற்பங்கள்

உள்ளே காணப்படும் புடைப்புச் சிற்பங்களில் வரிசைக்கிரமமாக பத்மாவதி
,மூன்று தீர்த்தங்கரர்கள் மற்றும் அம்பிகாவின் சிற்பங்கள்.இதில் பத்மாவதியின் சிற்பம் சிங்கத்தின் மீதமர்ந்து எதிரில் உள்ள யானையின் மீதுள்ள அரக்கனுடன் போரிடுவது போல் வடிக்கப்பட்டுள்ளது.யானை என்பது ஆசீவகர்களுக்கான குறியீடாக இருக்கலாம் என்கிறார் திரு.சாந்தலிங்கம்.
பிறகு அங்கிருந்து கிளம்பி கோவிலுக்கு அடுத்து உள்ள குன்றில் ஏறினால் அங்கும் புடைப்புச் சிற்பங்களும் சுனையும். மீண்டும் கல்வெட்டுகள். அற்புதமான அனுபவம்.

மேலும் சில படங்கள்...திரு.சாந்தலிங்கம்

கோமதிநாதர் - தீர்த்தங்கரர்


5 Comments:

ஸ்ரீ.... said...

நமது அற்புதங்களை இணையத்தின் வாயிலாக அனைவருக்கும் சேர்த்திருக்கிறீர்கள். நன்றி.

ஸ்ரீ....

திண்டுக்கல் தனபாலன் said...

வரலாற்றுத் தகவல்களை தந்தமைக்கு நன்றி சார்...

தருமி said...

that's the spirit!! thanks

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நன்றி ஸ்ரீ,
நன்றி தனபாலன்,
நன்றி தருமி அய்யா.

சித்திரவீதிக்காரன் said...

சென்ற வாரம் மதுரை காமராசர் பல்கலைகழகத்திற்கு செல்லும் வேலை வந்தது. போகும் போதே சமணமலை பார்த்துக் கொண்டேயிருந்தது. வரும்போது டீ குடிக்கலாமென்று தோன்ற வண்டியை கீழ்குயில்குடிக்கு விட்டேன். அங்கு போய் கருப்பு கோயில்ல சாமியக் கும்பிட்டு ஒரு டீ வாங்கி மலையைப் பார்த்து குடிச்சுட்டு, மிச்சத்துக்கு தேன்மிட்டாய் வாங்கி தின்னுட்டு கிளம்பினேன். தங்கள் பதிவு அந்த ஞாபகங்களை கிளறியது. மேலும், முதன்முதலாக சென்ற அந்த பசுமைநடை நினைவுகளையும் ஞாபகமூட்டியது.